யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/10/15

‘தங்கப் பரிசு போட்டி பற்றி விளம்பரத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை’: தமிழக மக்களுக்கு மட்டும் தடை விதித்து மோசடி - அமேசான் நிறுவனம் மீது போலீஸில் புகார்

ஆன்லைன் சிறப்பு விற்பனைக்கான தங்கப் பரிசு போட்டியில் தமிழக மக்கள் மட்டும் பங்கேற்க முடியாது என அறிவித்துள்ள ‘அமேசான்’ நிறுவனம் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைப்பதாலும், வீட்டில் இருந்தபடியே தேவையானவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என்பதாலும் ஆன்லைன் வர்த்த கம் மீதானமோகம் மக்களிடம் அதிகரித்து வருகிறது. 

இதைப் பயன்படுத்தி, சிறப்புத் தள்ளுபடி விற்பனைகளை பல நிறுவனங் கள் அவ்வப்போது அறிவிக்கின்றன.அந்த வகையில், ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்’ என்ற சிறப்பு தள்ளுபடி விற்பனையை பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ‘அமேசான்’, சமீபத்தில் அறிவித்தது. இந்த திட்டத்தின் ஒரு அம்ச மாக, அமேசான் ஆன்லைன் அப்ளி கேஷனை பயன்படுத்தி ரூ.299-க்குமேல் பொருட்களை வாங்குபவர்களுக்கு தின மும் ஒரு கிலோ தங்கம் பரிசாக வழங்கும் போட்டி ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்தப் போட்டியில் தமிழகத் தில் வசிப்பவர்கள் பங்கேற்க முடியாது என்று அமேசான் அறிவித்துள் ளது. தங்கப் பரிசுப் போட்டி பற்றி விளம்பரத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இது தமிழகத்தில் இணையம் மூலம்பொருட் களை வாங்கும் பலரை அதிர்ச்சியடைய வைத்தது. இதனால் அமேசானுக்கு எதிராக சமூக வலைதளங் களில் கருத்துக்கள் பகிரப்பட்டன.இந்நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், கோவை மாநகர காவல் ஆணையரிடம் அமேசான் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ‘ஒரு கிலோ தங்கம் வெல்லலாம் என்று தமிழக நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்த அமேசான் நிறுவனம், தமிழ கத்தை சேர்ந்தவர்கள் அந்தப் போட்டியில் பங்கேற்க முடியாது என்று கூறி தமிழக மக்களை ஏமாற்றியுள்ளது. எனவே, அந்நிறுவனத்தின் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், ‘தங்கம் வெல்லலாம் என்ற ஆசையை தமிழக மக்களிடத்தில் தூண்டிவிட்டு தங்களது இணையதளத்தின் மூலம் பொருட்களை வாங்க வைத்து கடைசியாக உங்களுக்கு தங்கம் இல்லை என ஏமாற்றுகிற மோசடி வேலையை அமேசான் உள்நோக்கத்துடன் செய்துள் ளது. தமிழக மக்கள் போட்டியில் பங்கேற்க முடியாது என்றால், பிறகு எதற்காக தமிழகஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும் இத்தகைய நூதன மோசடியில் ஈடுபட்டுள்ள அமேசான் நிறுவனத்தின் மீது தமிழக அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள் ளார்.

அமேசானுக்கு தமிழ் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.இது தொடர்பாக அமேசான் நிறுவனத்தின் இந்திய செய்தித் தொடர்பாளர் மாதவி, ‘திஇந்து’விடம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் தங்க பரிசுத் திட்டம் போன்ற போட்டிகளை நடத்த முடியாது. மீறி நடத்தினால், அது தமிழக அரசின் பரிசுப் பொருட்கள் சலுகை தடைச் சட்டம் 1979-ன்படி குற்றமாகிவிடும். எனவேதான்தமிழகத்தில் தங்க பரிசுப் போட்டியை நடத்தவில்லை” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக