பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் காலிப் பணியிடங்களை மறைப்பதாக கூறி திங்கள்கிழமை ஆசிரியர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடமாறுதல் கலந்தாய்வு அக்., 26, 27 இல் நடைபெறுகிறது. இதில், மாவட்டத்திற்குள் இடமாறுதலில் செல்லும் கலந்தாய்வு திங்கள்கிழமை சிவகங்கை மருதுபாண்டியர் பள்ளியில் தொடங்கியது.
முதலில் சமூக அறிவியல் பாடத்திற்கு கலந்தாய்வு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் காலிப்பணியிட விபரம் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படவில்லை. இதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கலந்தாய்வில கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். பின்னர் கலந்தாயும் நடைபெற்ற அறைக்கு வெளியே கீழே அமர்ந்து கோஷமிட்டபடியே தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். அரைமணி நேர கால தாமதத்திற்கு பின்னர் காலி பணியிட விபரம் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. இதையடுத்து மீண்டும் கலந்தாய்வு தொடங்கியது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக