யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/11/15

பகுதிநேர ஆசிரியர்கள் கடந்து வந்த பாதை இதுவரை,,.

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனைகளில் ஒன்றான 16549 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. அரசாணை 177ன்படி SSA மூலம் அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 100 எண்ணிக்கைக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு வாரம் 3 அரைநாட்கள் என்ற ரீதியில் மாதம் 12 அரைநாட்கள் பணிபுரிய ஓவியம், உடற்கல்வி, கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, ஆங்கிலப்புலமை உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு பாடங்களை நடத்திட மார்ச் 2012ல் 16549 பகுதிநேர ஆசிரியர்களை ரூ.5000 தொகுப்பூதியத்தில் நியமித்தது. இ.சி.எஸ் முறையில் ஊதியம், பிடித்தம் இல்லாமல் முழு தொகுப்பூதியம் போன்ற அறிவுரைகளை அவ்வப்போது வழங்கி  மேலும் அரசாணை 186ன்படி தொகுப்பூதியமும் ரூ.2000 உயர்த்தப்பட்டு ஏப்ரல் 2014 முதல் ரூ.7000ஆக வழங்கப்படுகிறது. அரசாணை 177 தமிழில் வழங்கப்படாததால் மே மாதம் ஊதியம், ஒரு ஆசிரியர் நான்கு பள்ளிகளில் பணியாற்றும் வாய்ப்பு  போன்ற பணி சார்ந்த பிரச்சனைகள் இதுவரை தீர்வு காணமுடியவில்லை.

பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள்
1)      நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் 16549 பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.
2)      பணி நிரவலை கைவிட்டு பொது மாறுதல் நடத்தி அருகிலுள்ள பள்ளிகளில் பணிபுரியும் வாய்ப்பினை அனைவருக்கும் வழங்கிட வேண்டும்.
3)      பணியமர்த்தப்பட்ட மார்ச் 2012முதல் இதுவரை மே-2012,      மே-2013, மே-2014, மே-2015 ஆகிய 4 மாதங்களின் ஊதியம் வழங்கப்படாததால் அதனை  கணக்கிட்டு அனைவருக்கும் வழங்கிட வேண்டும்.
4)      பணியில் இருக்கும்போது மரணமடைந்தவர்களுக்கு அரசின் உதவிகளை அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிட வேண்டும்.
மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற உன்னத பாதையில் வலம் வரும் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு பரிந்துரை செய்திட வேண்டுகிறேன். கோரிக்கைகளுடன் சி.செந்தில்குமார்,9487257203, பகுதிநேர கணினி ஆசிரியர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக