ஒழுங்கற்ற பருவ நிலை, பூமி வெப்பமயமாதல் உள்ளிட்ட இயற்கை சார்ந்த பல்வேறு மாற்றங்கள் உலகிற்கு பெரும் சவாலாக மாறிவருகின்றன.இவற்றை சமாளிப்பதற்காக சர்வதேச அளவிலான மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் பருவ நிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் உள்ளிட்டவற்றால் மனித குலம் எதிர்கொள்ளும் பாதிப்புகள்என்ன என்பது குறித்து இப்போது பார்ப்போம்புவி வெப்ப மயமாதலால் கடுமையான வறட்சி பல பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் ஒரு நிகழ்வாக மாறும்.
இதனால் குடிநீர், உணவு பிரச்னைகள் ஏற்படும். குடிநீருக்காகவும் உணவுக்காகவும் மோதல்கள் அதிகரிக்கும். புவிவெப்பமயமாதலால் புயல்கள் உருவாவதும் அடிக்கடி ஏற்படும் நிகழ்வாக மாறும்.இந்த புயல்கள் அதிதீவிரமானதாக இருக்கும் என்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். கடுமையான புயல் மழையால் விவசாயம் பெரும் இழப்புகளை சந்திக்கும் என்பது சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளின் எச்சரிக்கையாக உள்ளது.இது தவிர வெப்பம் அதிகரித்து அது தொடர்பான நோய்களும் இறப்புகளும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
ஏற்கனவே அதீத வெப்ப அலைகளால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.நேரடியாக வெப்பத்தின் தாக்கம் தவிர தொற்று நோய்களும் பரவலாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.தொழிற்சாலைகள், வாகனங்கள் வெளியிடும் நச்சு வாயுக்களின் அளவை கட்டுப்படுத்த தவறினால் பூமிப்பந்தின் சராசரி வெப்ப நிலை 3 முதல் 10 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரும் விபரீதம் இந்த நூற்றாண்டு இறுதியில் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.வெப்ப மயமாதல் அதிகரிப்பால் துருவப் பகுதிகளில் உள்ள பனி உருகுவதாகவும் இதனால் கடல் நீர் மட்டம் கடுமையாக அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.கடந்த 100 ஆண்டுகளில் கடல் நீர் மட்டம் 4 முதல் 8 அங்குலம் அதிகரித்த நிலையில் அடுத்த 100 ஆண்டுகளில் இந்த உயர்வு 4 முதல் 36 அங்குலம் வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் சிறிய தீவுகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் வேறு இடங்களில் தஞ்சம் அடைய வேண்டி வரும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் தற்போதுள்ள உயிரினங்களில் நான்கில் ஒரு பகுதி இன்னும் 25 ஆண்டுகளில் இல்லாமல் போகும் ஆபத்து உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வறட்சி, வெயில், வெள்ளம், நீர் மட்டம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் கோடிக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து செல்லவேண்டி வரும் என்றும் கூறப்படுகிறது.பருவ நிலை மாற்ற பிரச்னைகளால் மட்டும் கடந்த 2 ஆயிரமாவது ஆண்டு ஒன்றரை லட்சம் பேர் மரணமடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக