யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/11/15

இன்று முதல் நான்கு நாட்களுக்கு கடலோர பகுதிகளில் கன மழை எச்சரிக்கை

சென்னை: 'அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்று அழுத்த தாழ்வால், தமிழகம், புதுச்சேரியில், இன்று முதல், நான்கு நாட்களுக்கு மீண்டும் கன மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் பெய்த மழை பாதிப்பில் இருந்து மீளாத நிலையில், மீண்டும் விடுக்கப்பட்டு உள்ள கன மழை எச்சரிக்கையால், பொதுமக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது.


வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றுஅழுத்த தாழ்வு மண்டலத்தால், நேற்றுடன் முடிந்த, ஒரு வாரத்தில், சென்னையில் மிக அதிகபட்சமாக, 44 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகத்தில், 25 மாவட்டங்களில் சராசரி மழையை விட கூடுதல் மழை பெய்தது.சென்னை, கடலுார் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. சென்னை, புறநகர் பகுதிகளில் தேங்கிய மழைநீர் நேற்று வரை வடிந்து வருகிறது. இந்நிலையில், அரபிக் கடலில் லட்சத் தீவு அருகே, புதிதாக காற்று அழுத்த தாழ்வு உருவாகி உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர் மழை:

இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:வங்கக் கடலில் உருவான காற்று மேலடுக்கு சுழற்சி இடம் பெயர்ந்து, அரபிக் கடலின் தென் கிழக்கு பகுதியில், லட்சத் தீவு அருகே, புதிய காற்றுஅழுத்த தாழ்வு பகுதியாக, நேற்று காலை உருவாகி உள்ளது. இது தீவிரமடைந்து, கேரளா, தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளை நோக்கி நகரும். இதனால், நவ., 23 வரை, நான்கு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று, தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும். நாளை முதல், திங்கள்கிழமை வரை, கடலோர பகுதிகளில் கன மழை பெய்யலாம். எனவே, இந்த வார இறுதி வரை கடலோர பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

அடுத்ததுஅமெரிக்க வானிலை கணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நவ., 25ல், வங்க கடலில், அந்தமான் தீவு பகுதியில் உருவாகும் காற்று அழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தில்கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என தெரிவித்துள்ளது. இதை, இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.எனவே, இம்மாத இறுதி வரை கன மழை தொடரும் என, கணிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக