யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/12/15

ஆசிரியர்களுக்கு 20 கி.மீ., தூரத்துக்குள் தேர்வு பணியை வழங்கணும்.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாநில அமைப்பு செயலாளர்புஷ்பராசு தலைமை வகித்தார். கூட்டத்தில், மாவட்டத்தில் சில பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் புதிதாக வளர்ந்து வரும் விரும்பதகாத செயல்களில் இருந்து மாணவர்களை மீட்க, மூன்று மாவட்டங்களுக்கு ஒரு நடமாடும் உளவியல் ஆலோசகரை அரசு நியமித்துள்ளது. 

இருந்தும் தவிர்க்க முடியாத சம்பவங்கள் நடந்து வருகிறது. அவற்றை களைய மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர்கள் மற்றும் உளவியல் மருத்துவர்கள் கொண்ட மாவட்டக் குழுவை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். நம் அமைப்பின் வேண்டுகோளை ஏற்று, சனிக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் திட்டமிடப்பட்டிருந்த அலகுத்தேர்வுகள் மற்றும் ஆயத்த தேர்வுகள், தலைமையாசிரியர் மற்றும் பாட ஆசிரியர்கள் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியதற்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் நடக்கும், பிளஸ் 2 செய்முறை தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வு பணிகளுக்கு, ஆசிரியர்களை நியமிக்கும்போது, அவரவர் பணியாற்றும் பள்ளிகளில் இருந்து, 20 கி.மீ., தூரத்துக்குள் தேர்வு பணி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, தலைவராக ராமு, செயலாளராக காளிதாஸ், மாவட்ட பிரசார செயலாளராக செந்தில்குமார், மாவட்ட மகளிரணி செயலாளராக சுமதி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக