யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

26/1/16

போலிச் சான்றிதழ் விவகாரம்:கிராம நிர்வாக அலுவலர்கள் இருவருக்கு 3 ஆண்டு சிறை

போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் இருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உடுமலை குற்றவியல் நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. மடத்துக்குளம் வட்டம், கண்ணாடிப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, செங்கண்டிபுதூரைச் சேர்ந்தவர் சிவராஜ். இதில், ராமசாமி கொழுமத்திலும், சிவராஜ் துங்காவியிலும் கிராம நிர்வாக அலுவலர்களாக கடந்த 1999-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தனர்.

அப்போது ராமசாமி, சிவராஜ் இருவரும் பணியில் சேருவதற்காக 10-ஆம் வகுப்பு சான்றிதழ்களை சமர்ப்பித்திருந்தனர். இந்தச் சான்றிதழ்கள் கோவையில் உள்ள தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் ராமசாமி, சிவராஜ் இருவரும் கொடுத்த 10-ஆம் வகுப்புச் சான்றிதழ்கள் போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2004-ஆம் ஆண்டு இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் இருவர் மீதும் மடத்துக்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை உடுமலை குற்றவியல் நடுவர் மன்றம் 2-இல் நடைபெற்று வந்தது. இதில், போலியான சான்றிதழைக் கொடுத்து பணியில் சேர்ந்ததற்காக ராமசாமி, சிவராஜ் ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்ற நடுவர் சுதா வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். இதில், அரசு வழக்குரைஞராக பி.சிவசுப்பிரமணியம் ஆஜரானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக