யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/2/16

அரசு ஊழியர்களின் பிரச்னைக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும்: பொன். இராதாகிருஷ்ணன்

அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்துக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு ஊழியர்கள் தங்களது பிரச்னைகளை அரசின் பார்வைக்கு உடனுக்குடன் எடுத்துச் சென்று தீர்வு காண வேண்டுமே தவிர, பிரச்னைகளை மொத்தமாகச் சேர்த்துக் கொண்டு போராடுவதைத் தவிர்க்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு உரிய தீர்வு காண வேண்டும்.

தலைவர்களின் சந்திப்பை வைத்து கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியாது. தமிழகத்தின் நன்மையைக் கருதி, பாஜக கூட்டணி அமைக்கும். தமிழகத்தில் இதுவரை எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்காததால் பாஜகவின் கூட்டணி குறித்து அவசரப்படத் தேவையில்லை.
 மக்கள் நலக் கூட்டணிக் கட்சி ஒருங்கிணைப்பாளர் வைகோ, கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் தமிழகத்தின் கடந்த கால நிகழ்வுகளை மனதில் வைத்து வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு நல்ல முடிவு எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 தமிழகத்தில் அனைத்துக் கட்சியினரும், ஆட்சிக்கு வந்தால் பூரண மது விலக்கு கொண்டு வருவதாகக் கூறி வருகின்றனர். பூரண மது விலக்கு என்பது தேர்தல் பிரசாரத்துக்காக வைத்துக்கொள்ளாமல் தேர்தலுக்கு முன்பாக தமிழக அரசு மது விலக்கை அமல்படுத்த வேண்டும்.
 தமிழகத்தில் விவசாயிகளைப் பாதிக்கும் எண்ணெய் எடுக்கும் பணி அல்லது குழாய்ப் பதிக்கும் பணிகளை மத்திய அரசு செயல்படுத்தாது என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக