யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/8/16

அஞ்சல் துறையில் பணி: விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு.


இந்திய அஞ்சல் துறையின் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அலுவலகத்தில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: Postal Assistant - 16பணி: Sorting Assistant - 07சம்பளம்: ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.கல்வித்தகுதி: தொழிற்பிரிவு அல்லாத இதர பாடப்பிரிவுகளை முதன்மையாகக் கொண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பணி: Postman - 28

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 சம்பளம்: ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000.

வயதுவரம்பு: 24.08.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

பணி: Multi Tasking Staff - 15

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 24.08.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.

தேர்வு செய்யப்படும் முறை:கல்வித்தகுதி மற்றும் விளையாட்டுத்தகுதி மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சம்பந்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் தேசிய அளவில்/ சர்வதேச அளவில் பங்கேற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:ரூ.100. இதை Chief Postmaster General, Delhi என்ற பெயரில், புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கணினியில் தட்டச்சு செய்து தேவையான விவரங்களை தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு அஞ்சல் அல்லது விரைவு ஆஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முக�
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant Director (R&E),O/o The Chief Post Master General,Delhi Circle,Meghdoot Bhawan,NEWDELHI- 110001.

விளையாட்டுத்தகுதி: சம்பந்தப்பட்ட விளையாட்டுத்துறையில் மாநில அளவில், தேசிய அளவில், பல்கலைக்கழக அளவில், சர்வதேச அளவில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.08.2016.

மேலும், வயதுவரம்பு சலுகை, விளையாட்டுத் தகுதிகள் தொடர்பான தகவல்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.indiapost.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

kalviseithi.net

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக