யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/8/16

ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?

TET WEIGHTAGE Click here
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும்.


இடைநிலை ஆசிரியர்நியமனத்தைப்
பொருத்தவரையில், ஆசிரியர் நியமனம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு வழக்கில் தீர்ப்பு வரும்வரை தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, தகுதி தேர்வு மதிப்பெண், பிளஸ்–2 மதிப்பெண், பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடைபெறும்.

தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், பிளஸ்–2 தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும், பட்டப் படிப்புக்கு 15 மதிப்பெண்ணும், பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 100 மதிப்பெண். தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும். பிளஸ்–2, டிகிரி, பி.எட். தேர்வில் மதிப்பெண் ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு:–

12–ம் வகுப்பு

90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் – 10 (அதிகபட்ச முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 8 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 6 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 5 மதிப்பெண்50 சதவீதம் முதல்
60 சதவீதத்திற்குள் – 2 மதிப்பெண்

பட்டப் படிப்பு

70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்
50 சதவீதத்திற்கு கீழ் – 10 மதிப்பெண்

பி.எட். படிப்பு

70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்

தகுதித்தேர்வு

90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 60 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 54 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 48 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 42 மதிப்பெண்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக