யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/8/16

அரசுப் பள்ளியில் "கை சுத்தம் செய்யும் அறை' திறப்பு

ஆரணியை அடுத்த இராமசாணிக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களிடம் சுகாதாரத்தை வளர்க்கும் விதமாக குழாயுடன் கூடிய கை சுத்தம் செய்யும் அறை புதன்கிழமை திறக்கப்பட்டது.


இராமசாணிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகள் உணவு உண்பதற்கு முன்பும், உணவு உண்ட பின்பும் கையை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ளும் பழக்கத்தை பள்ளி பருவத்தில் இருந்து ஏற்படுத்தும் நோக்கத்தோடு தன்னார்வலர்கள் மூலம் ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் முன்மாதிரியாக கட்டி முடிக்கப்பட்ட கை சுத்தம் செய்யும் அறையை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜேந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்த அறையில் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு, 20 குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் கை கழுவ சோப்பு, கையை துடைக்க துண்டு ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. மதிய நேரத்தில் மாணவ, மாணவிகள் முகமலர்ச்சியுடன் வகுப்பறைகளுக்கு செல்ல முன்மாதிரியான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இங்கு மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக கழிவறைகள் கட்டி பயன்பாட்டில் உள்ளதுடன், பள்ளி வளாகத்தில் பூங்காவில் உள்ளது போன்று செடிகள், மரக்கன்றுகள் நடப்பட்டு, சுற்றுச்சுவர் அமைத்து சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது.

மேலும், இந்தப் பள்ளி காமராஜர் விருது உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் பெற்று சிறந்து விளங்குவதாகவும், தமிழக அளவில் சிறந்த முன்மாதிரி பள்ளியாக வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக