சிபிஎஸ்இ அதிகாரிகள் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கடந்த 2014ம் ஆண்டு முதல் பிளஸ் 2 தேர்வில் 10 பாடங்களில் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு வந்தது. இதற்கு 1.8 சதவீத மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கின்றனர். ஆனால் இதில் பயனடைவர்கள் மிகவும் குறைவு.
இதனால் விடைத்தாள் மறுமதிப்பீடு முறையை கைவிட சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. உண்மையான சில பேரின் குறைகளை தீர்க்க சில நடைமுறைகள் மட்டும் அமலில் இருக்கும்’’ என்றார்.
இதுகுறித்து சிபிஎஸ்இ தலைவர் ஆர்.கே.சதுர்வேதி கூறியதாவது: ஆசிரியர் தகுதி தேர்வை(சிடிஇடி) ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிட்டுள்ளோம். பள்ளி சான்றிதழ்களை ஆன்லைன் மூலமே சரிபார்க்கும் வகையில் டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. மாணவர்கள் விரைவில் டிஜிட்டல் சான்றிதழ்களை பெறுவர். பல பள்ளிகளின் ஆவணங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றனர். அது சம்பந்தமான தகவல்களை அவர்களின் பள்ளி வெப்சைட்களில் வெளியிட கேட்டுக் கொண்டுள்ளோம். மாணவர்களுக்கு பாடங்கள் சம்பந்தமான ஆடியோ-வீடியோ தகவல்கள் ஆன்லைன் மூலமே கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக