யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/11/16

ஆசிரியர் தகுதித் தேர்வு முறை செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஆசிரியர்தகுதித் தேர்வு முறை தொடர்பாகதமிழக அரசு வெளியிட்டுள்ள இருஅரசாணைகள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம்புதன்கிழமை தீர்ப்பளித்தது. இந்த விவகாரத்தில் சென்னைஉயர் நீதிமன்றம் அளித்த
தீர்ப்பை உறுதிப்படுத்தியஉச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைகிளை அளித்த தீர்ப்பை ரத்துசெய்துள்ளது.
இரு அரசாணைகள்: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டிஇடி) தகுதிகாண் (வெயிட்டேஜ்) முறையை 2013-ஆம் ஆண்டில் தமிழகஅரசு கொண்டு வந்தது. இதுதொடர்பாக 2014, பிப்ரவரி 6-ஆம் தேதியிட்ட அரசாணை25-இல் "தேர்வெழுதும் அனைத்து இடஒதுக்கீட்டு பிரிவினருக்கும்ஐந்து சதவீத மதிப்பெண் விலக்குஅளிக்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2014, மே 30-ஆம் தேதியிட்ட அரசாணை71-இல் தேர்வெழுதிய ஆசிரியர்களின் பணி நியமனத்தின்போது தகுதிகாண்(வெயிட்டேஜ்) முறை கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில்"தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டியமதிப்பெண் சலுகையை அனைத்து இடஒதுக்கீட்டுப்பிரிவினருக்கும் வழங்க வகை செய்யும்தமிழக அரசின் அரசாணையால் எங்களுக்குபாதிப்பு ஏற்படும்' என்று சில ஆசிரியர்கள்சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடுத்தனர். இந்த வழக்கில் தமிழகஅரசின் அரசாணையை உறுதி செய்து உயர்நீதிமன்றம் 2014 செப்டம்பர் 22-இல் தீர்ப்பளித்தது. இதேவிவகாரத்தில் மற்றொரு ஆசிரியர் பிரிவினர்சென்னை உயர் நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடுத்தனர். அதில், ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர் எனக் கூறி தமிழகஅரசின் அரசாணைகளை ரத்து செய்து 2014, செப்டம்பர்25-இல் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து"ஒரே விவகாரத்தில் இரு நீதிமன்றங்கள் மாறுபட்டதீர்ப்புகளை அளித்ததால் இந்த விஷயத்தில் தலையிடவேண்டும்' என்று கூறி பாதிக்கப்பட்டஆசிரியர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்தனர். தீர்ப்பு: இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதிஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துபுதன்கிழமை அளித்த தீர்ப்பின் முக்கியஅம்சங்கள் வருமாறு: ஆசிரியர் தகுதித் தேர்வு முறைதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டஇரு அரசாணைகள், தேசிய ஆசிரியர் கல்விகவுன்சில் வழிமுறைகளின்படி வெளியிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மாநில அரசுக்கு உள்ளஅதிகாரத்தை பயன்படுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது. அத்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பயனாளர்களுக்கு மதிப்பெண் சலுகை அளித்துள்ளது. எனவேதான்தமிழக அரசின் அரசாணைகளை உறுதிப்படுத்திசென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், தேசிய ஆசிரியர் கல்விகவுன்சில் வழிமுறைகளின் அம்சங்களை கவனத்தில் கொள்ளாமல் தமிழக அரசின் நடவடிக்கையைதன்னிச்சையானதாகக் கருதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. எனவே மதுரைக் கிளை அளித்ததீர்ப்பை ரத்து செய்கிறோம். இந்தவிவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம்அளித்த தீர்ப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக தேர்வில்வெற்றி பெறாதவர்கள் தாக்கல் செய்த அனைத்துமேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக