யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/11/16

கரும்பலகையில் திறனாய்வு தேர்வு பின்நோக்கி செல்லும் கல்வித்துறை

மாணவர்களின் கற்றல் தினறாய்வு தேர்வு வினாக்களை, கரும்பலகையில் எழுதி நடத்துமாறு, வெளியிட்ட அறிவிப்பு, கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பாண்டியராஜன் உத்தரவுப்படி, ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, கடந்த 15ம் தேதி முதல், தினசரி தேர்வு நடக்கிறது.

வகுப்பு நேரத்தில், பாடவாரியாக தேர்வு நடத்தி, மாணவர்களின் கற்றல் திறன் அறிந்து, பாடம் நடத்த உத்தரவிடப்பட்டது. வினாத்தாள் தயாரிக்கும் பணிகள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டது.மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி மையம் வாயிலாக, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களின், 'இ-மெயில்' முகவரிக்கு, வினாத்தாள் அனுப்பப்பட்டது. ஆன்லைனில், வினாத்தாள் பள்ளிக்கு வந்ததால், அச்சிட்டு மாணவர்களுக்கு விநியோகிக்க, போதிய நிதியில்லை என, ஆசிரியர்கள் புகார் அளித்தனர்.
வினாத்தாள் அச்சடிப்பு குறித்து, தகவல் இல்லாததால், கல்வித்துறை அதிகாரிகளும் மவுனம் சாதித்தனர். இந்நிலையில், கடந்த, 21 ம் தேதி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பில், அனைத்து, உயர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


10 கேள்விகள்
இதில், 'சி.சி.இ., எனும் தினசரி கற்றல் திறனாய்வு தேர்வு வினாத்தாளை, ஜெராக்ஸ் எடுத்து மாணவர்களுக்கு அளிக்க வேண்டாம். வினாக்களை கரும்பலகையில் எழுதி போட்டு, மாணவர்களின் நோட்டில் விடை எழுதுமாறு அறிவுறுத்தி, மதிப்பிட வேண்டும்' என குறிப்பிட்டுள்ளது.
இந்த வினாத்தாளில், பாடவாரி யாக, 10 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். ஒரே வரியில் சிந்தித்து விடையளிக்கும் படியாக, கேள்விகள் இருப்பதால், பெரும் ஆதரவை பெற்றது. இதற்கு, மாணவர்களுக்கு பிரத்யேக வினாத் தாள் வழங்காமல், கரும்பலகை யில் எழுதி போட்டு தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இது குறித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கற்றல் தினறாய்வு தேர்வு வினாக்களை, கரும்பலகையில் எழுதி நடத்துவதில் நிறைய சிக்கல் உள்ளது. தொடக்கப்பள்ளி மாணவர்களின் புரிதலுக்காக, வண்ணங்கள் அறிதலுக்கான கேள்விகள் உள்ளன.
இதை, கரும்பலகையில் எழுதி அறிவது சிரமம். மேலும், பொருத்துதல், இணையற்ற படங்களை கண்டறிய, ஓவியம் வரைய வேண்டியுள்ளது. இதை மாணவர்களும், நோட்டில் வரைந்து விடையளிக்க வேண்டும்.
ஓய்வு நேரம் இல்லை
தேர்வு நடத்த, 10 நிமிடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. தினசரி விடைகளை திருத்தி, மதிப்பாய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, செயல்வழி கற்றல் அட்டைகளை நிரப்புவதால், அதிக எழுத்துப்பணியால் திண்டாடுகிறோம்.
இதில், திறனாய்வு தேர்வை நடத்தி, மதிப்பாய்வு செய்தால், ஓய்வு நேரம் கிடைக்க வழியில்லை. இதற்கு பதிலாக, வினாத்தாளிலே விடையளிக்கும் படியாக தேர்வுத்தாள் வடிவமைத்து, பள்ளிகளுக்கு வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக