யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/11/16

ஓய்வூதிய திட்ட வல்லுனர் குழு அறிக்கை தாக்கல் எப்போது?

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட, வல்லுனர் குழுவின் பதவிக்காலம், ஒரு வாரத்திற்கு முன் முடிந்து விட்டது. அதனால், குழுவினர் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், புதிதாக பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, மத்திய அரசு ஆலோசனைப்படி, பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம், 2003ல் அமலுக்கு வந்தது. இதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

வல்லுனர் குழு : 'பழைய ஓய்வூதிய திட்டமே தொடர வேண்டும்' என, வலியுறுத்தி, பல போராட்டங்களையும் நடத்தினர். அரசு ஊழியர்களின் கோரிக்கையை சமாளிக்க, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, சட்டசபை தேர்தலுக்கு முன், வல்லுனர் குழுவை தமிழக அரசு நியமித்தது. தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் அ.தி.மு.க., அரசு அமைந்ததும், வல்லுனர் குழுவின் செயல்பாடுகள் துவங்கின. செப்டம்பரில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம், வல்லுனர் குழு கருத்து கேட்டது. அக்டோபர், 28ம் தேதியுடன், வல்லுனர் குழுவின் பதவிக்கலாம் முடிவடைந்து விட்டது. அதனால், குழுவினர் தங்களின் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 
ஆசிரியர்கள் உறுதி : இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டு, இரண்டு மாதங்களாகிறது; இன்னும் குழுவின் முடிவு தெரியவில்லை. பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தொடரக்கூடாது என்பதில், ஆசிரியர்கள் உறுதியாக உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும். அதற்கு முன், உயிரிழந்த மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஆசிரியர்கள் குடும்பத்திற்கு, இடைக்கால ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக