யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/12/16

பள்ளிகளுக்கு அருகில் தின்பண்ட கடைகளுக்கு தடை

 பள்ளிகளுக்கு அருகில் சுகாதாரமற்ற தின்பண்டங்களைவிற்க, தடை
விதிக்கப்பட்டுள்ளது.

       இது தொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர், கண்ணப்பன், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும்அனுப்பியுள்ள கடிதம்:பள்ளியில் வழங்கப்படும்சத்துணவு, முற்றிலும் துாய்மையாக சமைக்கப்பட வேண்டும்.
அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் உள்ளிட்டஉணவு பொருட்கள், துாய்மையான நீரில் சுத்தம் செய்யப்படவேண்டும். சமையல் கூடம், உணவுஅருந்தும் இடத்தை சுத்தமாக பராமரிக்கவேண்டும்.
மதிய உணவை, துாய்மையான முறையில்வினியோகம் செய்ய வேண்டும். மாணவர்கள்உணவு அருந்தும் தட்டு, டம்ளர் போன்றவற்றை, கழுவி சுத்தமாக பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். உணவு சமைத்தல் மற்றும்பரிமாறும் முறைகளை, தலைமை ஆசிரியர், தினமும்கண்காணிப்பது அவசியம்.
விழா நாட்களில், தன்னார்வ நிறுவனங்கள் வெளியிலிருந்து கொண்டு வரும், உணவின்தரத்தை சோதித்த பின்பே, மாணவர்களுக்குவழங்க வேண்டும்.பள்ளி வளாகத்திற்கு அருகில்விற்கப்படும், சுகாதாரம் இல்லாத தின்பண்டங்களை உண்ணக்கூடாது என, மாணவர்களுக்கு, தினமும்அறிவுறுத்த வேண்டும்.
பள்ளிகளின்முன், சுகாதாரமற்ற உணவு விற்கும் கடைகளைஅனுமதிக்க கூடாது; முற்றிலும் தடைசெய்ய வேண்டும்.

இவ்வாறுஅதில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக