யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/12/16

எவ்வளவு வேண்டுமானாலும் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் : அருண் ஜெட்லி விளக்கம் !!

வரும் 30ம் தேதி வரை ரூ.500, ரூ.1000 ஆகிய பழைய நோட்டுகளை வங்கிகளில் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். ஆனால், ஒரு முறை மட்டுமே செய்ய முடியும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார். செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய்களை மாற்றுவதற்கான கால

அவகாசம் முடிந்த நிலையில், அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு இம்மாதம் 30ம் தேதி வரை அவகாசம் உள்ளது. அதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. இந்த சூழலில் பழைய ரூபாய் நோட்டுகளை இனி அதிகபட்சமாக 5000 வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின.
இது குறித்து, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘இம்மாதம் 30ம் தேதி வரை வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு வரம்பு எதுவும் கிடையாது. ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்தலாம். சில பகுதிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கு சில சலுகைகள் முன்பு அறிவிக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் வாபஸ் பெறப்பட்டு விட்டது. மற்றபடி வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய கட்டுப்பாடு கிடையாது.
எனினும், ஒருவரே பல முறை தொடர்ந்து பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய வரும் போது சந்தேகம் ஏற்படுகிறது. எனவே, 5000 ரூபாய்க்கு அதிகமாக டெபாசிட் செய்யும் போது, காலதாமதத்திற்கான விளக்கம் கேட்கப்படும். மேலும், பழைய நோட்டுகளை ஒரு வங்கிக் கணக்கில மொத்தமாக ஒரேயொரு முறைதான் செலுத்த வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். சிறுவியாபாரிகளின் ஆண்டு வரவு செலவில்(டர்ன் ஓவர்) 8 சதவீதம் வருமானமாக கணக்கிடப்பட்டு, வரி விதிக்கப்பட்டு வந்தது. இதை 6 சதவீதமாக குறைக்க வருமான வரிச் சட்டப்பிரிவு 44ஏடி திருத்தம் செய்யப்படும் என்றும் ஜெட்லி அறிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக