யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/12/16

தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல் : ஏப்ரலில் நடத்த ஏற்பாடு

மதுரை: ரத்து செய்யப்பட்ட உள்ளாட்சி தேர்தல், அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.'தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 12 ஆயிரத்து 254 ஊராட்சிகளுக்கான தேர்தல் அக்., 17, 19ல் நடக்கும்' என செப்., 25ல் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இடஒதுக்கீடு பின்பற்றப்படாததால், தேர்தலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதுகுறித்த வழக்கு ஜன., 3க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தல்களை நடத்த ஏதுவாக, துணை கலெக்டர் அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் பதவி காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை என தெரிவிக்கப்பட்டது. டிச., 31ல் இவர்கள் பதவி காலம் முடிகிறது. இவர்களது பதவி காலத்தை நீடிப்பது குறித்து, அரசு இதுவரை எந்த முடிவும் செய்யவில்லை.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அருந்ததியினருக்கான இடஒதுக்கீடு பணிகள் துவங்கவில்லை. இடஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டு, உயர்நீதிமன்றத்திற்கு அரசு தெரிவிக்க வேண்டும்.
'ஜனவரியில் பொங்கல், மார்ச்சில் அரசு பொது தேர்வுகள் வருவதால், ஏப்ரலுக்கு உள்ளாட்சி தேர்தல் தள்ளி போகும் வாய்ப்பு உள்ளது' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக