யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/1/17

மாநகராட்சி பள்ளிகளில் ‘ஸ்பார்க்’ திட்டம்: பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய முயற்சி

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய ‘ஸ்பார்க்’ என்ற திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கி யுள்ளது.சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. 
அதில் 32 மேல்நிலைப் பள்ளி களும், 38 உயர்நிலைப் பள்ளி களும் அடங்கும். மொத்தமுள்ள பள்ளிகளில் 88 ஆயிரம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த ஆண்டு 86.21 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதற்கு முந்தைய ஆண்டு தேர்ச்சி விகிதம் 85.3 சதவீதமாக இருந்தது. உயர்நிலைப் பள்ளிகளில் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 95 சதவீதமாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் 92.15 சதவீத மாக இருந்தது.

மொத்தமுள்ள பள்ளிகளில் 3 அல்லது அதற்கும் குறைவான பள்ளிகளே 100 சதவீத தேர்ச்சியை வழங்கி வருகின்றன. இந்நிலையில், 10, மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் இந்த ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் 100 சதவீத தேர்ச்சி இலக்கைஅடையவும், மாநில அளவிலான மதிப்பெண்களை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பெறவும், மாணவர்களிடம் மறைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வரும் தீப்பொறி என்ற பொருள்படும் வகையில் ‘ஸ்பார்க்’ என்ற புதிய திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் சோதனை அடிப்படையில் தற்போது செயல்படுத்தி வருகிறது.இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப் பில் மொத்தம் 12 ஆயிரம் பேர் தேர்வெழுத உள்ளனர். தமிழ கத்தின் முன்னணி பள்ளிகளில் ஒன்றாக சென்னை மாநகராட்சிப் பள்ளிகளை மாற்றும் விதமாக ‘ஸ்பார்க்’ திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.

இத்திட்டத்தை சோதனை அடிப்படையில்தான் தொடங்கியிருக்கிறோம். அதன்படி, 10 மற்றும் 12-ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை ஆய்வுசெய்து, பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள், தேர்ச்சிபெற்ற மாணவர்கள், அதிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் என வகை பிரித்து, அவர்களை தற்போதுள்ள நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்காக, 5 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமித்திருக்கிறோம்.அவர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு வகுப்பு களை நடத்தி வருகின்றனர்.

மேலும் மாநகராட்சிப் பள்ளிகளில் உள்ள அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் சிறப்பு பயிற்சியும் வழங்கப் பட்டு வருகிறது. கூடுதல் பயிற்சி ஏடுகள் மூலமும் பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது. இதன் பலன், இந்த ஆண்டு பொதுத் தேர்வில் தெரியவரும் என்றார். இதில் கிடைக்கும் அனுபவத்தின் அடிப் படையில், இத்திட்டத்தை மேம் படுத்திக்கொள்வோம்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக