யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/1/17

திடீர் விடுமுறைகளால் தேங்கிய பாடங்கள்

பொங்கலுக்கு பின் அறிவிக்கப்பட்ட, திடீர் விடுமுறைகளை சமாளிக்க, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, தினமும் கூடுதல் சிறப்பு வகுப்புகள் நடத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த டிசம்பரில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், அவரது மறைவு வரை, பல நாட்கள் திடீர் விடுமுறை அளிக்கப்பட்டது. பின், 'வர்தா' புயல் தாக்குதலால், பள்ளிகளுக்கு, மூன்று நாட்களுக்கு மேல் விடுமுறை விடப்பட்டது.
பின், ஜனவரியில் நிலைமையை சமாளிக்கலாம் என, பள்ளி நிர்வாகத்தினர் முடிவு செய்த நிலையில், பொங்கல் விடுமுறையை தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., பிறந்த நாளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதோடு நிற்காமல், ஜல்லிக்கட்டு போராட்டம், பந்த் மற்றும் கலவரம் என, நான்கு நாட்கள் வரை, பள்ளிகள் முறையாக இயங்கவில்லை.அதனால், பல பள்ளிகளில் பாடங்கள் நடத்த முடியாமல், மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், திருப்புதல் தேர்வு மற்றும் சிறப்பு பயிற்சியும் நடத்த முடியவில்லை. எனவே, நிலைமையை சமாளிக்க, தினமும் வழக்கமான காலை, மாலை சிறப்பு வகுப்புகளில், கூடுதலாக ஒரு மணி நேரம் பாடம் நடத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளிலும், சிறப்பு வகுப்புகளை நடத்த, பள்ளிகள் முடிவு செய்துஉள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக