யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/3/17

13வது ஊதிய ஒப்பந்த பேச்சு; 30 நிமிடங்களில் முடிந்தது!!

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான, 13வது ஊதிய ஒப்பந்தத்துக்கான முதற்கட்ட பேச்சு, 30 நிமிடங்களில் முடிந்தது.
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில், 1.5 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். அவர்களின் ஊதியத்திற்காக, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஊதிய 
ஒப்பந்தம் செய்யப்படுகிறது. 2016 ஆகஸ்டுடன், 12வது ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்தது. முன்னாள் முதல்வர், ஜெ., உடல்நலமின்மை, இறப்பு உள்ளிட்ட காரணங்களால், 13வது ஊதிய ஒப்பந்த பேச்சு உரிய நேரத்தில் துவக்கப்படவில்லை. பேச்சை உடனே துவக்கக் கோரி, தொழிற்சங்கங்கத்தினர் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், ஜன., 13ல், பேச்சுக்கான அதிகாரபூர்வ குழுவை, அரசு அமைத்தது.
அரசு நிதித் துறை துணை செயலர், மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர், விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர், அனைத்து கோட்ட நிர்வாக இயக்குனர்கள் உள்ளிட்ட, 15 பேர், அக்குழுவில் இடம் பெற்றனர்.இந்நிலையில், நேற்று காலை, 11:50 மணிக்கு, குரோம்பேட்டையில் உள்ள, அரசு போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில், போக்கு வரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், பேச்சு குழுவினர் முன்னிலையில், தொழிற்சங்கத்தினருடன் பேச்சு துவங்கியது. 48 தொழிற்சங்கங்களில் இருந்து, தலா, இருவர் வீதம், பேச்சுக்கு அனுமதிக்கப்பட்டனர். பகல், 12:20 மணிக்கு, பேச்சு முடிவுற்றது.
இது குறித்து, தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை, பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்; ஓய்வூதியர்களுக்கான நிலுவை தொகையை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவற்றை செயல்படுத்தாமல், ஊதிய ஒப்பந்த பேச்சை தொடர்ந்தால், நிர்வாக செயல்பாடுகளில் சிக்கல் எழலாம் என, அனைத்து தொழிற்சங்கத்தினரும் வலியுறுத்தினர். 'பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவது குறித்து, முதல்வருடன் ஆலோசிக்கப்படும்' என, அமைச்சர் உறுதி அளித்தார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

2,000 புதிய பேருந்துகள்

ஓய்வு பெற்றோருக்கான நிலுவை தொகை, 1,200 கோடி ரூபாய் உள்ளது. இது, 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதற்கு, வரவுக்கும், செலவுக்கும் உள்ள பற்றாக்குறையே காரணம். இது தொடர்பாக, முதல்வரிடம் ஆலோசித்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில், 2,000 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும்.-விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை அமைச்சர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக