யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

31/3/17

சுப்ரீம் கோர்ட் உத்தரவு எதிரொலி.. டூவீலர் விலையில் வரலாற்று வீழ்ச்சி.. இச்சலுகை 2 நாட்கள் மட்டுமே!

மும்பை: பாரத் ஸ்டேஜ் -4 (பி.எஸ்.4) விதிமுறைகளை பூர்த்தி செய்யாத வாகனங்களை ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு வாகன உற்பத்தி நிறுவனங்கள் விற்பனை செய்ய முடியாது என்று உச்ச
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அந்த பைக்குகள் விலை கிடுகிடுவென குறைந்துள்ளது.

வழக்கு
நாட்டில் புகை மாசுவை கட்டுப்படுத்த சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம், வாகனங்கள் வெளியிடும் மாசுகளின் அளவுகளை வரையறுத்து விதிமுறைகள் வகுத்து வெளியிட்டு வருகின்றன. வாகனங்கள் வெளியிடும் புகையை கட்டுப்படுத்த சில விதிமுறைகளை வகுத்து, பாரத் ஸ்டேஜ் (பி.எஸ்) 3 என்ற விதி முறை ஏற்கனவே அமலில் இருந்தது.

தள்ளுபடி
தள்ளுபடி
இதன்பிறகு, கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாகன இன்ஜின் தயாரிக்கும் வகையில் பி.எஸ்-4 விதிமுறை, 2010முதல் நாடு முழுவதும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

வரும் ஏப்ரல் 1 முதல் இந்த விதிமுறை முழுமையாக அமலுக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் உற்பத்தியைதான் அந்த அறிவிப்பு குறிக்கிறது, ஏற்கனவே உற்பத்தி செய்த வாகனங்களை விற்பனை செய்யவோ, ரிஜிஸ்டர் செய்யவோ வலியுறுத்தவில்லை என கருதின மோட்டார் வாகன நிறுவனங்கள்.

வழக்கு
ஆனால், விற்பனைக்கும் தடை என்பதை தாமதமாக புரிந்து கொண்டன. எனவே, தங்களிடம் பிஎஸ் 3 விதிமுறைகளுடன் கூடிய 8 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதாகவும் இத்தகைய வாகனங்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று வாகன உற்பத்தி நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

அதிரடி உத்தரவு
இரு நாட்கள்தான் கெடு
இரு நாட்கள்தான் கெடு
இந்தமனுவுக்கு சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், 2005 மற்றும் 2010ல் இதேபோல முறையே பி.எஸ்.2 மற்றும் பி.எஸ்.3 என்ற புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஸ்டாக்கில் இருந்த பழைய வாகனங்களை விற்க அனுமதி அளிக்கப்பட்டது என கார் உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இந்த வாதத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஏப்ரல், 1ம் தேதி முதல் பி.எஸ்.3 வாகனங்களை பதிவு செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று அதிரடி உத்தரவை நேற்று பிறப்பித்தது.
வாகனநிறுவனங்களுக்கு நஷ்டம் இதையடுத்து பெரும் நஷ்டத்தை நோக்கி வாகன உற்பத்தி நிறுவனங்கள் செல்ல தொடங்கியுள்ளன. 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வாகனங்களை இன்னும் 2 நாட்களில் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் அந்த நிறுவனங்களுக்கு. அதிலும் குறிப்பாக ஹீரோ நிறுவனம் மற்றும் ஹோண்டா நிறுவனம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே அவை தங்கள் டூவீலர் விலைகளை அதிரடியாக குறைத்துள்ளன.

தள்ளுபடி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், பி.எஸ்.3 வகையில் தயாரான ஸ்கூட்டர்களுக்கு ரூ.12500 டிஸ்கவுண்ட் வழங்குவதாக அறிவித்துள்ளது. பிரீமியம் வகை பைக்குகளுக்கு ரூ.7500 டிஸ்கவுண்டும், நுழைவு நிலையிலுள்ள மாஸ் மார்க்கெட் பைக்குகளுக்கு ரூ.5000 வரையும் டிஸ்கவுண்ட் தருவதாக அறிவித்துள்ளது.

இருநாட்கள்தான் கெடு ஹோண்டா நிறுவனம் தனது ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை டிஸ்கவுண்ட் அளிப்பதாக அறிவதி்துள்ளது. மார்ச் 31 இரவுக்குள் முடிந்த அளவுக்கு பைக்குகளை விற்பனை செய்து தீர வேண்டிய கட்டாயத்தில் அந்த நிறுவனங்கள் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக