யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/4/17

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு : கணினி ஆசிரியர்களின் அடுத்த 'செக்'

மதுரை: பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று துவங்கியுள்ள நிலையில், இன்று (ஏப்., 6) முதல் திருத்தும் பணியை புறக்கணிப்பதாக, மேல்நிலை பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
விடைத்தாள் மதிப்பீடு செய்ய நாள் ஒன்றுக்கு வழங்கும் விடைத்தாள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, ஏற்கனவே பி.ஜி., ஆசிரியர்கள் சங்கம் ஒன்று, திருத்தும் பணியை புறக்கணிப்பதாக அறவித்தது.இதையடுத்து தமிழ், ஆங்கிலம் தவிர பிற பாடங்களில் நாள் ஒன்றுக்கு 22ல் இருந்து 20 விடைத்தாளாக குறைக்கப்பட்டது, திருத்தும் மதிப்பூதியம் உயர்த்துவது உட்பட ஆசிரியர்களின் கோரிக்கையை தேர்வுத் துறை நேற்று ஏற்றதால், புறக்கணிப்பு கைவிடப்பட்டது.இந்நிலையில், கணினி ஆசிரியர்களின் ஒரு கோரிக்கைகூட நிறைவேறாததால், திருத்தும் பணியை அவர்கள் இன்று முதல்புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சவுந்திரராஜன் கூறியதாவது:பி.ஜி., ஆசிரியர்கள் போல் கணினி ஆசிரியர்களும் கல்வி செயலர், இயக்குனர் என தொடர்ந்து மனுக்கள் அளித்தோம். பிற பாடங்கள் ஆசிரியர் கோரிக்கைகளை தேர்வுத்துறை ஏற்றுள்ள நிலையில், நாள் ஒன்றுக்கு 20 விடைத்தாள் என்பதை 15 ஆக குறைப்பது, உழைப்பூதியம் 3.75 ரூபாயிலிருந்து ஆறு ரூபாயாக உயர்த்த வேண்டும் உட்பட கணினி ஆசிரியர்களின் எந்த கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.

இதனால் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க உள்ளோம், என்றார்.விடைத்தாள் திருத்தும் பணி துவக்க நாளான நேற்று முதன்மை மற்றும் கூர்ந்தாய்வாளர் திருத்தினர். இதில் கணினி ஆசிரியர்கள் பங்கேற்றனர். இன்று உதவி தேர்வாளர்திருத்தும் பணி துவங்குகிறது. இந்நிலையில் கணினி ஆசிரியர்களின் ஒரு சங்கத்தினர் புறக்கணிப்பால், கணினிஇயக்க செயல்பாடுகள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக