யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/6/17

(B.Ed) பி.எட். மாணவர் சேர்க்கை: 21 -இல் விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில்2017-18 -ஆம் கல்வியாண்டில் பி.எட்.,
இரண்டாண்டு படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் 21 -ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் உள்பட 13 இடங்களில் மட்டுமே விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும்.

இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2017-18 -ஆம் கல்வியாண்டில், இரு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூன் 21 -ஆம் தேதி முதல் ஜூன்30 -ஆம் தேதி வரை சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கீழ்க்கண்ட 13 கல்வியியல் கல்லூரிகளில் மட்டும் விற்பனை செய்யப்படும்.
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள்: கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சைதாப்பேட்டை -சென்னை, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், திருவல்லிக்கேணி -சென்னை, அரசு கல்வியியல் கல்லூரி - குமாரபாளையம், அரசு கல்வியியல் கல்லூரி -ஒரத்தநாடு, அரசு கல்வியியல் கல்லூரி -புதுக்கோட்டை, அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி -கோவை, அரசு கல்வியியல் கல்லூரி, காந்திநகர் -வேலூர், லட்சுமி கல்வியியல் கல்லூரி, காந்திகிராம் -திண்டுக்கல் மாவட்டம், ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரி, பேர்லாண்ட்ஸ் -சேலம், தியாகராசர் பர்செப்டார் கல்லூரி -மதுரை, வ.உ.சிதம்பரனார் கல்லூரி -தூத்துக்குடி, செயின்ட் இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி -பாளையங்கோட்டை, என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி -ஆத்தூர், திருவட்டாறு ஆகிய கல்லூரிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கும்.
விண்ணப்பத்தின் விலை ரூ.500. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள், சுய சான்றொப்பமிட்ட ஜாதிச்சான்றிதழின் நகலை அளித்து ரூ.250 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பத் தொகையை பணமாக அல்லதுThe Secretary, Tamil Nadu B.Ed. Admission, Chennai  600005 என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட கேட்பு வரைவோலையாக (Demand Draft Payable At Chennai)  நேரில் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். தபால் மூலம்விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 3 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் செயலர், தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை 2017-2018, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். பி.எட். சேர்க்கைக்கான வழிகாட்டி நெறிமுறைகள் www.ladywillingdoniase.com   என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக