யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/6/17

ஆசிரியர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம்... இல்லாவிட்டால் சம்பளம் கிடையாதாம்

உத்தரப்பிரதேசத்தில் அரசு பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் ஜூலை மாதம் முதல் கண்டிப்பாக ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும், அவ்வாறு ஆதார் அட்டை இல்லாத ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் முதல்வராக யோகி ஆதித்யநாத் வந்தபின் பல அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறார். கல்வித்துறையில் சீர்திருத்தம் கொண்டுவர பள்ளி விடுமுறை நாட்களைக் குறைத்து, வேலை நாட்களை நீட்டித்தார். தலைவர்களின் பிறந்த, மறைந்த நாட்களில் விடுமுறையை ரத்து செய்து, அந்த நாட்களில் அந்த தலைவர்கள் குறித்து அறியும் வகையில் பள்ளி நடத்த உத்தரவிட்டார்.

இந்நிலையில், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும், வருகைப்பதிவு சரியாக இருக்க வேண்டும் என்ற திட்டமிட்டு, அனைத்து ஆசிரியர்களும் ஆதார் அட்டை பெறுவதை முதல்வர் ஆதித்யநாத் கட்டாயமாக்கியுள்ளார்.

இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் அனுபமா ஜெய்ஸ்வால்  சனிக்கிழமை அதிகாரிகளுடன் லக்னோ நகரில் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.அப்போது அவர் கூறுகையில், “

அரசுதொடக்க பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் மட்டும் 4.95 லட்சம் ஆசிரியர்கள் 1.68 லட்சம் பள்ளிகளில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஆதார் அட்டையை ஜூலை மாதத்துக்குள் பெற்று, இதை வங்கிக் கணக்கோடு இணைத்து இருப்பது கட்டமயாகும். இந்த ஆதார் அட்டைதான் ஆசிரியர்களுக்கு அடையாள அட்டையாகவும் பயன்படப்போகிறது.

அவ்வாறு ஆதார் அட்டையை பெறாமல், ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைக்காமல் இருக்கும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படாது. ஆசிரியர்கள் மத்தியில் வெளிப்படைத்தன்மை, பள்ளிக்கு சரியாக வருகை தருகிறார்களா என்பதை கண்டறிய ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான ஆசிரியர்களுக்கு ஆதார் எண் வைத்திருப்பார்கள், அவ்வாறு இல்லாதவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு ஆதார் முகாம் நடத்தப்படும் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டு, அது பள்ளியுடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.


தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் 1.78 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 30 சதவீதம் மாணவர்களுக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளது. புறநகர் மற்றும் தகவல் தொடர்பில்லாத பகுதிகளில் பயிலும்  மாணவர்களுக்கு ஆதார் அட்டை பெறுவதில் சிரமங்கள் உள்ளன. அவர்களுக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக