யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/7/17

332 இடங்களுக்கான கால்நடை மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு தொடங்கியது

கால்நடை மருத்துவ படிப்புகளில் 332 இடங்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2017–2018–ம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்றும்(வியாழக்கிழமை), தொழில்நுட்ப பாடப்பிரிவுக்கான கலந்தாய்வு நாளையும்(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
பொதுப்பிரிவில் (பி.வி.எஸ்.சி., ஏ.எச்.) 320 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. அதன்படி 48 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 272 இடங்களுக்கும், அதேபோல் தொழில்நுட்ப பிரிவில் 60 இடங்கள் என மொத்தம் 332 இடங்களுக்கான கலந்தாய்வு இந்த ஆண்டு நடத்தப்படுகிறது.
இதில் பொதுக்கல்வி பிரிவில் (பி.வி.எஸ்.சி., ஏ.எச்.) மாற்றுத்திறனாளிகளுக்கு(சிறப்பு பிரிவு) 16 இடங்களும், விளையாட்டுப்பிரிவு மாணவர்களுக்கு 5 இடங்களும் (ஆண்–3, பெண்–2), முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு 2 இடங்களும், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு 16 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு நேற்று கலந்தாய்வு நடைபெற்றது.
இதுபோக, மீதமுள்ள 233 இடங்களுக்கு இன்று பொது கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த இடங்களுக்கு மொத்தம் ஆயிரத்து 115 பேர் கலந்தாய்வுக்காக அழைக்கப்பட்டு இருக்கின்றனர்.
இதேபோல், தொழில்நுட்ப பாடப்பிரிவுகளான உணவு தொழில் நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம் ஆகியவற்றில் உள்ள 80 இடங்களுக்கான கலந்தாய்வும் இன்று நடைபெறுகிறது. இந்த இடங்களை பொறுத்தவரையில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியவர்களுக்கு ஒதுக்கீடு கிடையாது.
அந்தவகையில், உணவு தொழில்நுட்பத்தில் உள்ள 20 இடங்களுக்கு 396 பேரையும், கோழியின தொழில்நுட்பத்தில் உள்ள 20 இடங்களுக்கு 364 பேரையும், பால்வள தொழில்நுட்பத்தில் உள்ள 20 இடங்களுக்கு 520 பேரையும் கலந்தாய்வுக்காக அழைத்துள்ளதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்குழு தலைவரும், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலருமான சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக