யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/9/17

ரயில்வே ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து!

பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்வது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் ஆலோசித்து வருவதாக நேற்று (செப்டம்பர் 19) தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா, “ துர்கா பூஜை, தசரா, தீபாவளி, சாத் பூஜா உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வருகின்றன. பண்டிகைகளை முன்னிட்டு அக்டோபர் 15ஆம் தேதி முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை புதிய ரயில்களை அறிமுகம் செய்யப்படும். சாத் பண்டிகைக்கு கொல்கத்தா, டெல்லி, மும்பை, சூரத், வதோதரா, அகமதாபாத், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய நகரங்களுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். கடந்த ஆண்டு 3,800 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு 4,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க அனைத்து ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்வது குறித்தும், ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனையை நிறுத்தவும், முக்கிய ரயில் நிலையங்களில் பந்தல்களை அமைக்கவும், கழிப்பறைகளைத் தூய்மையாக வைத்திருக்கவும் திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, பண்டிகை காலத்தில் ரயில் பயணங்களில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக 1,654 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 693 வழக்குகளில் ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக