யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/11/17

13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

கடலோரத்தில் உள்ள, 13 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில் கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.வட கிழக்கு பருவமழை குறித்து, நேற்று, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலச்சந்திரன் அளித்த பேட்டி:

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக கடலோர மாவட்டங்களை ஒட்டி, இலங்கை அருகே நிலை கொண்டுள்ளது. அதனால், மாநிலம் முழுவதும் மழை தொடரும். வரும், 24 மணிநேரத்தில், அதாவது, சனிக்கிழமை காலை, 8:3௦ மணி வரை, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில், சில இடங்களில் கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில், மிக கனமழைபெய்யும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களை பொறுத்தவரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்.துாத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், கடலோர பகுதிகளில், சில இடங்களில் கன மழை பெய்யும். புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக