யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/11/17

2013 TNTET - ஒரு மதிப்பெண் கூடுதலாக வழங்க TRB - க்கு உயர்நீதி மன்றம் உத்தரவு!!!

அரசு உயர் நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை
நிரப்ப கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்து தேர்வு நடத்தியது. இத்தேர்வில் 107வது கேள்வியாக வந்தே மாதரம் பாடல் முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டது என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 

அதற்கு வங்க மொழி, உருது, மராத்தி, சமஸ்கிருதம் என நான்கு விடைகள் கொடுக்கப்பட்டு, சரியானதை தேர்வு செய்க என்று கூறப்பட்டது.  இதற்கு வங்கமொழி என பதிலளித்த வீரமணி என்ற விண்ணப்பதாரர், பாட புத்தகத்தில் வங்கமொழி என்றே கூறப்பட்டுள்ளதால், அந்த விடையை எழுதிய தனக்கு ஒரு மதிப்பெண்கள் வழங்கவும், ஒரு ஆசிரியர் பணியிடத்தை தனக்கு நிறுத்தி வைக்கவும் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

  இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், வந்தே மாதரம் பாடல் வங்க மொழியில் எழுதப்பட்டு சமஸ்கிருதத்தில் பாடப்படுகிறது என்று தெரியவருகிறது. எனவே, கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர்தகுதி தேர்வில் சரியா பதிலை எழுதிய  மனுதாரர் வீரமணிக்கு ஒரு மதிப்பெண் வழங்கி, அவருக்கு 4 வாரத்தில் பணி நியமன ஆணையை ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம்  வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ், டீக்காராமன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: வந்தே மாதரம் எந்த மொழியில் எழுதப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்ய தனி நீதிபதி ஒரு வக்கீல் குழுவையே நியமித்து தகவல்களைத் திரட்டி அதன் அடிப்படையில் முதலில் வங்க மொழியில்தான் எழுதப்பட்டது என்பதையும் பின்னர் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டது என்றும் முடிவுக்கு வந்துள்ளார்.

எனவே, வங்க மொழி அல்லது சமஸ்கிருதம் என்ற 2 பதில்களும் சரிதான் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. வங்க மொழி என்று எழுதியவர்களுக்கு 1 மதிப்பெண் தருவதைப்போல் சமஸ்கிருதம் என்று பதில் எழுதியவர்களுக்கும் ஒரு மதிப்பெண் தரவேண்டும். எனவே, இந்த விஷயத்தில் தனி நீதிபதி 1 மதிப்பெண் மனுதாரருக்கு தரவேணடும் என்ற உத்தரவு உறுதி செய்யப்படுகிறது.

மேலும் கல்வி நிறுவனங்களிலும் அரசு அலுவலகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் வந்தே மாதரம் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த விஷயத்தையும் அரசிடமே இந்த நீதிமன்றம் விட்டுவிடுகிறது. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக