யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/11/17

அறிவியல் கண்காட்சி முடிவு குறித்து மழுப்பல்!ஆசிரியர்கள், மாணவர்கள் அதிருப்தி!!!

மதுரை;மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளுக்கு நடந்த அறிவியல் கண்காட்சி போட்டிகளின்
முடிவுகள் அறிவிப்பில் சர்ச்சை எழுந்துள்ளது.அறிவியல் ஆர்வத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்த ஆண்டுதோறும் இக்கண்காட்சி நடத்தப்படும்.
சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கப்படும். இந்தாண்டு 'நிலையான வளர்ச்சியில் அறிவியலின் பங்கு' என்ற தலைப்பில் கண்காட்சி நடந்தன.குறுவள மையம் அளவில் நடந்த கண்காட்சியில் தலா 10 முதல் 15 துவக்க, நடுநிலைப் பள்ளிகள் படைப்புக்களை காட்சிப்படுத்தின.

இதில் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி அறிவியல் பாட ஆசிரியர் நடுவர்களாக இருந்து முதல் 3 பரிசுக்கான பள்ளிகளை தேர்வு செய்து அறிவித்தனர்.இதன்படி துவக்க
பள்ளிகளுக்கு முதல் பரிசு 400 ரூபாய், இரண்டாவது 300, மூன்றாம் பரிசாக 200 ரூபாயும், உயர் மற்றும் நடுநிலைக்கு முதல் பரிசு 600, இரண்டாவது 500, மூன்றாம் பரிசாக 400
ரூபாயும் வழங்கப்பட்டது. இதற்காக ஒவ்வொரு மையத்திற்கும் 16ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. நடுவர்கள் தேர்வு செய்ததிலும், பள்ளிகள் பங்கேற்க வைத்ததிலும் பல ஒன்றியங்களில்
குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், ஆசிரியர்கள், மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: நடுவர்களாக பங்கேற்ற ஆசிரியர் பணியாற்றும் பள்ளிகளே பல இடங்களில் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு குறுவள மையத்திலும் நடுநிலை பள்ளிக்கு முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுகள் காத்திருந்தன.
ஆனால் 2 அல்லது 3 நடுநிலை பள்ளிகளே பங்கேற்றன. வேறு வழியின்றி மூன்று பரிசுகளும் பங்கேற்ற பள்ளிகளுக்கே வழங்க நேர்ந்தது.மேலும் ஒவ்வொரு மையங்களுக்கும் நடுநிலை பள்ளிகளை பிரித்து அனுப்புவதில் கல்வி அதிகாரிகள் சரியான வழிகாட்டுதல் வழங்கவில்லை.
ஒன்றியம் வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டிருந்தால் அதிக பள்ளிகள் பங்கேற்றிருக்கும். பரிசு வழங்கும்போது தான் இப்பிரச்னையே வெளியானது, என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக