யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/11/17

விபத்து இழப்பீடு : புதிய விதிமுறைகள்!!!

சாலை விபத்தில் உயிரிழப்பவரின் குடும்பத்துக்கு
இழப்பீடு வழங்கப் பின்பற்றுவதற்கான புதிய விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் நேற்று(அக்டோபர் 31) வகுத்துள்ளது.

சாலை விபத்தில் உயிரிழப்பவரின் குடும்பத்துக்கு, மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு வழங்கப்படுகிறது. அதில், சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படும்போது, அதற்கான இழப்பீடுகளை வழங்கும்போது,உயிரிழந்தவரின் எதிர்கால வருமானம் கணக்கிடுவது தொடர்பாக 27 பேர் தொடுத்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.

இழப்பீடு வழங்குவதற்கான புதிய விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுத்து வழங்கியுள்ளது. அதில், இறந்தவர் தனியார் அல்லது அமைப்பு சாரா நிறுவனங்களில், நிரந்தரப் பணியாளராக இருந்து , 40 வயதுக்குள் இறந்தால், அவருடைய சம்பளத்துடன், 50 சதவிகிதம் கூடுதல் தொகையை, எதிர்கால வருவாயாகக் கணக்கிட வேண்டும்.

அதுபோன்று, 40 முதல் 50 வயதுள்ளவர்களுக்கு, 30 சதவிகிதமாகவும், 50 முதல் 60 வயதுள்ளவர்களுக்கு 15 சதவிகிதமாகவும், எதிர்கால வருவாயைக் கணக்கிட வேண்டும். இறந்தவர், சுய தொழில் அல்லது தொகுப்பூதியம் பெறுபவராக இருந்தால், 40 வயதுள்ளவர்களுக்கு 40 சதவிகிதம் எதிர்கால வருவாயாகக் கணக்கிட வேண்டும். இது 40 முதல் 50 வயதுள்ளவர்களுக்கு 25 சதவிகிதமாகவும், 50 முதல் 60 வயதுள்ளவர்களுக்கு , 10 சதவிகிதமாகவும் கணக்கிட வேண்டும்.

இழப்பீடு மற்றும் இறுதி சடங்குகளுக்கான தொகையை, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை, 10 சதவிகிதம் உயர்த்திக் கணக்கிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக