யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/11/17

தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

இன்றும், நாளையும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலின் தென் மேற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தென் தமிழகம் மற்றும் வட மேற்கு மாவட்டங்களில், நிலை கொண்டுள்ளது.
இது, தென் மேற்காக நகர்ந்து, லட்சத்தீவு அருகே, அரபிக்கடலில் நுழைந்து வலுவிழக்கும் என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், ஸ்டெல்லா கூறியதாவது:
தென் மாவட்டங்களில் குறிப்பாக, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்றும், நாளையும் கனமழை பெய்யும். அதையொட்டிய, மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக, 29 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக