அரசு மற்றும் தனியார்
மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கான முறையான ஊதியத்தைத் தருமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு முறையான ஊதியம் தரப்படவில்லை என்று தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் செவிலியர் சங்கங்களின் சார்பில் சமீபகாலமாகப் போராட்டங்கள் நடைபெற்றன. ஏழாவது ஊதிய ஆணைக்குழு பரிந்துரையின்படி செவிலியர்களின் ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்பது இவர்களின் போராட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
இந்நிலையில், மக்களவையில் நேற்று(டிசம்பர் 22) உரையாற்றிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை முறைப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்திந்திய செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த பின்னர், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கான ஊதியம் தொடர்பாக, தேவைப்பட்டால் மாநில அரசுகள் தனியாக சட்டம் இயற்றவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் ஜே.பி.நட்டா குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக