யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

13/12/17

இணைய வேகத்தில் இந்தியா பின்னடைவு!!!

சர்வதேச அளவில் அதிவேக இணையச்
சேவையில் மொபைல் பிரிவில் 109ஆவது இடத்தையும், பிராட்பேண்ட் பிரிவில் 76வது இடத்தையும் பிடித்துள்ள இந்தியா பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இணைய வேகம் குறித்த ஆய்வு மேற்கொண்டுள்ள ஊக்லா நிறுவனம், நவம்பர் மாதத்திற்கான சர்வதேச அளவிலான மொபைல் மற்றும் பிராட்பேண்ட் சேவையில் அதிவேக இணையச் சேவை பட்டியலைச் சமீபத்தில் வெளியிட்டது. இதில் 122 நாடுகள் அடங்கிய மொபைல் சேவையில் இந்தியா 109வது இடத்தையும், 133 நாடுகள் அடங்கிய பிராட்பேண்ட் சேவையில் இந்தியா 76வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்தச் சோதனையின் முடிவில் இந்தியாவில் அக்டோபர் மாதம் வரை 8.83 Mbps வேகம் கொண்ட மொபைல் இணையச் சேவையானது நவம்பர் மாதம் 8.80 Mbps ஆகக் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் தொடக்கம் முதல் சராசரியாக கிடைத்த வேகத்தை (7.65 Mbps) விட அதிகமாகும். இந்தப் பட்டியலில் 62.66 Mbps மொபைல் இணைய வேகத்துடன் நார்வே முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து 53.01 Mbps வேகத்துடன் நெதர்லாந்து இரண்டாம் இடத்திலும், 52.78 Mbps வேகத்துடன் ஐஸ்லாந்து மூன்றாம் இடத்திலும், 51.50 Mbps வேகத்துடன் சிங்கப்பூர் நான்காவது இடத்திலும், 50.46 Mbps வேகத்துடன் மால்டா ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

பிராட்பேண்ட் இணையச் சேவையில் இந்தியா 18.82 Mbps வேகத்துடன் 76வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் 153.85 Mbps வேகத்துடன் சிங்கப்பூர் முதலிடத்திலும், 147.51 Mbps வேகத்துடன் ஐஸ்லாந்து இரண்டாம் இடத்திலும், 133.94 Mbps வேகத்துடன் ஹாங்காங் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக