யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/12/17

சென்னையில் சர்வராகப் பணிபுரியும் ரோபோக்கள்!

                                        
இந்தியாவில் முதன்முறையாகச் சென்னையில் ரோபோக்கள் சர்வராகப்
பணிபுரியும் ஹோட்டல் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் செம்மஞ்சேரியில் 747 என்ற பெயருடன் ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. ஹோட்டலின் உரிமையாளர்கள் கார்த்திக் கண்ணன் மற்றும் வெங்கடேஷ் ராஜேந்திரன், இந்த ஹோட்டலை விமானம் போன்ற வடிவத்தில் வடிவமைத்துள்ளனர்.

இதுகுறித்து உரிமையாளர் கார்த்திக் கண்ணன் கூறுகையில், “சீனா போன்ற நாடுகளில்தான் இந்த மாதிரியான ஹோட்டல்கள் உள்ளன. இதுபோன்று இந்தியாவில் இல்லை. அதனால், ஜப்பான் மற்றும் சீனாவிலிருந்து ரோபோக்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டு, ஹோட்டல்களில் பயன்படுத்த முடிவு செய்தோம்.

வாடிக்கையாளர்களின் மேஜையில் டாப்லெட்டுகள் வைக்கப்படும். வாடிக்கையாளர்கள் அந்த டாப்லெட்டில் அவர்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்யலாம். அந்த ஆர்டரை ரோபோக்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். ரோபோக்களுக்கு புரோகிராம் செய்யப்பட்ட சில வாக்கியங்களைக் கொண்டு வாடிக்கையாளரிடம் உரையாடும். இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த ஹோட்டல் திறந்தவுடனே அதிகமான மக்கள் முன்பதிவு செய்தனர். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இதுபோன்று, வேறொரு இடத்தில் இதனுடைய கிளை ஆரம்பிக்கப்படும். அதில் ரோபோக்கள், வாடிக்கையாளர்களை மேஜைக்கு அழைத்துச் செல்லுதல், அடிக்கடிவரும் வாடிக்கையாளர்களை அடையாளம் காணும் வசதிகளுடன் ரோபோக்கள் பணியமர்த்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக