யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/2/18

அரசுப் பள்ளிக்கு வேன் வழங்கிய கிராம மக்கள்!!!

புதுக்கோட்டையில் அரசுப் பள்ளி
மாணவர்களின் சிரமத்தைக் குறைக்க இளைஞர்கள் , கிராம மக்கள் ஒன்றிணைந்து வேன் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி கிராமத்தில் 1973ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் பல துறைகளிலும் சாதித்துவருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அதோடு மாணவர்கள் பள்ளிக்கு நடந்து சென்றுவருவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் அக்கிராம மக்களும், முன்னாள் மாணவர்களும் ஒன்றிணைந்து பள்ளி மாணவர்களுக்கு வேன் ஒன்றை இலவசமாக வழங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் பள்ளி மாணவர்கள், வேன் மூலம் சென்றுவருவதை அரசுப் பள்ளி மாணவர்கள் ஏக்கத்துடன் பார்க்கின்றனர். இந்நிலையில் அரசுப் பள்ளிக்கு மாணவர்களை அழைத்துவரவும் அரசுப் பள்ளியைத் தரம் உயர்த்தவும் திட்டமிட்டு முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராம மக்கள் இணைந்து வேனை இலவசமாக வழங்கியுள்ளனர்.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரனிடம் பொதுமக்கள் வேன் சாவியை வழங்கினர். அவர் பள்ளித் தலைமை ஆசிரியர் சந்திராவிடம் சாவியை வழங்கினார்.

ஒவ்வொரு நாளும் 3 கி.மீ சுற்றளவில் உள்ள அனைத்து மாணவர்களும் வேனில் வந்துசெல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கென தனி ஓட்டுநர் நியமிக்கப்பட்டு அவருக்கான சம்பளத்தையும் டீசலையும் கிராம மக்களே வழங்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் சந்திரா, “ மாணவர்கள் மீது இளைஞர்களும், கிராம மக்களும் அதிக அக்கறையும் அன்பையும் கொண்டு பல உதவிகளைச் செய்துவருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமம் குறைந்துள்ளது. அவர்கள் மேலும் மேலும் சாதனை படைத்துவருகின்றனர் “ என்று கூறினார்.

இதற்கு முன்பு பள்ளியின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களின் கல்விக்காகவும் பள்ளிக்குக் கணினி வாங்கிக் கொடுத்து, கணினிக்குச் சிறப்பு ஆசிரியர், ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர் என மூன்று ஆசிரியர்களைப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நியமித்துள்ளனர்.

இது தவிர 5ஆம் வகுப்பு வரை 19 சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து அவர்கள் எளிதாகப் பள்ளிக்கு சென்றுவர சைக்கிள்களையும் வழங்கியுள்ளனர்.

அரசின் உதவியை எதிர்பார்க்காமல், இந்தப் பள்ளியை தனியாருக்கு இணையாகத் தரம் உயர்த்திவருகின்றனர் அக்கிராம மக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக