யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/2/18

மின்வாரிய ஊழியர்கள் மீண்டும் போராட்டம் அறிவிப்பு!

                                                 

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததைத் 
தொடர்ந்து வரும் பிப்ரவரி 16ஆம் தேதி, மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக மின்வாரிய ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு 2015ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வும், நிலுவைத் தொகையும் இதுவரை வழங்கப்படாத நிலை உள்ளது. இதையடுத்து, மின்வாரியத் தொழிற்சங்கங்கள் கடந்த 23ஆம் தேதியன்று வேலைநிறுத்தம் அறிவித்திருந்தன. வேலைநிறுத்த அறிவிப்பு வெளியானதும் உடனடி நடவடிக்கையாகக் கடந்த மாதம் 22ஆம் தேதி அன்று தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் மின்வாரிய உயர் அதிகாரிகள், தொழிலாளர் நல அதிகாரிகள், தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். அப்போது வரும் 12ஆம் தேதி ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம் காணப்படும் என்று முத்தரப்பு பேச்சுவார்த்தையின்போது அரசின் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமல், மின்சார வாரிய ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, வரும் 16ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம் செய்ய 10 சங்கங்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று மீண்டும் அதிகாரிகள், ஊழியர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனத் தெரிவித்த ஊழியர்கள் திட்டமிட்டபடி 16ஆம் தேதி வேலைநிறுத்தம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக