யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/2/18

தேர்வு முடிவில் தாமதம்; ஆசிரியர்கள், பெற்றோர் அதிருப்தி

பிளஸ் 2 தேர்வு முடிவை மே, 17ம் தேதி வெளியிடப்போவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்ச்சி முடிவில் ஏற்பட்ட தாமதத்தால், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடையே அதிருப்தி நிலவுகிறது. 


தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டசபை தேர்தலுக்கு பின், மே, 17ம் தேதி வெளியாகும் என, அரசு அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் தயார் நிலையில் இருந்தும், தாமதமாக வெளியிட, அரசு எடுத்துள்ள முடிவு, ஆசிரியர்களையும், பெற்றோரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: 

பொதுவாக, மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியானால், அதன் தொடர்ச்சியான பணிகள், ஒரு வாரம் வரை பள்ளிகளில் நீடிக்கும். அவற்றை முடித்துவிட்டு, கோடை விடுமுறையில், குடும்பத்துடன் வெளியூர் செல்ல திட்டமிடுவது ஆசிரியர்கள் வழக்கம். 

இந்த முறை மே, 16ம் தேதி வரை தேர்தல் பணிகள், 17ம் தேதிக்கு பின் பிளஸ் 2 தேர்வு முடிவு, அதன்பின், 25ம் தேதி, 10ம் வகுப்பு தேர்வு முடிவு, அதன் தொடர்ச்சியான பணிகள் என பார்த்து முடிப்பதற்குள், அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவங்கிவிடும். 

மதிப்பீடு அனைத்தும் முடிவடைந்து, தயார் நிலையில் இருந்தும், தேர்வு முடிவு வெளியிட தாமதிப்பது ஏன் என தெரியவில்லை. ஏற்கனவே, இன்ஜினியரிங் மற்றும் கலைக்கல்லூரி விண்ணப்பங்கள் வழங்கப்படும் நிலையில், தேர்வு முடிவு வெளியீடு தாமதம், பெற்றோரையும் ஏமாற்றியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக