யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/3/18

தமிழகத்தில் 8 உயர் கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கியது யூ.ஜி.சி!




தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட, 8 கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது, மத்திய பல்கலைக்கழக மானியக் குழு.
நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தைப் பரிசோதித்து, ஆண்டுதோறும் சிறப்பு அந்தஸ்தை வழங்கிவருகிறது யூ.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு. அதன்படி, இன்று 62 உயர் கல்வி நிறுவனங்களுக்கு முழு சுயாட்சிக்கான அந்தஸ்தை வழங்கியுள்ளது. இதில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம், டெரி உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் தரமான கல்வியை வழங்கிவருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
கல்லூரிகளுக்கு வழங்கப்படும் தன்னாட்சி உரிமை விதிகளின்படி, ஐந்து மத்திய பல்கலைக்கழகம், 21 மாநிலப் பல்கலைக்கழகங்கள், 21 தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் 10 தனியார் பல்கலைக்கழகங்களுக்கு சுயாட்சி அந்தஸ்தை இன்று வழங்கியுள்ளது. இதுகுறித்து இன்று பேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், ' பட்டியலில் இடம்பெற்றுள்ள கல்வி நிறுவனங்கள், சேர்க்கை நடைமுறைகள், கட்டண விதிகள், ஆராய்ச்சி சார்ந்த படிப்புகள் மற்றும் துறைகள் சார்ந்த புதிய படிப்புகளைத் தொடங்குவது, புதிய துறைகள் நிறுவுவது உள்ளிட்டவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.
யூ.ஜி.சி வெளியிட்ட பட்டியலில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், போரூர் ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை அம்ரிதா விஸ்வ வித்யா பீடம், சென்னை டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம், சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக