யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

26/6/18

வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி!

வீடுகளில் சூரியஒளி மின்சாரம் தயாரிப்பதற்காக,
மானிய விலையில் மேற்கூரை அமைக்கும் திட்டத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 1,700 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

 வரும் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதியாகும்.இதுகுறித்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அதிகாரிகள் கூறியதாவது:மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை சார்பில்,மின்கட்டமைப்புடன் கூடிய சோலார் மேற்கூரை திட்டத்தின்கீழ், வீடுகளில் சோலார் மேற்கூரை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. வீடுகள், மருத்துவமனைகள், அறக்கட்டளைகள், என்ஜிஓ-க்கள் ஆகியோருக்கும் இச்சலுகை பொருந்தும். ஒரு கிலோவாட் சூரியஒளி மின்சாரம் தயாரிக்க ரூ.60,000 செலவாகும்.
இதில், ரூ.18,000 மானியமாக வழங்கப்படும்.ஒரு கிலோவாட் சூரியஒளி மின்சாரம் தயாரிக்க தேவையான சோலார் மேற்கூரை அமைக்க குறைந்தபட்சம் 100 சதுர அடி இடம் தேவைப்படும். ஒருகிலோ வாட் மேற்கூரை அமைத்தால் மாதம் ஒன்றுக்கு 250 யூனிட் வரை சோலார் மூலம் மின்னுற்பத்தி செய்ய முடியும்.5 ஆண்டு இலவச பராமரிப்புஇந்த சூரியஒளி மின்சாரத்தைக் கணக்கீடு செய்வதற்காக இருவழி பயன்பாடு மீட்டர் பொருத்தப்படும். சோலார் மேற்கூரை மின் கட்டமைப்புகள் கிரிட்டுடன் இணைக்கப்படும். மாதம் ஒன்றுக்கு ரூ.1,500 வரை மின்சார கட்டணம் மிச்சமாகும். அத்துடன், சோலார் மேற்கூரைகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் 5 ஆண்டுகள் வரை இலவசமாக பராமரிக்கப்படும்.
இத்திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திட்டத்தின்கீழ், கடந்த 2 மாதங்களில் தமிழகம் முழுவதும் இதுவரை 1,700 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு 12 மெகாவாட் அளவுக்கு சூரியஒளி மின்சாரம் தயாரிப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு, வரும் 30-ம் கடைசி தேதியாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக