யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/6/18

பள்ளிப்பட்டில் மாணவர்கள் பாசப்போராட்டத்தின் எதிரொலி: ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் தொடர கல்வித்துறை அனுமதி

ஒரு அரசுப்பள்ளி ஆசிரியருக்காக மாணவர்கள் நடத்திய பாசப்போராட்டம் நாடு முழுவதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் பணியை தொடர கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு உயர் நிலைப் பள்ளியில்  ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்த  பகவான்  பணி நிரவலில் திருத்தணி அருகே அருங்குளம் உயர் நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். 
பகவான்  பணி மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ, மாணவிகள் 280 ேபர், 19ம் தேதி வகுப்புகளை புறக்கணித்து பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

20ம் தேதி பள்ளி விடுப்புச் சான்று பெற பள்ளிக்கு வந்த ஆசிரியர் பகவானை  மாணவர்கள் சுற்றிக்கொண்டு  கதறி அழுத சம்பவத்தால் நெகிழ்ந்து போன ஆசிரியரும்  பாசம் காட்டும் மாணவர்களை  விட்டுச் செல்ல மனமின்றி  கண்ணீர் விட்டு அழுதார். மாணவர்களின் இந்த பாசப்போராட்டம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆசிரியர் பகவானுக்கு பிரபலங்கள் பலரும்  ஆதரவு தெரிவித்து வாழ்த்து கூறியிருந்தனர். இதனால் ஆசிரியர் பகவான்  பணிநிரவல்  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்  கல்வித் துறை அதிகாரிகள்  பகவான்  வெளியகரம் பள்ளி பணியில் தொடர அனுமதி வழங்கியுள்ளனர். இதனை அடுத்து பள்ளி ஆசிரியர் வருகை பதிவேட்டில் மீண்டும் பெயர் சேர்க்கப்பட்டு தொடர்ந்து அவர் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக