யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/7/18

பள்ளி வந்ததும் தோப்புக்கரணம் மாணவருக்கு சூப்பர் பயிற்சி

கோபி:வகுப்பறையில் சுறுசுறுப்பாக இருக்க, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, தோப்புக்கரணம் போட்டு, பயிற்சி அளிக்கப் படுகிறது.

ஈரோடு, கோபி கல்வி மாவட்டத்தில், வேங்கம்மையார் நகரவை உயர்நிலைப் பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியை அலமேலு தலைமையில், எட்டு ஆசிரியர்கள் உள்ளனர். 6 - 10ம் வகுப்பு வரை, 155 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
காலை, 9:30 மணிக்கு, பள்ளி துவங்கியதும், மாணவர்கள் சுறுசுறுப்பாக இருக்க, தோப்புக்கரணம் பயிற்சி அளிக்கின்றனர். ஒவ்வொரு மாணவரும், 10 தோப்புக்கரணம் போடுகின்றனர்.ஆசிரியர்கள் கூறியதாவது:அனைத்து பயிற்சிக்கும் முன்னோடியாக, தோப்புக்கரணம் திகழ்கிறது. இதை செய்வதால், அனைத்து நரம்பு மண்டலத்துக்கும், சீரான ரத்த ஓட்டம் கிடைத்து, மாணவர்கள் சுறுசுறுப்படைவர். காதை பிடித்து, உட்கார்ந்து எழும்போது, மூளை நரம்புகள் துாண்டப்படும்.இதனால், மூளை செயல்பாட்டை ஒருநிலைப்படுத்த முடியும். ஆட்டிசம் குறைபாடு தவிர்க்கப்படும்; கற்றல் குறைபாடு நிவர்த்திஆகும். 
தொடர் பயிற்சியால், வகுப்பு துவங்கும் முன்பே, அவரவர் வகுப்பறையில், மாணவர்கள், தாங்களாகவே ஆர்வமாக தோப்புக்கரணம் போடுகின்றனர். உடல்நிலை சரியில்லாவிடில், கட்டாயப் படுத்துவதில்லை. இதேபோல், நகம் வெட்டுதல், கைகளை சுத்தமாக கழுவுதல், என சுகாதாரத்துக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறோம். இதனால், எங்கள் மாணவர்களுக்கு, தலைவலி, வயிற்றுவலி மற்றும் காய்ச்சல் அறிகுறி ஏற்படுவதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக