யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/7/18

அரசு பள்ளிக்கு கல்விச்சீர்: அள்ளி கொடுத்த மக்கள் :

அரசு துவக்கப் பள்ளிக்கு, ஐந்து டிராக்டர்களில், கிராம மக்கள் கல்விச்சீர் வழங்கினர்.

சேலம் மாவட்டம், முத்தானுாரில், 64 ஆண்டு களாக, அரசு துவக்கப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 127 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு முத்தானுார், கட்டபுளியமரம், விநாயகர் நகர், கட்டியப்பன்புதுார் உள்ளிட்ட கிராம மக்கள், நேற்று கல்விச்சீர் வழங்கினர்.
மேள தாளம் முழங்க, வகுப்பறைக்கு தேவையான ஐந்து பீரோ, டேபிள், சேர், மின் விசிறி, ஸ்டாண்ட், நோட்டு, புத்தகங்களை, ஐந்து டிராக்டர்களில், மக்கள் ஏற்றிச் சென்றனர். பனமரத்துப்பட்டி வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். 

தொடர்ந்து, பள்ளியில் விழா நடந்தது. மாணவ - மாணவியர் பங்கேற்ற, பேச்சு போட்டி, பழமொழி ஒப்புவித்தல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வீரபாண்டி வட்டார கல்வி அலுவலர் மாதவராஜன், பள்ளி புரவலர் திட்டத்தை துவக்கி வைத்தார். சமூக ஆர்வலர்கள் நிதி வழங்கினர்.
சீர் வழங்கிய சிலர் கூறியதாவது: தனியார் பள்ளிகளை விட, இங்கு ஆங்கிலம், கையெழுத்து பயிற்சி சிறப்பாக கற்றுத் தரப்படுகிறது. இதனால், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த, குழந்தைகள் அதிகம் சேர்கின்றனர். பள்ளியில் இரு வகுப்பறை மட்டுமே உள்ளது. இதில் தான், அனைத்து, மாணவ - மாணவியரும் நெருக்கடியாக அமர்ந்து படிக்கின்றனர். பள்ளிக்கு தேவையான கூடுதல் வகுப்பறை கட்டித் தரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதுமை பள்ளி விருது :

அரியலுார் மாவட்டம், சோழன்குடிகாடு கிராமத் தில், அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி, 10 ஆண்டுகளாக, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. 2017 - 18 கல்வியாண்டில், இப்பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வெழுதிய, 81 மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இதனால், தமிழக அரசு, 2017 - 18 கல்வி ஆண்டுக்கான, புதுமைப் பள்ளி விருதுக்கு, சோழன்குடிகாடு பள்ளியை தேர்வு செய்தது. 'இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்' என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக