🍅 தொடக்க கல்வித்துறை இயக்குநர் கருப்பசாமி சுற்றறிக்கை
🌷தமிழகத்தில் அனைத்து தொடக்க, நடுநிலைப்
பள்ளிகளிலும் சுதந்திர தினவிழாவையொட்டி அன்றைய தினம் மரக்கன்றுகள் நடுதல் வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது
🌷இது தொடர்பாக தொடக்க கல்வித்துறை இயக்குநர் கருப்பசாமி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது
🌷 நாட்டுக்கு நல்ல குடிமக்களை உருவாக்குகின்ற உன்னதப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைத்து வகைப் பள்ளிகளிலும் மிகச் சிறப்பான முறையில் ஆக.15 புதன்கிழமையன்று சுதந்திரதினவிழாவைக் கொண்டாட வேண்டும்
போட்டிகள் நடத்த வேண்டும்
🌷 இதையொட்டி தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பள்ளி அளவிலும், ஒன்றிய அளவிலும் மாணவர்களிடையே நாட்டுப்பற்றையும், பண்பாட்டையும் வளர்க்கும் வகையில் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளை நடத்த வேண்டும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு சுதந்திர தினவிழாவில் பரிசகூறி வழங்க வேண்டும்
🌷சுதந்திர தின விழா அன்று அனைத்துப் பள்ளிகளிலும் மரக்கன்றுகள் நடுதல் வேண்டும். மரக்கன்று நடுவதற்கு இடங்களைத் தேர்வு செய்து அந்த இடங்களை மரக் கன்றுகளை நட்டு அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும்
🌷 பள்ளித் தலைமையாசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் வனத் துறையுடன் தொடர்பு கொண்டு மரக்கன்றுகளை இலவசமாகப் பெற்று பள்ளி வளாகத்தில் நடச் செய்ய வேண்டும்
🌷மேலும் பள்ளிகளில் அன்றைய தினம் காலை 9.30 மணியளவில் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.
🌷நாட்டுப் பற்று, பண்பாடு, கலாசாரத்தை விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள், அறிவியல் கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம் என அதில் கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக