
புதுக்கோட்டை,செப்.6:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் மனமுவந்து கேரளா மாநில வெள்ள நிவாரணத்திற்காக ரூ.4 இலட்சத்து 31 ஆயிரத்து 200 மதிப்புள்ள அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள்,பிஸ்கெட் பாக்கெட்கள்,ஆடைகள் மற்றும் பல்வேறு வகையான நிவாரணப் பொருட்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினார்கள்..
அதனைத் தொடர்ந்து தலைமைஆசிரியர்கள் சேகரித்து சிப்பங்களாக கட்டி முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்..
அதனைத் தொடர்ந்து நிவாரணப் பொருட்கள் அனைத்தும் இன்று மாலை 06-09-2018(வியாழக்கிழமை) லாரியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.வனஜா திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரக அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஆர்.ஜீவானந்தம், உயர்நிலை ஆர்.கபிலன் ஆகியோர் கலந்து கொண்டனர்....
இவ்வாறாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு மண்டல அளவில் பல்வேறு மாவட்டங்களின் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கான வெள்ள நிவாரணப் பொருட்கள்07-09-2018(வெள்ளிக்கிழமை) நாளை மதியம் மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது... கேரள வெள்ள நிவாரணத்திற்கு மனமுவந்து நிவாரணப் பொருட்கள் வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட பள்ளி மாணவர்களை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக