வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் அரசுப் பள்ளியை தத்தெடுத்து அதற்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார்.
* வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த நெரிஞ்சந்தாங்கல் கிராமத்தில்அரசு துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 1958 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த பள்ளி , சரியாக சீரமைக்கப்படாததால் 44 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.
* பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் மாணவர்கள் வேறு பள்ளிக்கு செல்லும் நிலையும் இருந்து வந்தது. இந்த நிலையில் தான் இந்த பள்ளியை தத்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ரவி.
* சோளிங்கர் பேருந்து நிலையத்தில் இனிப்பு கடை நடத்தி வரும் ரவி, இந்த அரசுப் பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க முன்வந்தார். போஸ்டர்கள், விளம்பர பேனர்கள் வைப்பதற்கு ஆகும் செலவை பள்ளிக்கு கொடுக்க முன் வந்தால் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்பதை உணர்ந்த அவர் அதற்கான முயற்சியில் இறங்கினார்.
* மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதிகள், விளையாட்டு பூங்கா உள்ளிட்டவற்றை அவர் செய்து கொடுத்தார். வகுப்பறையில் மின்விசிறி போன்றவற்றை செய்து கொடுத்துள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்..
* பள்ளியின் பக்கம் செல்லாததால் படிப்பின் அருமையை உணர்ந்ததாக கூறிய ரவி, மாணவர்களின் நலனே தனக்கு முக்கியம் என்றும் கூறியுள்ளார்.5 லட்ச ரூபாயில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த ரவிக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக