வருகிற ஜனவரி 21ம் தேதி முதல் அரசுப்பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகளில் இருப்பது போன்று அரசு பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் முன்னதாகவே அறிவித்திருந்தார். இது தொடர்பாக அரசு, பள்ளிக்கல்வித்துறையுடன் ஆலோசனை நடத்தி வருகிறது என்றும் விரைவில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு அமலுக்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், இன்று ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், "இந்தியாவில் முதன்முறையாக மாணவர்களின் முகங்களோடு கூடிய வருகைப்பதிவேடு, சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து இது அடுத்தடுத்த பள்ளிகளில் கொண்டுவரப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும், தமிழக அரசின் முடிவுக்கேற்ப வருகிற ஜனவரி 21ம் தேதி முதல் அரசுப்பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக