யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/12/18

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, 'டிஜிட்டல்' சான்றிதழ் வழங்கப்படும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, 'டிஜிட்டல்' சான்றிதழ் வழங்கப்படும் என, சி.பி.எஸ்.இ., 
 அறிவித்துள்ளது.மத்தியஇடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில்செயல்படும் பள்ளிகளில், ஆசிரியர்களாக பணிபுரிய, மத்தியஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.



நடப்பு கல்வி ஆண்டுக்கான தேர்வு, நேற்று முன்தினம், நாடு முழுவதும்நடந்தது.தேர்வுக்காக, 92 நகரங்களில், 3,000க்கும் மேற்பட்ட மையங்கள்அமைக்கப்பட்டன. தேர்வுக்கு, 10 லட்சம் பெண்கள் உட்பட, 17 லட்சம் பேர்அனுமதிக்கப்பட்டனர். தேர்வுக்கான விடை திருத்தம் முடிந்து, இரண்டுமாதங்களில் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, டிஜிட்டல் சான்றிதழ் மட்டுமேவழங்கப்படும் என, சி.பி.எஸ்.இ., நேற்று அறிவித்தது.


சி.பி.எஸ்.இ., செயலரும், ஆசிரியர் தகுதி தேர்வின் இயக்குனருமான, அனுராக் திரிபாதி, இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அதன்விபரம்:மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, மத்திய அரசின், 'டிஜி லாக்கர்' வழியாக, டிஜிட்டல் சான்றிதழ்வழங்கப்படும். இந்த சான்றிதழில், கியூ.ஆர்., கோடு இருக்கும். இதைபயன்படுத்தி, நாட்டிலுள்ள எந்த கல்வி மற்றும் வேலைவாய்ப்புநிறுவனமும், சான்றிதழின் உண்மை தன்மையை அறிந்துகொள்ளலாம்; தேர்வரின் விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.



தேர்வில் தேர்ச்சி பெறும் பட்டதாரிகள், இணையதளத்திலும், 'மொபைல் ஆப்' வழியாகவும், சான்றிதழ்களை பதிவிறக்கம்செய்யலாம். இந்த முறையால், போலி சான்றிதழ்கள் தடுக்கப்படும். சான்றிதழ்களின் உண்மை தன்மையை அறிந்து கொள்ள, நீண்டகாலம் தேவைப்படாது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், காகித பயன்பாடும் தவிர்க்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக