யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/6/17

7 வது ஊதியம் ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கான அனைத்து ஊதியத் தொகையின்கீழ் திருத்தப்பட்ட ஊதியம்

7வது சம்பள கமிஷனின் பரிந்துரையின் படி, மத்திய அரசு ஊழியர்களின் மாத வருமானம் ரூ .7,000 இலிருந்து ரூ. 18,000 ஆக குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் திருத்தப்பட்ட வருமானம் 9,300 முதல் 34,800 ஊதியம் வரை அதிகரித்துள்ளது. 4200, 4600, 4800 மற்றும் 5400 ஆகியவற்றிலிருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் ஊதியம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது மேலும் 40 நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
 *5,200-20,200 ஊதிய குழுவினால் மத்திய அரசாங்க ஊழியர்கள் வகுப்பு 1800 முதல் 2800 வரை ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இது மேலும் 40 மட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
 *7 வது ஊதியம் ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கான அனைத்து ஊதியத் தொகையின்கீழ் திருத்தப்பட்ட ஊதியம்.
   *7th Pay Commission: Revised pay matrix under all pay bands for central government employees.    
 *7 வது ஊதியம் ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கான அனைத்து ஊதியத் தொகையின்கீழ் திருத்தப்பட்ட ஊதியம் பாதுகாப்பு பணம் மேட்ரிக்ஸ்.    *பாதுகாப்பு பேட் மேட்ரிக்ஸ், முந்தைய 24 நிலைகளாக பிரிக்கப்பட்டது இப்போது சிவில் பே மேட்ரிக்ஸ் போன்ற 40 நிலைகளில் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 7 வது ஊதியக் குழுவின் கீழ் திருத்தங்கள் செய்ய அனுமதி அளித்தது.  *7 வது ஊதியம் ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கான அனைத்து ஊதியத் தொகையின்கீழ் திருத்தப்பட்ட ஊதியம்.  
 *7 வது ஊதியம் ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கான அனைத்து ஊதியத் தொகையின்கீழ் திருத்தப்பட்ட ஊதியம் ஓய்வூதிய திருத்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 7 வது சம்பள கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2016 க்கு முந்தைய ஓய்வூதியம் பெறும் மத்திய ஊதியக் குழுவால் பரிந்துரை செய்யப்பட்ட ஓய்வூதிய மதிப்பீட்டு முறையை மாற்றியமைத்துள்ளது.

4/6/17

தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து இந்திய அரசு சேவை அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் 2016-2017-ம் ஆண்டுக்கான பொது சேமநல நிதி வருடாந்திர கணக்கு அறிக்கை தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலக வலைதளத்தில் (www.agae.tn.nic.in) இம்மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

👉 பொது சேம நல நிதியின் கணக்கு இருப்பை அறிவது போன்றே சந்தாதாரர்கள் இந்த வலைதளத்தில் இருந்து தங்களின் 2016-2017 வருடாந்திர கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் நாடே திரும்பிப்பார்க்கும் அறிவிப்புகளை ஜூன் 6 ம் தேதி வெளியிட போகிறோம்" - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

பள்ளிக் கல்வித் துறையில் நாடே திரும்பிபார்க்கும் வகையில் 41 அறிவிப்புகளை முதலைமைச்சரிடம் அனுமதி பெற்று வரும் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.



🔸 எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவியேற்ற பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமிக்கபட்டார்.


🔹 இதையடுத்து அவர் கல்வித்துறையில் புதிது புதிதாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

🔸 பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பு சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

🔹 அதில் இனி மதிப்பெண் அடிப்படையில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்கள் கிடையாது எனுவும் இனிமேல் கிரேடு முறையில் தான் மார்க் வரும் எனவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

🔸 மேலும் இனிவரும் காலங்களில் பனிரெண்டாம் வகுப்பிற்கு வழங்கபட்டு வந்த 1200 மதிப்பெண்களை குறைத்து 600மார்க்குகலாக மற்றம் செய்வதாக அறிவித்தார்.

🔹 இதைதொடர்ந்து பதினொன்றாம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு என அறிவித்து கல்லூரிகளில் உள்ளது போல அரியர்ஸ் முறை இதில் பின்பற்றப்படும் என தெரிவித்தார்.

🔸 இந்நிலையில் தற்போது புதிதாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

💥 இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

🔸 மாணவர்களின் எதிர்காலத்தை கருதி 41  அறிவிப்புகளை வெளியிட உள்ளோம்.

🔹 இதுகுறித்த அறிவிப்பு வரும் 6 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி அனுமதியுடன் வெளியிடப்படும்.

🔸 இந்த அறிவிப்புகளை கண்டு நாடே திரும்பிபார்க்கும் வகையில் இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

🔹 இதனால் அந்த அறிவிப்புகள் என்னவாக இருக்கும் என மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேலூரில் தகவல்

 தற்காலிக ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணை விரைவில் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

விரைவில் 41 அரசாணைகள் வெளியிடப்படும் -அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

'நீட்' தேர்வை ரத்து கோரி ஐகோர்ட்டில் மேலும் மனு

மதுரை, 'நீட்' தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை ஜொனிலா உட்பட, 10 மாணவர்கள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:'இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, மே 7ல் நடந்தது. அனைத்து மாநிலங்களிலும், ஒரே மாதிரியான வினாக்கள் இடம்பெறவில்லை. தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும். மே 7ல் நடந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில், 'நீட்' மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

இதை ஏற்று, 'நீட்' தேர்வு முடிவை வெளியிட இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை ஜூன் 12க்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் ஒத்திவைத்தார்.இந்நிலையில், புதுக்கோட்டையை ஜெரோபோ கிளாட்வின், உயர்நீதிமன்ற கிளையில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், 'பிளஸ் 2 வில், 1,177 மதிப்பெண் பெற்றுள்ளேன். 'நீட்' தேர்வு வினாக்கள், ஒரே மாதிரியாக இடம்பெறாததால், அதனடிப்படையில் மருத்துவப் படிப்பிற்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்ய முடியாது. 'நீட்' தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை நடத்த, மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தார். மனு, விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும்.

தனியார் பள்ளிகள் வெளியேற்றும் மாணவர்களை சேர்க்க உத்தரவு

தனியார் பள்ளிகள் வெளியேற்றும் மாணவர்களை, அரசு பள்ளிகளில் சேர்க்க தயங்கக் கூடாது' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

புதிய கல்வி ஆண்டு நேற்று துவங்கியது. கோடை விடுமுறை முடிந்து, வரும், 7ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கு முன், மாணவர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்யும்படி, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அனுப்பியுள்ள 
சுற்றறிக்கை:
• உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 6ம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அருகில் உள்ள தொடக்க பள்ளி, நடுநிலை பள்ளிகளில் இருந்து, மாணவர்களின் விபரங்களை பெற்று சேர்க்க வேண்டும்
• மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு, பள்ளி வளாகங்களை துாய்மைப்
படுத்த வேண்டும்
• வகுப்பறை கட்டடங்களின் உறுதித்தன்மை, மின் சுவிட்சுகளின் செயல்பாடுகள், மேற்கூரையின் தன்மை, கழிப்பறை பராமரிப்பு, குடிநீர் வசதி போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தேர்ச்சியை காரணம் காட்டி, தனியார் பள்ளிகளிலிருந்து, மாணவர்கள் வெளியேற்றப்பட்டால், அவர்களை அரசு பள்ளிகளில், ஒன்பது, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் சேர்க்க, தயக்கம் காட்டக் கூடாது. 
அதேநேரம், எந்த பள்ளியிலிருந்து மாணவர் வெளியேற்றப்பட்டார் என்ற தகவலை, இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 

உதவி கமிஷனர் பதவிதகுதித்தேர்வு அறிவிப்பு - TNPSC

சென்னை, : இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் பதவிக்கு, முதல் நிலை தகுதி தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தமிழகத்தில், இந்து அறநிலைய துறையில், நிர்வாக பிரிவு உதவி கமிஷனர் பதவிக்கு, மூன்று காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான முதல்நிலை தகுதி தேர்வு, செப்., 3ல் நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை, இம்மாதம், 28 வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். மேலும், விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,யின், 
www.tnpsc.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

சி.பி.எஸ்.இ., அனுமதி பெறாமல் பள்ளிகள் முறைகேடு

திண்டுக்கல், : மத்திய அரசு இடைநிலைக் கல்வி வாரிய அனுமதி பெறாமல், பல பள்ளிகள், சி.பி.எஸ்.இ., என, விளம்பரம் செய்து மாணவர்களிடம் வசூல் செய்வதில் தீவிரம் காட்டுகின்றன. 

'நீட்' தேர்வு
மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வு; மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள்; ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுகளுக்கு, சி.பி.எஸ்.இ., என்ற மத்திய அரசின் இடைநிலைக் கல்வி பாடத்திட்டத்தின் அடிப்படையில், பெரும்பாலான வினாக்கள்
கேட்கப்படுகின்றன. இதனால், தமிழகத்தில் செயல்படும், பல தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., கல்வித் திட்டத்திற்கு மாறி வருகின்றன.இக்கல்வி திட்டத்தை செயல்படுத்த, பல கட்ட ஆய்வுகள் இருக்கின்றன. சில பள்ளிகளே, அவற்றை முறையாக கடைபிடித்து அனுமதி பெற்றுள்ளன. பெரும்பாலான பள்ளி கள் அனுமதி பெறுவதற்காக, விண்ணப்பங்களை மட்டும் அனுப்பி உள்ளன.இன்னும் சில பள்ளி கள் விண்ணப்பிக்காம லேயே, சி.பி.எஸ்.இ., என விளம்பரம் செய்து, பெற்றோரிடம் கட்டண வசூலில் மும்முரம் காட்டுகின்றன.பெற்றோரும், சி.பி.எஸ்.இ., பள்ளிக்கான அனுமதி அல்லது அங்கீகாரம் இருக்கிறதா எனப் பார்க்காமலேயே பிள்ளைகளைச் சேர்த்து வருகின்றனர்.
விதிமுறைகள்பெற்றோர், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான விதிமுறைகளை தெரிந்து கொள்வது அவசியம். விதிமுறைகள் வருமாறு: பள்ளி பரப்பளவு, 2 ஏக்கர் இருக்க வேண்டும். வகுப்பறை, 500 ச.அடி; ஆய்வகம் 600 ச. அடியில் இருக்க வேண்டும். நுாலகம், படிக்கும் அறையுடன், 14 மீ.,க்கு 8மீ., என்ற அளவில் இருக்க வேண்டும். கணிப்பொறி, கணித ஆய்வகங்கள் தனித்தனியாக இருக்க வேண்டும்.
பள்ளிக்கான தற்காலிக அனுமதி பெறுவோர், அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரியிடம் தடையில்லா சான்று பெற்று, அத்துறை மூலம், மத்திய கல்வி வாரியத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். 
தமிழக அரசின் அங்கீகாரத்தையும், மத்திய அரசு இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒரு வளாகத்தில், மெட்ரிக் அல்லது சி.பி.எஸ்.இ., பள்ளி மட்டுமே இயங்க முடியும்.
எழுத வேண்டும்அனுமதி எண்ணை, பள்ளி அறிவிப்பு பலகையில் கட்டாயம் எழுத வேண்டும் என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்து

100 சதவீத தேர்ச்சி பெற்ற சென்னை பள்ளிகள்

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொது தேர்வில், சென்னையிலுள்ள பல பள்ளிகள், ௧௦௦ சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
சென்னை, கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில், தேர்வு எழுதிய 2௫௮ மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில், 59 பேர், தரவரிசையான, சி.ஜி.பி.ஏ.,வில், 10க்கு, 10 மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவர்களை, பள்ளியின் முதுநிலை முதல்வர் அஜீத் பிரசாத் ஜெயின் பாராட்டினார்.

அண்ணாநகர், எஸ்.பி.ஓ.ஏ., ஸ்கூல் அண்ட் ஜூனியர் காலேஜ் பள்ளியில், தேர்வு எழுதிய 805 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 199 மாணவர்கள், ஏ 1 கிரேடான, 10க்கு, 10 சி.ஜி.பி.ஏ., மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்களை,
பள்ளியின் முதல்வர் ராதிகா உன்னி வாழ்த்தினார்.
ராஜா அண்ணாமலைபுரம், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில், 640 பேர் தேர்வு எழுதியதில், அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 88 மாணவர்கள், 10க்கு, 10 மதிப்பெண்ணுடன் சி.ஜி.பி.ஏ., தரம் பெற்றுள்ளனர். அவர்களை, பள்ளியின் தாளாளர் மீனா முத்தையா மற்றும் முதல்வர் அமுதலஷ்மி வாழ்த்தினர்.
சென்னை ஐ.ஐ.டி., வளாகத்திலுள்ள, கேந்திரிய வித்யாலயா பள்ளியில், தேர்வு எழுதிய, 129 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 33 பேர், 10க்கு, 10 மதிப்பெண் தரம் பெற்றுள்ளனர். அவர்களை, சென்னை மண்டல துணை கமிஷனர் எஸ்.எம்.சலீம் மற்றும் முதல்வர் மாணிக்கசாமி வாழ்த்தினர்.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவு திருவனந்தபுரம் மண்டலம் முன்னிலை

சென்னை, :சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வு முடிவு கள், நேற்று வெளியாகின. கடந்த ஆண்டை விட, ௫ சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. வழக்கம் போல, திருவனந்தபுரம் மண்டலம், அதிக தேர்ச்சி பெற்றுள்ளது. 

16 லட்சம் பேர்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச்சில் நடந்தது; 16 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகளை, சி.பி.எஸ்.இ., வாரியம் நேற்று வெளியிட்டது. இதில், 90.95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
கடந்த ஆண்டு, 96.21 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு, 5.26 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. திருவனந்தபுரம் மண்டலம், 99.85 சதவீத தேர்ச்சியுடன், வழக்கம் போல, தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. 
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, புதுச்சேரி, கோவா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளை உள்ளடக்கிய, சென்னை மண்டலத்தில், 99.62
சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

'கிரேடு' முறை 

இந்த தேர்வில், விடைத்தாள்கள் மதிப்பிடப்பட்டு, மொத்த மதிப்பெண்களுக்கு, சி.ஜி.பி.ஏ., என்ற, தர வரிசை குறிக்கப்பட்டுள்ளது. மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய, ஐந்து பாடங்களுக்கு, மொத்தம், 10 சி.ஜி.பி.ஏ., மதிப்பெண்களுக்கு, 'கிரேடு' முறை வழங்கப்பட்டுள்ளது. 
இந்த கிரேடு அடிப்படையில், உயர்கல்வி தகுதி; மதிப்பெண்ணை உயர்த்தும் தேர்வு தகுதி, தகுதியில்லை என, 10 விதமான குறிப்புகள், மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சதவீத கணக்கீடு எப்படி?

சி.பி.எஸ்.இ., தேர்வில், ஒவ்வொரு பாடத்திற்கும், 10 தர மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள், ஐந்து பாடங்களிலும் தாங்கள் எடுத்த, தர மதிப்பெண்களை கூட்டி, அதை ஐந்தால் வகுத்தால், மொத்தம் எவ்வளவு சி.ஜி.பி.ஏ., என்ற, தரவரிசை கூட்டுத் தொகை வரும். இதுவும், 10 மதிப்பெண்களுக்குள்
மட்டுமே வரும். பின், மதிப்பெண் சதவீதத்தை தெரிந்து கொள்ள, சி.ஜி.பி.ஏ., எண்ணை, 9.5 என்ற எண்ணால் பெருக்கினால், மொத்தம் எத்தனை மதிப்பெண் என்பது, சதவீதமாக வரும். உதாரணமாக ஒருவர், ஒன்பது சி.ஜி.பி.ஏ., எடுத்திருந்தால், அவரது மொத்த மதிப்பெண் சதவீதம், 85.5 சதவீதமாகும்.

மீண்டும் அமலாகிறது மதிப்பெண் முறை

நடப்பு கல்வி ஆண்டு முதல், சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மீண்டும் மதிப்பெண் மற்றும் 'டாப்பர்ஸ்' முறைஅமலாகிறது. சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புக்கு, ௨௦௧௦ல், பொதுத்தேர்வு முறை மாற்றப்பட்டு, பள்ளி அளவிலான தேர்வு அமலானது. விருப்பப்படும் மாணவர்கள் மட்டும், பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். பின், 2011ல், மதிப்பெண் முறை மாற்றப்பட்டு, கிரேடு முறை அமலானது. 

இந்நிலையில், பள்ளி அளவிலான தேர்வால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி, மீண்டும் பொதுத்தேர்வு கட்டாயம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நடப்பு கல்வியாண்டில், பொதுத்தேர்வு கட்டாயமாகிறது. 
அத்துடன், வரும் பொதுத்தேர்வில், கிரேடு முறை ஒழிக்கப்பட்டு, மீண்டும் மதிப்பெண் மற்றும் முதல் மூன்று இடங்களை பெறும், 'ரேங்க்' பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. நேற்று வெளியான, சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவு தான், கிரேடு முறையில் கடைசியானது. இனி வரும் தேர்வு முடிவுகளில், மதிப்பெண் படி மாணவர்கள் தேர்ச்சி கணக்கிடப்பட உள்ளது.

பள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு

அரசு பள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'ஆதார்' எண் மற்றும் மாணவர் வருகை நாட்களை, பள்ளி மாற்று சான்றிதழில் குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலிருந்து, வேறு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு, இதுபோன்ற விபரங்கள் அடங்கிய, மாற்று சான்றிதழ் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
புதிய மாற்று சான்றிதழில், 18 விதமான விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன. முதல்முறையாக, ஆண், பெண் இனத்துடன், மூன்றாம் பாலினம் சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பெயர், பெற்றோர், பாதுகாவலர் பெயர், படித்த பள்ளி, முந்தைய வகுப்பு போன்ற, பல விபரங்கள் பதிவு செய்யப்பட 
உள்ளன. அதேபோல, ஏதாவது சலுகை கட்டணத்தில் சேர்ந்தவரா; கல்வி உதவித் தொகை பெற்றவரா என்ற, அம்சமும் சேர்க்கப்பட்டு
உள்ளது. மேலும், மாணவரின் ஆதார் எண், அந்த மாணவன் கடைசியாக படித்த வகுப்பில், பள்ளிக்கு வருகை தந்த நாட்களின் சதவீதத்தை குறிப்பிடவும் உத்தர
விடப்பட்டுள்ளது. இதன்மூலம், குறைந்த நாட்கள் வந்திருந்தால், அந்த மாணவர்களுக்கு, மற்ற பள்ளியில் இடம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

WHATSAPP & FACE BOOK ஜூன்-6 உலாவரும் வதந்திகள்??? ( உண்மைகளா )

ஜூன்-6 உலாவரும் வதந்திகள்- 

*#ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் அதிகபட்சம் 5 ஆண்டுகள் மற்றுமே பணியாற்றமுடியும் அடுத்தகல்வி ஆண்டு முதல் எனத்தகவல்.

*#நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் ஒரே அலகு UNIT ஆக மாற்றம் எனத்தகவல்.

*#கூடுதலாக 12 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்படும் எனத்தகவல்.


*#அனைத்துவகை பள்ளிகளில் யோகா ஆசிரியர் நியமனம் எனத்தகவல்.

*#பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரப்படுத்தலாம் எனத்தகவல்.

*#6வது வகுப்பு முதல் கணினியியல் கல்வி ஒரு பாடமாக கட்டாயமாக கொண்டுவரப்படும் எனத்தகவல்.

*#தொடக்கக்கல்வியில் மாவட்டத்தில் உள்ள 1முதல்5 வரையிலும் அனைத்து ஓன்றியங்களையும் இனைத்து மாவட்ட அளவில் ஒரே அலகின் கீழ் கொண்டுவரப்படும் எனத்தகவல்.

*#அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வித்துறையில் உள்ள வேலைவாய்ப்புகளில் 10% வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனத்தகவல்.

6ஆம் தேதி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிக்கும் 41அறிவிப்பில் முதல் அறிவிப்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்(தமிழக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் எம்எல்ஏ,எம்பி உள்பட )பிள்ளைகள் அனைவரும் கட்டாயம் அரசுப்பள்ளியில் சேர்க்க சட்டம் இயற்றப்படும் என அறிவிக்கப்படும் எனத்தகவல்

2/6/17

Student's are advised not to take admission in any M.Phil/P.hd., Programme through Distance Education - UGC..

PRESS RELEASE COPY-12-ம் வகுப்பு விடைத்தாள் நகல் நாளை பிற்பகல் தேர்வுத் துறை இணையதளத்தில் வெளியீடு - தேர்வுத் துறை அறிவிப்பு.



09/07/2017 மற்றும் 23/07/2017 ஆகிய இரு தினங்களில் வாக்காளர் சிறப்பு முகாம்

மாற்று சான்றிதழ் - சில விவரங்கள் :

தொடக்க கல்வித்துறை மாற்று சான்றிதழின் அடிக்கட்டு பள்ளியில் இருக்க வேண்டிய ஆவணம் என்பதால் , மாற்று சான்றிதழின் விவரங்கள் முன்புறம்
இரண்டு A4 பேப்பர் அளவில் இருக்க வேண்டும் . நடுவில் கிழிப்பதற்கு வசதியாக துளையிட்ட தாளாக இருக்க வேண்டும் . நூறு மாற்று சான்றிதழ்கள் கொண்ட பைண்டிங் செய்ய பட்ட புத்தகமாக இருக்க வேண்டும் . மாற்று சான்றிதழின் இடப்பக்கம் உள்ள அனைத்து விவரங்களும் வலப்புறம் இருக்க வேண்டும் . இடப்பக்கம் உள்ள மாற்று சான்றிதழின் அடிக்கட்டையில் விவரங்களை பூர்த்தி செய்து , அதே விவரங்களை வலது பக்கம் உள்ள மாற்று சான்றிதழில் பூர்த்தி செய்து , இடது பக்க சான்றிதழில் பெற்றோரிடம் கையொப்பம் பெற்று , பின்னர் வலது பக்கம் உள்ள சான்றிதழை ஒப்படைக்க வேண்டும் . இடது பக்கம் உள்ள அடிக்கட்டு சான்றினை முக்கிய பதிவேடாக பாதுகாக்க வேண்டும் . இதில் உள்ள தாள் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும் . சான்றின் முன் பக்கம் , பின்பக்கம் அனைத்து விவரங்களும் பள்ளியில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் பூர்த்தி செய்ய வேண்டும் . Xerox எடுக்காமல் , பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகமாக வாங்க வேண்டும் .


எஸ்பிஐ.,ல் எதற்கெல்லாம் கட்டணம் :

SBI - இன்று முதல் அமல்படுத்தியுள்ள சேவை கட்டணம் என்னென்ன? எதற்கெல்லாம் கட்டணம்?


நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவித்துள்ள
சேவை கட்டணம் இன்று (ஜூன் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சேவை கட்டணம் குறித்து பல குழப்பங்கள் நிலவி வருகிறது. இதற்கு எஸ்பிஐ தரப்பில் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

1. 'எஸ்பிஐ பேங்க் பட்டி' (SBI Bank Buddy) எனப்படும் வங்கி ஆப்சை பயன்படுத்தி மொபைல் வாலட் மூலம் ஏடிஎம்.,ல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.

2. மற்ற அனைத்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களும் ஏடிஎம்.,ல் மாதம் 8 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம்.

3. இதில் மெட்ரோ நகரங்களில் வசிப்போர் 5 முறை எஸ்பிஐ ஏடிஎம்.,களிலும், 3 முறை மற்ற வங்கி ஏடிஎம்.,களிலும் பணம் எடுக்கலாம். மெட்ரோ நகரங்களில் இல்லாதவர்கள் மாதம் 10 முறை வரை சேவை கட்டணம் இல்லாமல் ஏடிஎம்.,ல் பணம் எடுக்கலாம்.

4. அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்போர் மாதத்திற்கு 4 முறை மட்டும் ஏடிஎம்.,ல் இருந்து கட்டணம் இன்றி பணம் எடுக்கலாம் என்ற வரைமுறை பொருந்தும்.

5. ஏழ்மை நிலையில் இருப்போர் வங்கிக் கணக்கில் அதிகம் சேமிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த 4 முறை மட்டுமே பணம் எடுக்கமுடியும் என்ற வரையறை வைக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இவர்களிடம் இருந்து ஆண்டு பராமரிப்பு தொகை பிடித்தம் செய்யப்படுவதில்லை.

6. ஆன்லைன் பணபரிமாற்றம் : ஜூன் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையின்படி, ஐஎம்பிஎஸ் வழியாக ஆன்லைனின் பணம் பரிமாற்றம் செய்பவர்கள், ரூ.1 லட்சம் வரை பரிமாற்றம் செய்தால் ரூ.5 உடன் சேவை வரி வசூலிக்கப்படும்.

ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை பணபரிமாற்றம் செய்பவர்களிடம் ரூ.15 உடன் சேவை வரி வசூலிக்கப்படும்.

ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பரிமாற்றம் செய்பவர்களிடம் ரூ.25 உடன் சேவை வரி வசூலிக்கப்படும்.

7. அழுக்கு மற்றும் கிழிந்த நோட்டு பரிமாற்றம் : 20 க்கும் மேற்பட்ட அழுக்கு அல்லது கிழிந்த நோட்டுக்களையோ வாடிக்கையாளர் மாற்றினால்அவர்களிடம் ரூ.2 உடன் சேவை கட்டணம் ஒவ்வொரு நோட்டுக்கும் வசூலிக்கப்படும்.

ரூ.5000 க்கும் மேலான மதிப்புடைய அழுக்கு மற்றும் கிழிந்த நோட்டுக்களுக்கும் இது பொருந்தும்.

8. செக் புக் : அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், 10 செக் தாள்கள் கொண்ட

புக்கிற்கு ரூ.30 உடன் சேவை வரியும், 25 செக் தாள்கள் கொண்ட புக்கிற்கு ரூ.75 உடன் சேவை வரியும், 50 செக் தாள்கள் கொண்ட செக் புக்கிற்கு ரூ.150 உடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.

9. ஏடிஎம்., கார்டுகளுக்கு கட்டணம் : ஜூன் 1 ம் தேதியிலிருந்து புதிய டெபிட் கார்டுகளுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும். ரூபே கிளாசிக் கார்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும்.


10. பணம் எடுப்பதற்கான கட்டணம் : அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்போர் மாதத்திற்கு 4 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம். அதன் பிறகு ஒவ்வொரு முறை பணம் எடுப்பதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும். எஸ்பிஐ வங்கியில் ரூ.50 உடன் சேவை வரியும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்.,களில் பணம் எடுத்தால் ரூ.20 உடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.

June diary - 2017

June-1.New academic year begins.

June - 1 BT s dist to dist transfer counseling continues (DSE)

June - 1: Last date to apply HSE instant exam (+2)

June - 2: SGT to BT promotion (DSE)

June - 2: Last day to apply PG TRB


June - 3.Last date to apply SSLC instant exam

June - 3: Grievance day likely (DEE).

June - 7: School reopens

June - 10: Grievance day likely (DSE).

June - 22: RH Shabha Kahdar

June - 23: Supplementary exam for XII begins

June - 26: HL Ramzan


June - 28: Supplementary exam for X begins.

பள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு

அரசுபள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழில், மாற்றம்
செய்யப்பட்டுள்ளது. 'ஆதார்' எண் மற்றும் மாணவர் வருகை நாட்களை, பள்ளி மாற்று சான்றிதழில் குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலிருந்து, வேறு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு, இதுபோன்ற விபரங்கள் அடங்கிய, மாற்று சான்றிதழ் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய மாற்று சான்றிதழில், 18 விதமான விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன. முதல்முறையாக, ஆண், பெண் இனத்துடன், மூன்றாம் பாலினம் சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பெயர், பெற்றோர், பாதுகாவலர் பெயர், படித்த பள்ளி, முந்தைய வகுப்பு போன்ற, பல விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன. அதேபோல, ஏதாவது சலுகை கட்டணத்தில் சேர்ந்தவரா; கல்வி உதவித் தொகை பெற்றவரா என்ற, அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், மாணவரின் ஆதார் எண், அந்த மாணவன் கடைசியாக படித்த வகுப்பில், பள்ளிக்கு வருகை தந்த நாட்களின் சதவீதத்தை குறிப்பிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், குறைந்த நாட்கள் வந்திருந்தால், அந்த மாணவர்களுக்கு, மற்ற பள்ளியில் இடம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்

இடைநிலை ஆசிரியர் ஒதுக்கீடு : அரசு அறிவிப்பால் குழப்பம்

முதுநிலை ஆசிரியர் நியமனத்தில், இடைநிலை ஆசிரியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திருப்பது, ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு உயர்
மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2,500க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், 1,663 இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், ஜூலை, 7ல், தேர்வு நடத்தப்படுகிறது.


 இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை புதிய அரசாணை பிறப்பித்துள்ளது. அதில், 'முதுநிலை ஆசிரியர் நேரடி நியமனத்தில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 10 சதவீதம் ஒதுக்கப்படும். தகுதி யானவர்கள் விண்ணப்பம் அனுப்ப, இன்று வரை அவகாசம் அளிக்கப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.

இதற்கு, ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி கொடுப்பதாகக் கூறி, நேரடி நியமனம் செய்வதால், அவர்கள் இதுவரை பணியாற்றிய காலம் முடிவுக்கு வந்து, புதிய நியமனமாக கருதப்படும். இந்த உத்தரவை, பதவி உயர்வாக மாற்றினால் தான், ஏற்கனவே பணியாற்றிய காலமும் பணிமூப்பு கணக்கில் வரும் என்கின்றனர்.


இதற்கிடையில், 'பட்டதாரி ஆசிரியர்களுக்கும், முதுநிலை பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

1,111 ஆசிரியர் பணியிடம் : ஜூன் 8ல் சான்றிதழ் சரிபார்ப்பு

அரசுபள்ளிகளில் 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூன், 8 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 286
பட்டதாரி ஆசிரியர்; 623 பின்னடைவு இடங்கள், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், 202 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என, 1,111 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த இடங்கள், ஏற்கனவே நடந்த ஆசிரியர்


 தகுதிக்கான, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலம், நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டது.அதனால், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களின் கூடுதல் விபரங்களை பதிவு செய்ய, மார்ச், 10 முதல், 23 வரை, அவகாசம் வழங்கப்பட்டது. இதில், கல்வித்தகுதி உள்ளிட்ட பல்வேறு விதிகளின் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வானோர் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.


'ஜூன், 8 முதல், 10 வரை, சென்னை, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், காலை, 10:00 மணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். அழைப்பு கடிதத்தை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, இதில் பங்கேற்கலாம்' என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வில் மறுமதிப்பீடு 'நோ'

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 28ல் வெளியாகின. மாணவர்களுக்கு, 'டிஜி லாக்கர்' என்ற,
டிஜிட்டல் முறையில், மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விடைத்தாள் ஆய்வுக்கு, ஜூன், 5க்குள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.


 விடைத்தாள் ஆய்வில், மதிப்பெண் மாற்றம் இருந்தால், விண்ணப்பித்தோருக்கு கடிதம் அனுப்பப்படும். விண்ணப்பித்தோர் தேவைப்பட்டால், விடைத்தாள் நகலை ஆன்லைனில் பெறலாம். இதற்கு, ஜூன் 14 முதல், 19க்குள் விண்ணப்பிக்க வேண்டும். நகல் கிடைத்த பின், விடைத்தாளில் கூட்டல் பிழைகள் இருந்தால், அதை சுட்டிக்காட்டி மதிப்பெண் கேட்கலாம்.


விடைகள் மதிப்பிடப்படாமல் விடுபட்டிருந்தாலும், விடைத்தாள் நகல் கிடைத்த ஏழு நாட்களில், மண்டல அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ஆனால், 'திருத்தப்பட்ட விடைகளுக்கு, மறுமதிப்பீடு வழங்கப்படாது' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

Epayslip இல் Financial Year 2017-18 in Annual-Income Statement, Pay Drawn Particulars கடந்த இரண்டு மாதாங்களாக Update செய்யாமல் இருந்தது. அதற்கு CM CELL க்கு மனு அனுப்பிய பின் Financial Year 2017-18 in Annual-Income Statement, Pay Drawn Particulars நேற்று முதல் OPEN ஆகிறது. CM CELL மனுவின் விவரம்

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு LTC எனும் விடுப்பு பயணச் சலுகை வழங்கி வருகிறது. ஆனால் ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி துறை இல்லையென்கிறது. ஆனால் நிதித் துறை ஆசிரியர்களுக்கு LTC உண்டு என்று சொல்கிறது.Cm cell அளித்த பதில் விவரம் பின்வருமாறு

தொலைநிலை கல்வியில் பிஎச்.டி., படிக்க தடை!!! UGC Letter

தொலைநிலை கல்வியில் ஆராய்ச்சி படிப்புகள் நடத்தவும், எம்.பில்., மற்றும்
பிஎச்.டி., பட்டம் வழங்கவும், மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில், ஆராய்ச்சி படிப்புகளுக்கு, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக, எம்.பில்., படிப்புக்கு, இரண்டு ஆண்டுகள்; பிஎச்.டி.,க்கு, ஆறு ஆண்டுகள் மட்டும், அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் எம்.பில்., படிக்க, மூன்று பேர்; பிஎச்.டி., படிக்க, எட்டு பேருக்கு மட்டுமே, வழிகாட்டி பேராசிரியர் செயல்படலாம் என்பது உட்பட, பல நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சில பல்கலைகளில் விதிகளை மீறி, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளை, தொலைநிலையில் நடத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
அனைத்து பல்கலைகளுக்கும், யு.ஜி.சி., சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், கூறியுள்ளதாவது: எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்பை, தொலைநிலையில் நடத்துவதற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. தொலைநிலையில், ஏதாவது பல்கலையில் ஆராய்ச்சி படிப்பு அறிவிக்கப்பட்டால், அதில், மாணவர்கள் சேர வேண்டாம். இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை மற்றும் சில பல்கலைகளுக்கு மட்டும், தொழில்நுட்பம் இல்லாத பாடப்பிரிவுகளில், 'ரெகுலர்' படிப்பில், முழுநேர மற்றும் பகுதிநேர ஆராய்ச்சி படிப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள், தங்களின் வங்கிக் கணக்கு எண்ணை மாற்றாமல், வேறு வங்கிக்கு மாறும் வசதி, விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வாடிக்கையாளர்கள், தங்களின் வங்கிக் கணக்கு எண்ணை மாற்றாமல், வேறு வங்கிக்கு மாறும் வசதி, விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இது குறித்து, ரிசர்வ் வங்கி வட்டாரம் கூறியதாவது:  தற்போது, மொபைல்
போன் எண்ணை மாற்றாமல், வேறு நிறுவனத்தின் சேவைக்கு, வாடிக்கையாளர்கள் மாறும் வசதி உள்ளது. இதே போல, ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, எல்.ஐ.சி., வாடிக்கையாளர்கள், வேறு நிறுவனங்களுக்கு மாறும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக, வங்கி வாடிக்கையாளர்களும், அவர்களது கணக்கு எண்ணை மாற்றாமல், வேறு பொதுத் துறை வங்கிக்கோ அல்லது தனியார் வங்கிக்கோ மாற, வழிவகை செய்வது பற்றி, ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. வங்கிகளில், தற்போது வாடிக்கையாளர் கணக்கு எண்ணுடன், 'ஆதார்' கார்டு எண் இணைக்கப்பட்டு வருகிறது. அதனாலும், மொபைல் போன் வழி பணப் பரிவர்த்தனை பிரபலமாகி வருவதாலும், இது சாத்தியமாகும்.இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது.
  

பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளத்தில் முறைகேடு

ஜூன் 4ம் தேதி ஜிப்மர் நுழைவு தேர்வு !!!

ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் வரும், 4ம் தேதி 

நடக்கிறது.இது குறித்து, ஜிப்மர் இயக்குனர் சுபாஷ் சந்திர பரிஜா, ‘டீன்’ சுவாமிநாதன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் வரும், 4ம் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்கு, 1.90 லட்சம் பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். 74 நகரங்களில், 338 மையங்களில் தேர்வு நடக்கிறது.
நுழைவுத் தேர்வு, காலை, மாலை என, இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. தேர்வு மையங்களில், மாணவர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நுழைவுத் தேர்வுக்கு வரும் மாணவர்கள், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் ஆகிய இவற்றில் ஏதேனும் ஒன்றை அவசியம் எடுத்து வர வேண்டும்.

தேர்வு மையங்களில், ‘சிசிடிவி’ கேமராக்கள், அலைபேசியை செயல் இழக்கச் செய்யும் ஜாமர்கள் பொருத்தப்பட்டுள்ளன.ஒரு நாள் முன்னதாக தேர்வு மையங்களை உறுதி செய்து கொள்வது நல்லது. காலை, 8:00 மணியில் இருந்து தேர்வு அறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். காலை, 9:30 மணிக்கு பிறகும், மதியம், 2:30 மணிக்கு பிறகும் தேர்வு அறையில் எந்த காரணத்தை கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
வரும், 19ம் தேதிக்கு முன், ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., ‘ரிசல்ட்’ வெளியிடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆசிரியர்கள் மாணவர்களிடம் பழைய புத்தகங்களை வாங்கி விற்பதாக CEO - விடம் புகார் - புத்தகங்களை திருப்ப பெறக்கூடாது என உத்தரவு - செயல்முறைகள்

பள்ளிக்குச் செல்ல வேண்டுமா? ஆசிரியர்கள் குழப்பம்!

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று பரவிய தகவலால் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம்
ஏற்பட்டது.



 தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படும் எதிர்பார்த்த நிலையில், வெயில் காரணமாக ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


ஆனால், ஆசிரியர்கள் ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும் என்று தகவல் பரவியது. ஆனால், இதுபோன்று எந்த முறையான அறிவிப்பும் வெளியிடப்படாததால் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.


நிகழ் கல்வியாண்டின் வேலைநாள் ஜூன் 1ஆம் தேதி முதல் தொடங்குகிறது; தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும். பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய மாணவர் சேர்க்கை, அரசின் இலவச பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு அளித்தல், பள்ளியில் சுகாதார நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவது போன்றவற்றை தலைமையாசிரியர்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தெரிகிறது.


ஆனால், கல்வித் துறையிலிருந்து உறுதியான தகவல் வராததால், ஆசிரியர்கள் மத்தியில் ஜூன் 1-ஆம் தேதி இந்த குழப்ப நிலை நீடித்தது.


பெரும்பாலான பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஒரு சில ஆசிரியர்கள், ஊழியர்கள் மட்டுமே வந்தனர். அவர்கள் மாணவர் வருகைப் பதிவேடு எழுதுவது உள்ளிட்ட பணிகளை முடித்து விட்டு சில மணி நேரங்களில் புறப்பட்டு விட்டனர்.


பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே வந்திருந்தனர். பிற ஆசிரியர்கள், ஊழியர்களும் வரவில்லை.


பணியிட மாறுதல் பெற்றவர்கள் அந்தந்த பள்ளிகளில் வியாழக்கிழமை (ஜூன் 1) பணியில் சேர்ந்தனர்.


இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, கல்வித் துறை சார்பில் எந்தத் தகவலும் வரவில்லை. அப்படியே வந்தாலும், மாணவர்கள் இல்லாமல் என்ன செய்யப் போகிறோம். அதேபோன்று, தலைமையாசிரியர்கள் மற்றும் சில மூத்த ஆசிரியர்கள் பள்ளி திறக்கும் நாளுக்கு முன்னதாக ஆயத்தப் பணிகளில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றுதான். அனைவரும் பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவும் வராத நிலையில் எப்படி பள்ளிக்குச் செல்வது என்று எதிர்கேள்வி எழுப்பினர்.


இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஆஞ்சலோ இருதயசாமியிடம் கேட்ட போது, இது வழக்கமான நடைமுறை. வெயில் காரணமாக மாணவர்களுக்கு மட்டுமே ஜூன் 6ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர்கள், ஊழியர்கள் பள்ளிக்குச் சென்று நிகழ் கல்வியாண்டுக்கான அலுவல் பணிகளை தயார்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.



கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களும், பணியிட மாறுதல் ஆணையைப் பெற்று உரிய பள்ளிகளுக்கு பணிக்குச் செல்ல வேண்டும் என்றார்.

PAY COMMISSION|சம்பளம் மற்றும் படிகளுக்கான சீராய்வு 2017 - சம்பள ஏற்ற முறை / சிறப்பு சம்பளம் மற்றும் படிகள் - ஊதியக்குழுவிற்காக விவரம் கேட்டு பள்ளிக்கல்வி துறைச் செயலாளர் அனைத்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு கடிதம்

அரசுப்பள்ளியில் படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி.. போளூர் விஜயலட்சுமிக்கு குவியும் பாராட்டுகள்!

போளூர் : ஐஏஎஸ் என்று சொல்லப்படும் இந்திய குடிமைப் பணியில் அரசுப் பள்ளியில் படித்த போளூரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் வெற்றி
பெற்றுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்காக தேர்வு எழுதிய ஆயிரத்து 99 பேரின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என்று இரண்டு பிரிவுகளில் இந்தப் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
Thiruvannamalai government school student Vijayalakshmi cleared her IAS exams

Thiruvannamalai government school student Vijayalakshmi cleared her IAS exams
இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முதல்நிலைத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 9 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 15 ஆயிரத்து 445 பேர் தேர்ச்சி பெற்று டிசம்பர் மாதம் மெயின் தேர்வை எழுதினர். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2 ஆயிரத்து 961 பேருக்கு கடந்த மார்ச் மாதம் முதல் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை மனிதநேய அறக்கட்டளையில் பயின்ற 49 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும், விஜயலட்சுமி பாத்திரக்கடையின் உரிமையாளருமானவர் ஜெயகுமார். இவரின் மகள் விஜயலட்சுமியும் நடந்து முடிந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தொடக்கக்கல்வியை அங்குள்ள நர்சரிப் பள்ளியொன்றில் பயின்ற விஜயலட்சுமி, மேல்நிலைக்கல்வியை திருவண்ணாமலையிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பயின்றுள்ளார். அரசுப் பள்ளியில் பயின்றாலும் மத்திய அரசின் குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால் அனைவரிடமும் இருந்து விஜயலட்சுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

21/5/17

பள்ளிகளிள் அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் நடவடிக்கை - செங்கோட்டையன்

ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு
அளித்த பேட்டியில்,

தனியார் பள்ளிக்கூடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி மாசிலாமணி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் கடந்த ஒரு மாதங்களாக தனியார் பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். ஆய்வின் போது அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசுபள்ளிக்கூடங்களில் யோகா, விளையாட்டு, சாலை விதிகள், தேசப்பற்று ஆகியவை குறித்து மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடந்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறப்பது குறித்து மாணவ-மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறோம். தமிழகத்தில் காலச்சூழ்நிலை அறிந்து பள்ளிள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு கூறினார்

அடுத்த கல்வியாண்டு முதல், மாணவர்களின் சீருடையில், அவர்கள் படிக்கும் வகுப்புகளின் அடிப்படையில் மாற்றம் செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

தமிழக கல்வித் துறையில், அடுத்த கல்வியாண்டிலிருந்து,

1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை;


6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை;

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு,


தனித்தனி நிறத்தில், மூன்று விதமாக பிரித்து சீருடை வழங்கப்படும்.

அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை

அடிக்கடி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று
பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதன்மை கல்வி அலுவலர்கள் ஆண்டாய்வை மேற்கொள்ள வேண்டும்.

ஜூன்மாதம் 6, ஜூலை மாதம் 6, ஆகஸ்ட் 6, செப்டம்பர் 2, அக்டோபர் 5, நவம்பர் 5, டிசம்பர் 2, ஜனவரி 4, பிப்ரவரி 2 பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும்.முதன்மை கல்வி அலுவலர்கள் ஆண்டாய்வின் போது, ஆசிரியர்கள் வருகை பதிவேட்டினை ஆய்வு செய்து நீண்ட நாட்கள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அடிக்கடி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகளின் கட்டமைப்பு வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, பள்ளியின் தளவாட பொருட்கள் கணினி, தொலைக்காட்சி மற்றும் நூலக பயன்பாடு சார்ந்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் திறந்தவெளி கிணறுகள், உயர் அழுத்த மின்கம்பங்கள், பழுதடைந்துள்ள கட்டிடங்கள் போன்றவை மாணவர்களுக்கு பாதுகாப்பற்றதாக ஆய்வின் போது கண்டறியப்பட்டால் அதனை ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு உடனடியாக அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


மேல்நிலை அறிவியல் பாடங்களுக்கான செயல்முறைகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் பராமரிக்கப்படும் மாணவர் சேர்க்கை பதிவேடு, ஆசிரியர் வருகைபதிவேடு, அரசு வழங்கும் நலத்திட்ட பொருட்கள் அனைத்தும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதற்கான பதிவேடு, இருப்பு பதிவேடு மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மூலமாக வழங்கப்பட்ட பொருட்கள் மற்றும் மானியங்கள் குறித்த பதிவேடுகள் அனைத்தையும் ஆய்வின் போது பரிசீலிக்க வேண்டும். ஆண்டாய்வு மேற்கொள்ளும் போது ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அக்குறைபாடுகளை களைய சார்ந்த பள்ளிக்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்க வேண்டும். கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின் மீண்டும் ஒருமுறை அப்பள்ளியை பார்வையிட்டு ஆய்வின் போது குறிப்பிட்ட குறைபாடுகள் களையப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்தல் வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 3 நிறங்களில் சீருடைகள்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் 3 நிறங்களில் சீருடைகள் அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த 635 தனியார் மெட்ரிக். பள்ளிகளுக்கு தாற்காலிக அங்கீகாரச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.இதற்கான சான்றிதழ்களை வழங்கி, செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் மூன்று நிறங்களில் சீருடைகள் வழங்கப்படும். இதனால், அரசு, தனியார் பள்ளி மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் இருக்காது.

எந்தவித அழுத்தமும் இன்றி தேர்வுகள்: 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்ற தமிழக அரசின் முடிவு மாணவர்களுக்கு கடினமாக இருக்கும் என கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. எந்தவித அழுத்தமும் இன்றி தேர்வு நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்,
11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், அரியர்ஸ் முறையில் 12-ஆம் வகுப்பில் தேர்வு எழுதலாம்.
ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி மையங்கள்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஐஏஎஸ் தேர்வு எழுத பயிற்சி வழங்குவதற்காக மாவட்டங்கள்தோறும் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். ஆறாம் வகுப்பு முதல் கணினி வழியாக பாடங்கள் போதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

"நீட்' தேர்வை தமிழகத்துக்குக் கொண்டு வரக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. மத்திய அரசு நடத்தும் பல்வேறு தேர்வுகளைச் சந்திப்பதற்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த கல்வி வல்லுநர்களைக் கொண்டு வாரத்தில் மூன்று நாள்கள் பயிற்சி வழங்கப்படும்.

கல்வித் துறையில் விரைவில் மாற்றம்: ஆசிரியர் பற்றாக்குறை என்பது இல்லை. தென் மாவட்டங்களில் கூடுதலாக ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அதுகுறித்து பட்டியல் தயாரிக்கப்படும்.

பள்ளிக் கல்வித் துறையில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து உயர்நிலைக் குழு கலந்து ஆலோசித்து, இன்னும் இரண்டு தினங்களில் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில், சமூக நலத் துறை அமைச்சர் வி.சரோஜா, மின் துறை அமைச்சர் பி.தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பள்ளிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்!' - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பள்ளிகள் திறப்பது குறித்து அவர் கூறியதாவது...

'தனியார் பள்ளிக்கூடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி மாசிலாமணி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவினர் கடந்த ஒரு மாதமாக தனியார் பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். ஆய்வின்போது அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிக்கூடங்களில் யோகா, விளையாட்டு, சாலை விதிகள், தேசப்பற்று ஆகியவை குறித்து மாணவ - மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடந்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.


கோடைவிடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறோம். தமிழகத்தில் காலச்சூழ்நிலை அறிந்து பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.' என்றார்.

அரசு நிர்ணயம் செய்த கட்டண விபரம்

LKG கட்டணம்                    -  3750
UKG கட்டணம்                    -  3750
1-ம் வகுப்பு கட்டணம்       -  4550
2-ம் வகுப்பு கட்டணம்       -  4550

3-ம் வகுப்பு கட்டணம்       -  4550
4-ம் வகுப்பு கட்டணம்       -  4550

5-ம் வகுப்பு கட்டணம்       -  4550
6-ம் வகுப்பு கட்டணம்       -  5050
7-ம் வகுப்பு கட்டணம்       -  5050
8-ம் வகுப்பு கட்டணம்       -  5050
9-ம் வகுப்பு கட்டணம்       -  6300
10-ம் வகுப்பு கட்டணம்      -  6300

10-ம் வகுப்பு வரை மேற்படி கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது. மேற்படி கல்வி கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் கேட்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது கீழ்க்கண்ட அதிகாரிகளிடம் புகார் அளியுங்கள்:-

மாவட்ட ஆட்சியர்,
பள்ளிகல்வி இயக்குனர்,
மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர்,
மெட்ரிகுலேசன் பள்ளிகள் இணை இயக்குனர்,
மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர்,
முதன்மை கல்வி அலுவலர்,
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்,
மாவட்ட கல்வி அலுவலர்,
உதவிதொடக்கக் கல்வி அலுவலர்

மேற்படி அதிகாரிகளுக்கு புகார் அனுப்புங்கள். புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுங்கள்.


மேலும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்டப் பிரிவு 12(1)(சி) -ன் கீழ் 2017-2018 ம் கல்வியாண்டில் 25% இட ஒதுக்கீடடின் கீழ் மேற்படி பள்ளியில் 30 மாணவர்களை LKG  யில் சேர்த்துகொள்ள மேற்படி பள்ளியில் அரசு இடம் ஒதுக்கியுள்ளது.

6-ம் வகுப்பு முதல் கணினி வழியாக கல்வி கற்பிக்க திட்டம்: செங்கோட்டையன் பேட்டி

அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் கணினி வழியாக கல்வி கற்பிக்க திட்டம் என செங்கோட்டையன் கூறியுள்ளார். 2 நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வெளியிடப்படும் என செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். 11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பாடத்தை 12-ம் வகுப்பு படிக்கும் போது எழுதலாம் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளியில் மாணவர்சேர்க்கையை அதிகரிக்க...முதலில் ஆசிரியர்களாகிய நம்மை தான் சீர்படுத்திக்கொள்ளவேண்டும் இதை படியுங்கள்.!!

‘அரசு பள்ளியில் மாணவர்சேர்க்கையை அதிகரிக்க...
முதலில் ஆசிரியர்களாகிய நம்மை தான் சீர்படுத்திக்கொள்ளவேண்டும் இதை 

படியுங்கள்.

ஓர் ஆசிரியரின் பயணக்குறிப்பு

நாளை சமுகத்தின்
இன்றைய சிற்பிகள் நாம்...
ஆண்டி முதல்
அரசியல்வாதி வரை...
ஆசிரியரால் உருவாக்கப்படுபவர்கள்...
இச்சமூகத்தில்
நல்ல மாற்றங்களை
நம்மால்
ஏற்படுத்த முடியும்...
என்று முதலில்
உங்கள் மீது நல்ல
நம்பிக்கை வையுங்கள்...

2. ஒற்றுமையே உயர்வு

ஊர்கூடி தேர் இழுப்பது போன்றுதான் - உங்கள்
செயல் என்றாலும்...
உங்கள் கருத்துக்களை
மற்றவர்களும் பின்பற்றவேண்டும் - என்று
உடனே உங்கள் கருத்துக்களை
அவர்களிடம் திணிக்காதீர் - இது
உங்கள் நண்பர்களையும்
பகைவர்கள் ஆக்கும்
உறவினராயினும் பின்
உறவ கசக்கும்...

3. முதல் பயணம்...

அப்படி என்றால் தனி ஒரு நபராய்
நான் மட்டும் எப்படி? - என்ற கேள்வி
உங்களை பின்னுக்கு இழுக்கும்..
புறம்தள்ளுங்கள் அதை முதலில்
பின் உங்கள் தன்னம்பிக்கையை மட்டும்
துணைக்கு அழைத்துக்கொண்டு பயணியுங்கள்
உங்கள் காலின் நடைபாதைக்கு மட்டும் வெளிச்சம் கிட்டும்...
அது வேறுஎதுவும் அல்ல
உங்கள் தன்னம்பிக்கை

4. விளக்கு எரிய...

நல்ல மாற்றங்கள்
நம்மிடம் இருந்து பிறக்கப்போகிறது - என்று
உங்களை நீங்களே அவ்வப்பொழுது
பாரட்டிக்கொள்ளுங்கள்
இந்த சுயபாரட்டு - நம்மை
எத்தனை இடர்பாடுகள் வந்தாலும்
சோர்வடையசெய்யாது...
இது உங்கள் தன்னம்பிக்கை விளக்கிற்கு
வார்க்கும் எண்ணெய்...

5. தடை ஓட்டப் பயணம்..

உங்கள் நெடும்பயணத்தில்
கேலிகள் வேலிபோடும்
இலக்கை அடைவதுதான் நம் நோக்கம்
வேலியை உடைப்பது நம் இலக்கல்ல
கோபம் கொண்டு உடைக்க முற்படாதீர்...
அதில் நம் சக்தியை விறையமாக்க வேண்டாம்
புத்திசாலியாய் தாண்டி செல்லுங்கள்...

6. கழி கிடைக்கும் கண்டிப்பாய்...

உங்கள் விடாமுயற்சிக்கும்
தன்னம்பிக்கைக்கும் சிறிய பரிசு காத்திருக்கும்
அந்த இருட்டு பயனத்தில்
இன்னொரு ஓளி
ஆம் உங்களை போன்றே
உங்கள் முன்னோ பின்னோ
ஒருவர் வந்து கொண்டிருப்பார் - அல்லது
சென்றுகொண்டிருப்பார்...
உங்கள் பயணப்புகழ் பகிராதீர்..
அவரைப்பார்த்து புன்னகை மட்டும் சிந்துங்கள்...
நீங்கள் விழும் நேரத்தில் கழியாய் இருப்பார்...

7. தோள் கொடுத்து தொடருங்கள்

இரண்டு கால்களின் பயணம் நான்காகும்
இரண்டு விளக்குகளின் வெளிச்சம்
உங்கள் பாதையை இன்னும் தெளிவாக்கும்
தோள் கொடுத்து தொடருங்கள்
தோல்வி பயம் பட்டுபோகும்
தற்போது மெல்ல வெற்றி
வெளிச்சம் போட்டுக்காட்டும்
உங்களின் பயணப்பாதையை...

8.உங்கள் வெற்றி இதுவல்ல

இது உங்களின் வெற்றியல்ல
உங்கள் தன்னம்பிக்கயின் வெற்றி
அதிராமல் ஆரவாரமில்லாமல் அமைதியாய்
நீங்கள் வந்த பாதையை
சற்று திரும்பி பாருங்கள்
ஒரு கூட்டமே
ஒளிப்பிழம்பாய் வந்துகொண்டிருக்கும்
இதுதான் உங்களின் வெற்றி...

- இது ஓர் ஆசிரியரின் பயணக்குறிப்பு

அரசு பள்ளியில் மாணவர்சேர்க்கையை அதிகரிக்க...

1. தற்பொழுது இருக்கும் மாணவர்களை தமிழ், ஆங்கில வாசிப்புதிறனில் 
சீர்படுத்துங்கள்.

2. மாணவர்கள் தங்கள் முந்திய வகுப்பு வரை எதுவும் தெரிந்துகொண்டு 
வருவதில்லை என்று குறைகூறாமல் உங்கள் திறமைக்கு அளிக்கப்பட்ட 
சவாலாய் எடுத்துக்கொண்டு செயல்படுங்கள்...

3. எழுத்தே கூட தெரியாமல் இருப்பார்கள் அவர்களை இனம் கண்டு அவர்களுக்கு அட்டைதாளில் எழுதப்பட்ட எழுத்துக்கள் கொண்டு தினமும் வாய்விட்டு படிக்கசொல்லி பயிற்சி கொடுங்கள்..

4. தினமும் க - வரிசை ங - வரிசை என்று ஒவ்வொரு வரிசையாய்
பழைய தமிழ் செய்திதாள்களை கொடுத்து எழுத்துக்களை வட்டமிட்டு 
வரச்செய்யுங்கள் இப்பயிற்சி எழுதுக்களின் உருவங்களை அவர்கள் மனதில் 
நிலைநிறுத்த பயன்படும்.

5. ஒரு சொல்வார்த்தை இரு சொல்வார்த்தை என தினமும் 10 வார்த்தைகள் (சொல்வதை எழுதுதல்) டிக்டேஷன் வைத்து பளு இல்லாமல் வலு சேருங்கள்

6. வாசிப்பில் எழுத்துக்களின் சேர்ப்பை தெளிவான ஒலிநடையுடன் மெதுவாய் கற்பித்து அவர்களின் வாசிப்பிற்கு கருகொடுங்கள்...

7. கருவை வலுப்படுத்த தினமும் நீங்கள் வாசித்து அவர்களையும் வாசிக்கவைத்து ஒழுங்குபடுத்தி வாசிக்க செய்து பயிற்சி கொடுங்கள்...

8. தொலைக்காட்சி செய்திவாசிப்பை மாணவர்களிடம் இதுதான் வாசிப்பு என்று உதாரணப்படுத்துங்கள்.

9. அதுபோன்று வாசிக்கும் மாணவர்களுக்கு மற்ற மாணவர்கள் முன்னிலையில் அவர்களை முன்னிலைப்படுத்தி பாராட்டுகளை பெற்றுக்கொடுங்கள்..

10. பரிசுகளை வழங்குங்கள்.

விதை முளைவிட்டு, துளிர்விட்டு, இலைவிட்டு, நோய்பட்டோ, 
மீண்டும்துளிர்விட்டோ, இலைவிட்டு, கிளைபடர்ந்து, மலர்மலர்ந்து, 
காய்விட்டே கனியாகிறது...

இதே போல தான் மாணவர்கள் உங்களுக்கு எந்தநிலையிலும் எந்த
கலவையிலும் உங்கள் வகுப்பிற்குள் வந்து சேர்வார்கள்...
விரக்தியும், விதண்டாவாதத்தையும் விட்டுவிட்டு...
நீர் ஊற்றுவதும், உரமிடுவதும், நோய்வராமல் பாதுகாப்பதும் நம்கடமை என்று எண்ணி பயணத்தை துவக்குங்கள்...

நம் முதல் பயணம் வெற்றிபெற நம்மை நாமே வாழ்த்திக்கொண்டு புறப்படுவோம்..

அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?

வருமான வரிதானே... பிப்ரவரி மாதம் வரட்டும்; பார்த்துக்கொள்ளலாம்’ என்று எண்ணிக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. காரணம், அப்போது வருமானம் குறைவு. எனவே, வரி செலுத்தவேண்டிய கட்டாயம் பலருக்கும் இல்லை. ஆனால் இப்போது கால ஓட்டமும், ஊதிய நிலைகளில்
ஏற்பட்ட மாற்றமும் சேர்ந்து, பணியாளர்களுக்கான சம்பளத்தைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்த்தியுள்ளதால், வரி கட்ட வேண்டிய நிலைக்கு பலரும் உயர்ந்துள்ளனர்.

அரசுஊழியர்களில் பலர் இப்போது வருமான வரி கட்டுபவர்களாக மாறியிருக்கிறார்கள்.  தமிழக அரசு ஊழியர்களுக்குப் பரிசீலனையில் உள்ள ஊதியச் சீரமைப்புக்குழு அறிக்கை நடைமுறைக்கு வரும்போது, இன்னும் பலர் வரி வட்டத்துக்குள் வந்துவிடக்கூடும். முன்பு ஆண்டுக்கொருமுறை கட்டிய வருமான வரியை தற்போது மாதம்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம். 

ஊதியமும் ஓய்வூதியமும் ஒன்றே

வருமான வரிக் கணக்கீட்டைப் பொறுத்தவரை, ஊதியமும், ஓய்வூதியமும் ஒன்றுதான். மூத்தக் குடிமக்களுக்கான வருமான வரி வரம்பு வேறுபடும். அதுவும் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துக்கு வரி விகிதம் ஒரே மாதிரியே இருக்கும்.

பணியில் உள்ள ஊழியருக்கு, அவருக்குச் சம்பளம் வழங்கும் அலுவலர் ஒவ்வொரு நிதியாண்டுக்கான வருமான வரியைக் கணக்கிட்டு டிடிஎஸ் பிடிப்பார். ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெற ஆரம்பித்தபிறகு, ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் வருமான வரியைக் கணக்கிட்டு வரி பிடிப்பார்.

சார்நிலைக் கருவூல அலுவலர், உதவிக் கருவூல அலுவலர், மாவட்டக் கருவூல அலுவலர் எனப் பதவிப் பெயர்கள் பலவாக இருப்பினும், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் வேலையை இந்த அலுவலர்கள் செய்து வருகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை,  ஓய்வூதியம் வழங்குவதற்கென்றே அலுவலர் உள்ளார்.

 இருவகை வருமான வரிக் கணக்கீடு

டியூபேசிஸ் (Due basis)  மற்றும் டிரான் பேசிஸ் (Drawn basis) என இரு வகையாக வருமான வரி  கணக்கிடப்படக்கூடும். அதாவது, ஒரு நிதியாண்டு முழுக்க ஒருவர் பெறக்கூடிய அனைத்து வருவாய் இனங்களையும் கணக்கிட்டு, அதற்கான வருமான வரியை மார்ச் தொடங்கி பிப்ரவரி முடிய 12 மாத சமதவணைகளில் பிடித்தம் செய்வது டியூ பேசிஸ். வருமான வரியைக் கணக்கிட முடியாத இனங்கள், நிலுவை வரவுகள் போன்றவை முன்பே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல் இருந்தால், அவற்றைப் பட்டுவாடா செய்யும்போது வரியைப் பிடித்து விடுவது டிரான் பேசிஸ்.



டியூபேசிஸ் அல்லது டிரான் பேசிஸ் இவற்றுள் எது முன்போ, அப்போதே வரிப் பிடித்தம் செய்ய வேண்டும் என்பதே டிடிஎஸ் விதிமுறை.

இவ்வாறு செய்வதால், ஒரு குறிப்பிட்ட தேதியில் வரி செலுத்த வேண்டியவரிடமிருந்து பிடித்தம் செய்ய வேண்டிய வரி, நிலுவை இல்லாமல் அரசுக் கணக்கில் போய்ச் சேர்ந்துவிடும்.

 ஓய்வு பெறுவோர்

பணியிலிருந்து ஓய்வு பெறுவோர், 1. பணிக்கொடை, இறப்புப் பணிக்கொடை மற்றும் ஓய்வுப் பணிக்கொடை, 2.  ஓய்வூதியம் கணக்கீடு, 3. ஈட்டிய விடுப்பு ஒப்படை ஊதியம், 4. சொந்தக் காரணங்களுக்கான ஈட்டாத விடுப்பு ஊதியம் ஆகிய நான்கு பணப் பயன்களைப் பெறுவார்கள். இவற்றுள் முதல் மூன்று இனங்கள் வருமான வரி விலக்குப் பெற்றவை. நான்காவது இனமாக உள்ள மூன்று மாத கால ஈட்டாத விடுப்பு ஊதியம், வருமான வரிக்கு உட்பட்டது. எனவே, பணியிலிருந்து ஓய்வு பெறுவோருக்கான வருமான வரிக் கணக்கீடு பின்வருமாறு அமையும்.

ஊழியர் ஒருவர் 28.02.2018 அன்று ஓய்வு பெற உள்ளதாக வைத்துக்கொள்வோம். 2017-2018-க்கான இவரது வருமான வரியை மார்ச் 2017-லேயே  கணக்கிட வேண்டும். அந்தக் கணக்கீடு பின்வருமாறு இருக்கும்.

1. மார்ச் 2017 முதல் பிப்ரவரி 2018 வரை பெற உள்ள ஊதியம், 2. மார்ச் 2018 அன்று பெறத்தக்க மூன்று மாத கால ஈட்டாத விடுப்பு ஊதியம். மேற்கண்ட இரண்டு இனங்களின் கூட்டுத் தொகைக்கு வரியைக் கணக்கிட்டு, மார்ச் 2017 முதல் பிப்ரவரி 2018 முடிய சம்பளம் வழங்கும் அலுவலர் பிடிக்க வேண்டும்.

மார்ச் 2018 முதல் அவர் ஓய்வூதியம் பெற ஆரம்பித்துவிடுவார். அப்போது, 2018-19-ம் நிதியாண்டுக்கான வருமான வரியானது, அவர் பெறப்போகும் ஓய்வூதியத்தின் கூட்டுத்தொகைக்குக் கணக்கிடப்பட்டு, ஓய்வூதியம் வழங்கும் அலுவலரால் பிடித்தம் செய்யப்படும்.


இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். இன்னொரு ஊழியர் 31.10.2017  ல் ஓய்வு பெறுவதாக வைத்துக்கொள்வோம். 2017-2018-ம் ஆண்டுக்கான இவரது வருமான வரிக் கணக்கீடு, பின்வரும் இனங்களின் கூட்டுத் தொகைக்குரியதாக இருக்கும்.

1. மார்ச் 2017 முதல் அக்டோபர் 2017 வரை பெறப்போகும் ஊதியம், 2. நவம்பர் 2017 முதல் பிப்ரவரி 2018 வரை பெற உள்ள ஓய்வூதியம், 3. 1.11.2017 அன்று பெறத்தக்க மூன்று மாத கால ஈட்டாத விடுப்பு ஊதியம். இதற்கான வருமான வரி, 12 சம தவணைகளில் மார்ச் 2017 ஊதியம் தொடங்கிப் பிடித்தம் செய்யப்படும்.

21.11.2017 அன்று அவர் பணியிலிருந்து விடுபட்டு செல்லும்போது, அக்டோபர் 2017 வரையிலான காலத்தில் அவரிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட வரி மற்றும் நிலுவையாக உள்ள வரி பற்றிய சான்று ஒன்றை சம்பளம் வழங்கும் அலுவலர் வழங்க வேண்டும். இந்தச் சான்றின் அடிப்படையில், மீதமுள்ள வருமான வரி இவரது ஓய்வூதியத்திலிருந்து, ஓய்வூதியம் வழங்கும் அலுவலரால் பிடித்தம் செய்யப்படும்.

தவிர்க்க முடியாத நிர்வாகக் காரணங்களினால் இவரது ஈட்டாத விடுப்பு ஊதியத் தொகையை முன்கூட்டியே கணக்கிட முடியாதபோது, விடுப்பு ஊதியம் தவிர்த்து மற்ற இடங்களின் மீதான வரியைக் கணக்கிட்டுப் பிடித்தம் செய்யப்படும். பின்னர், விடுப்பு ஊதியம் கணக்கிடப்பட்டு வரி சீரமைக்கப்படும். அல்லது காலம் தாழ்ந்து விடுப்பு ஊதியம் வழங்கப்படுமானால், அப்போதே வரி பிடித்தம் செய்யப்படும். விடுப்பு  ஊதியம் மூன்று மாதங்களுக்குக் குறைவாகவும் இருக்கலாம்.

 மறுவேலைவாய்ப்பு

ஆசிரியர்களுக்கு மறுவேலை வாய்ப்பு (Re-Employment) என்ற சலுகை உண்டு. அதாவது, ஓர் ஆசிரியரின் ஓய்வு பெறும் நாள்  31.12.2017 என்று வைத்துக் கொள்வோம். மற்ற அரசு ஊழியர் களைப் போல் ஓய்வுபெற்ற அன்றே ஆசிரியர், பணியிலிருந்து விடுவிக்கப் பட்டுச் சென்றுவிடுவது கிடையாது.

ஓய்வு பெறும் மாதம் எதுவாக இருந்தாலும், ஆசிரியர்கள் அந்த கல்வியாண்டின் கடைசி நாள் வரை பணியில் தொடர அனுமதிக்கப் படுகிறார்கள். கல்வியாண்டு என்பது ஜூன் முதல் நாள் தொடங்கி மே 31 வரை ஆகும். இதன்படி மேற்சொன்ன ஆசிரியர் 31.12.2017 அன்று ஓய்வு பெற்றிருந்தாலும் 01.01.2018 முதல் 31.05.2018 முடிய பணியில் தொடர்ந்து நீடிப்பார். இது அவரது மறுவேலை வாய்ப்புக் காலம் ஆகும்.

மறுவேலைவாய்ப்புக் கால ஊதியம் என்பது, அவர் ஓய்வுபெற்ற கடைசி மாதமான 2017 டிசம்பரில் பெற்ற ஊதியத்திலிருந்து, 01.01.2018 முதல் அவர் பெறப்போகும் ஓய்வூதியத்தைக் கழித்தால் கிடைப்பது. இன்னும் சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒருவர் ஜனவரி 2018-ல் பெறப்போகும் மறுவேலைவாய்ப்பு ஊதியமும், ஜனவரி 2018-ல் பெற உள்ள ஓய்வூதியமும் சேர்த்துதான் டிசம்பர் 2017-க்கான அவரது ஊதியம் ஆகும். அதன்படி 2017-2018 நிதியாண்டுக்கான அந்த ஆசிரியரின் வருமான வரி, பின்வரும் இனங்களின் கூட்டுத் தொகைக்குக் கணக்கிடப்பட வேண்டும்.

1. மார்ச் 2017 முதல் டிசம்பர் 2017 வரை பெறும் ஊதியம், 2. ஜனவரி 2018 முதல் பிப்ரவரி 2018 வரை பெறப்போகும் மறுவேலைவாய்ப்பு ஊதியம், 3. ஜனவரி 2018 பிப்ரவரி 2018 ஆகிய இரு மாதங்களுக்குரிய ஓய்வூதியம், 4. ஓய்வு பெற்ற மறுநாளுக்குப்பின் அவர் பெறத்தக்க மூன்று மாத கால ஈட்டாத விடுப்பு ஊதியம். இவற்றுக்கான வருமான வரி மார்ச் 2017 முதல் பிப்ரவரி 2018 வரை சம்பளம் வழங்கும் அலுவலரால் பிடித்தம் செய்யப்படும்.

இவர்31.05.2018 வரைமறுவேலை வாய்ப்பில் - பணியில்  தொடர்வதால் 2018-2019-க்கான வருமான வரிக் கணக்கீடும் இதே சம்பளம் வழங்கும் அலுவலரால் கணக்கிடப்படக்கூடும். அது பின்கண்டவாறு இருக்கும்.

1. மார்ச் 2018 முதல் மே 2018 முடிய பெற உள்ள மறுவேலைவாய்ப்பு ஊதியம், 2. ஏப்ரல் 2018 முதல் பிப்ரவரி 2019 வரை பெறப்போகும் ஓய்வூதியம்.

குறிப்பு: மறுவேலைவாய்ப்பு காலத்தில் வழங்கப்படும் ஓய்வூதியத்துடன்  அகவிலைப்படி வழங்கப்படாது.  மறுவேலை வாய்ப்பு முடிந்து, ஓய்வூதியம் மட்டும் பெறும் ஜூன் 2018 முதல் ஓய்வூதியத்துடன்  அகவிலைப்படி + மருத்துவப்படி சேர்த்துத் தரப்படும். வரிசை எண் 1 + 2-ல் கண்ட தொகைக்கு வரியைக் கணக்கிட்டு, அதை 12 சம தவணைகளாக்கி மார்ச் 2018 முதல் மே 2018 வரை, சம்பளம் வழங்கும் அலுவலரே பிடித்தம் செய்துவிடுவார். ஜூன் 2018 முதல் இவரது வருமான வரிக் கணக்கீடு, இவர் ஓய்வூதியம் பெற தேர்வு செய்துள்ள ஓய்வூதியம் வழங்கும் அலுவலரால் மேற்கொள்ளப்பட்டு, பிடித்தம் செய்யப்படும்.


ஊதியம்  +  ஓய்வூதியம்  +  மறுவேலை வாய்ப்பு ஊதியம் + விடுப்பு ஊதியங்களை வருமான வரிக்குக் கணக்கிட்டு, அதை 12 தவணைகளில் பிடித்தம் செய்ய வேண்டும் என்பதும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை. அரசு ஊழியர்கள் இந்த வரிக் கணக்கீடுகளைப் புரிந்து கொண்டால்,  வரி கட்டுவது சுமையாக இருக்காது.

20/5/17

+2,SSLC- பொதுத் தேர்வுகளில் தமிழ் வழியில் படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு



 பிளஸ் 2, எஸ்எஸ்எஸ்சி பொதுத் தேர்வுகளில் தமிழ் வழியில்படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறினார். 


சென்னை தலைமைச் செய லகத்தில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகை யில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.26,913 கோடிஒதுக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 36,830 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பில் கட்டிடங் கள், வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. சில பள்ளி களில் இன்னும் சிறு சிறு தேவை கள் உள்ளன. முன்னாள் மாணவர்கள், தொழி லதிபர்கள், வசதிபடைத்தவர்கள், தொண்டு நிறுவனத்தினர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் தங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு தேவைப்படும் வசதிகளை செய்துகொடுக்க முன்வருமாறு அன்போடு வேண்டு கோள் விடுக்கிறேன். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப் படும் 14 வகையான நலத்திட்டங் களுக்கு ரூ.2,300 கோடி ஒதுக் கப்பட்டுள்ளது. மேல்நிலைக் கல்வியில் கடந்த 12 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. தமிழக மாணவர்களை தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு களுக்கு தயார்படுத்தும் வகை யில் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டியுள்ளது.

பாடத்திட்ட மாற்றம் குறித்து ஏற்கெனவே, முன்னாள் துணை வேந்தர்கள், தலைமைச் செயலா ளர் உள்ளிட்டோர் அடங்கிய ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்ட மாற்றம் குறித்தும், பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்தும் 2 நாட்களில் கொள்கைமுடிவு எடுக்கப்படும். பள்ளிக்கல்வித் துறையில் மிகப் பெரிய அளவில் சீரமைப்பு, மாற் றங்கள் கொண்டுவரப்படுகின்றன. அதேபோல, விளையாட்டுத் துறை யிலும் மிகப்பெரிய அளவில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள் ளோம். மாநில, தேசிய அளவில் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

பள்ளிகளில் யோகா, சாலை பாதுகாப்பு விதிகள், தேசப்பற்று தொடர்பான பயிற்சி வகுப்புகளும் கொண்டுவரப்பட உள்ளன. பிளஸ் 2, எஸ்எஸ்எல்சிபொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர் களுக்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இனிமேல், தமிழ்வழியில் படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.உதவித்தொகை திட்டத்தில் அவர் களுக்கு முன்னுரிமை அளிக்கப் படும். இவ்வாறு அமைச்சர் செங் கோட்டையன் தெரிவித்தார்.

அஞ்சல் துறை தேர்வு ரத்து: இணையதளத்தில் அறிவிப்பு

முறைகேடு நடந்திருக்கலாம் எனப் புகார் தெரிவிக்கப்பட்ட தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக, தமிழ்நாடு அஞ்சல் வட்ட இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அஞ்சல் வட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தபால்காரர் மற்றும் மெயில் கார்டு பணிக்கான தேர்வு 2016 டிசம்பர் 11-ஆம் தேதி நடத்தப்பட்டது. மெட்ரிக் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கல்வித் தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த எழுத்துத் தேர்வில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதினர். பொது அறிவு, கணிதம், ஆங்கிலம், தமிழ் என நான்கு பிரிவுகளிலும் தலா 25 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெற்றிருந்தன.

தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 14 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதியவர்களின் பதிவு எண்ணைக் கொடுத்து மதிப்பெண் விவரங்களைப் பெறும் வகையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

மதுரையில் தேர்வு எழுதிய இளைஞர்கள் சிலர் தங்களது பதிவு எண்ணுக்கு முன்பு, பின்பு உள்ள எண்கள் என உத்தேசமாக சில எண்களைப் பதிவு செய்து தேர்வு முடிவைப் பார்த்தபோது அவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஹரியாணா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த பலரும் தமிழில் 25-க்கு 24 மதிப்பெண்கள், சிலர் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். தமிழ் முழுமையான அறிமுகம் இல்லாத மாநிலத்தைச் சேர்ந்த பலரும், தமிழ் இலக்கணத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.

இதையடுத்து மதுரை மாநகராட்சி சூழல் பூங்கா மற்றும் காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து, தபால் துறை நடத்திய தேர்வில் சந்தேகம் இருப்பதாகவும், உண்மையாகத் தேர்வுக்குத் தயாராகி வரும் இளைஞர்களின் வாய்ப்புகள் பறிபோவதாகவும் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இத் தேர்வு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த நிலையில், 2016 டிசம்பர் 11-இல் நடத்திய தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அஞ்சல் வட்ட இணையதளத்தில் (www.dopchennai.in) அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரான மதுரையைச் சேர்ந்த ஆர்.கருப்பசாமி கூறியதாவது:

போட்டித் தேர்வுகளின் மூலம் அரசுப் பணிக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கடுமையாகப் பயிற்சி எடுத்து வருகிறோம். தற்போது தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தாலும், முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். இதுபோன்ற முறைகேடுகள் எங்களது கனவுகளைத் தகர்த்து விடுகிறது. முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அதுகுறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் இனி வரும காலங்களில் இத்தகைய முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றார்.

மாணவர் எண்ணிக்கை 10 கீழ் குறைந்தாலும் பள்ளி மூடப்படாது: தொடக்கக் கல்வித்துறை

தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் வருகை, ஆங்கிலவழிக் கல்வி மோகம் போன்ற காரணங்களால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது.

ஐந்து ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. 2016 ஆக., 1 கணக்கெடுப்பின் படி பல ஆயிரம் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்களே உள்ளன. அரசுக்கு அவற்றை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூடிய பள்ளியை மீண்டும் திறப்பது கஷ்டம். இதனால் அப்பள்ளி மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் மாணவர்களை இடமாற்றினாலும் பள்ளியை மூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பள்ளிகளில் கிராம முக்கியஸ்தர்கள் மூலம் அதிக மாணவர்களை சேர்க்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பே இல்லாத பள்ளிகள் மட்டும் மூடப்படும் என, தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 தேர்ச்சி குறித்து விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை

அரசாணையை மீறி பிளஸ் 2 தேர்ச்சி குறித்து விளம்பரம் செய்த தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறையின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பொதுத்தேர்வுகளில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான தரப் பட்டியல் வெளியிடும் முறை கைவிடப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டது.


மேலும் தேர்ச்சி தொடர்பாக பள்ளிகள் சாதனைப் பட்டியலை வெளியிடக்கூடாது என்றும் கூறப்பட்டது. ஆனால் ஏராளமான தனியார் பள்ளிகள் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் கொடுத்து வருகின்றன.இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன்தனியார் தொலைக்காட்சியிடம் பேசும்போது,''அரசாணையை மீறி ப்ளஸ் 2 தேர்ச்சி விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

முதற்கட்டமாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.அரசாணையை மீறியது ஏன் என்று 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். அதிகபட்ச தண்டனையாக சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். விளம்பரங்கள் அளித்த அனைத்து பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.

பாடவாரியாக ‘சென்டம்’ பெற்றவர்கள் எத்தனை பேர்?

இன்று வெளியிடப்பட்டுள்ள 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளின்படி, பாடவாரியாக 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை விபரம்:

மொழிப்பாடம்: 69 பேர்
ஆங்கிலம்: 0 
கணிதம்: 13,759 பேர்
அறிவியல்: 17,481 பேர்
சமூக அறிவியல்: 61,115 பேர்

2015-2017 ஆண்டு மதிப்பீடு 

பாடப்பிரிவு 2015 2016 2017
மொழிப்பாடம் 586 73 69
ஆங்கிலம் 644 51 0
கணிதம் 27,134 18,754 13,759
அறிவியல் 1,15,853 18,642 17,481
சமூக அறிவியல் 51,629 39,398 61,115

தேர்ச்சி குறைந்த பள்ளிகள்; செயல் திறன் அறிக்கை தயாரிக்க உத்தரவு

பிளஸ் 2 தேர்வில் குறைந்த தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், செயல்திறன் அறிக்கையை தாக்கல் செய்ய, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. அரசு மற்றும் தனியார் தரப்பில், 6,700 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஆண்டுதோறும், பள்ளிக்கல்வி வளர்ச்சிக்காக, 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 


ஆனால், பெரும்பாலான அரசு பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும், பிளஸ் 2 பொது தேர்வில் குறைந்த தேர்ச்சியை பெற்றுள்ளன. மாணவர்களின் சராசரி மதிப்பெண்ணும் குறைவாகவே உள்ளது. 

நுாற்றுக்கு நுாறு என்ற, ’சென்டம்’ எடுத்த மாணவர்களின், எண்ணிக்கையும் சரிந்துள்ளது. அரசின் நிதி செலவில் இயங்கும் பள்ளிகள், அவற்றை முறையாக பயன்படுத்தியதா; ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்தினரா; மதிப்பெண் குறைவு, தேர்ச்சி சரிவு ஏன்; தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும், என, செயல்திறன் அறிக்கை தர, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 

இந்த அறிக்கையின்படி, புதிய செயல் திட்டம் தயாரிக்கப்படும். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும், மாணவர்கள், தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் பங்கு கொள்ளும் வகையில், கற்பித்தலை மாற்ற பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆய்வு கூட்டம், இன்று சென்னையில் நடக்கிறது.

மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம்

98.5% பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 
98.17% எடுத்து கன்னியாகுமரி  இரண்டாவது இடத்திலும் 
98.16% எடுத்து ராமநாதபுரம்  மூன்றாவது இடத்திலும் உள்ளது. 
97.97% எடுத்து ஈரோடு நான்காவது இடத்திலும், 
97.16% எடுத்து தூத்துக்குடி ஐந்தாவது இடத்திலும், 
97.10% எடுத்து தேனி  மாவட்டம் 6 வது இடத்திலும், 
97.06% எடுத்து திருப்பூர் ஏழாவது இடத்திலும் உள்ளது. 
97.02% எடுத்து சிவங்கங்கை எட்டாவது  இடத்தில் உள்ளது. 
96.98% எடுத் து திருச்சி 9 வது இடத்தில் உள்ளது. 
96.54 % எடுத்து நாமக்கல் 10 வது  இடத்தில் உள்ளது. 
96.42% எடுத்து கோவை 11 வது இடத்தில் உள்ளது. 
96.35% எடுத்து நெல்லை 12 வது இடத்தில் உள்ளது. 
96.16% எடுத்து புதுகோட்டை 13 வது இடத்தில் உள்ளது.
 புதுக்கோட்டை மாவட்டம் 14வது இடம் - 96.16% தேர்ச்சி
 தஞ்சாவூர் மாவட்டம் 15வது இடம் - 95.21% தேர்ச்சி
 கரூர் மாவட்டம் 16வது இடம் - 95.20% தேர்ச்சி
 ஊட்டி மாவட்டம் 17வது இடம் - 95.09% தேர்ச்சி
 பெரம்பலூர் மாவட்டம் 18வது இடம் - 94.98% தேர்ச்சி
 மதுரை மாவட்டம் 19வது இடம் - 94.63% தேர்ச்சி
 திண்டுக்கல் மாவட்டம் 20வது இடம் - 94.44 % தேர்ச்சி
 தருமபுரி மாவட்டம் 21வது இடம் - 94.25% தேர்ச்சி
 அரியலூர் மாவட்டம் 22வது இடம் - 93.33% தேர்ச்சி
 கிருஷ்ணகிரி மாவட்டம் 23வது இடம் - 93.12% தேர்ச்சி
 நீலகிரி மாவட்டம் 24வது இடம் - 92.06% தேர்ச்சி
 சென்னை மாவட்டம் 25வது இடம் - 91.86 % தேர்ச்சி
 விழுப்புரம் மாவட்டம் 26வது இடம் - 91.81% தேர்ச்சி
 திருவள்ளூர் மாவட்டம் 27வது இடம் - 91.65% தேர்ச்சி
 திருவாரூர் மாவட்டம் 28வது இடம் - 91.47% தேர்ச்சி
 நாகை மாவட்டம் 29வது இடம் - 91.40% தேர்ச்சி
 திருவண்ணாமலை மாவட்டம் 30வது இடம் - 91.26% தேர்ச்சி
 வேலூர் மாவட்டம் 31வது இடம் - 88.91% தேர்ச்சி
 காஞ்சிபுரம் மாவட்டம் 32வது இடம் - 88.85% தேர்ச்சி
 கடலூர் மாவட்டம் 33வது இடம் - 88.77% தேர்ச்சி

தமிழகத்தில் உள்ள கலந்தாய்வு மற்றும் மாணவர்கள் சேர்க்கை போன்ற அவசர பணிகாக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு 20,21.05.2017 அன்று வேலை நாட்களாக அறிவிப்பு

1 முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் பாடம்..அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை ...

Image may contain: 1 person

19/5/17

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிலை பற்றி தொடக்க கல்வித்துறையின் பணிவிதிகளில் திருத்தத்தினை செய்ய அரசுக்கு உத்தரவு..*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*

28.04.2017 அன்று பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியராக பதவிஉயர்வு தடையாணை பெற்றதை ஊடகத்தில் நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வெளியிட்டு 02.05.2017 அன்று பள்ளிக்கல்வி அமைச்சர்
தலைமையிலான ஆசிரியர் பிரதிநிதிகள் கூட்டத்தில் அனைவரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.*_

✍ *பின் 05.05.2017 அன்று அத்தடையாணை மற்றும் AFFIDAVIT இரண்டினை பெற்று தொடக்ககல்வி இணை இயக்குனர் , பள்ளிக்கல்வி அமைச்சர் ஆகியோரிடம் வழங்கி தடையாணை நீக்க நடவடிக்கை எடுக்க  செய்தோம்.*

✍ _*தொடக்க கல்வி இணைஇயக்குனர் அவர்களும்  17.05.2017 அன்று வழக்குரிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு  தடையாணை நீக்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டது என்றும் நீதிமன்றத்தில் தடையாணை ரத்து செய்யப்பட்டுவிடும் என நமது மாநில பொறுப்பாளர்களிடம் 15.05.2017 அன்று கூறினார்.*_

✍ _*16.05.2016 அன்று நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில தலைவர் திரு ஆனந்த கணேஷ் அவர்கள் தொடக்க கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து வழக்கின் நிலை பற்றி தெரிவித்த போதும் இயக்குனர் அவர்கள் அரசு தரப்பில் தடையாணை விலக்க பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 17.05.2017 அன்று வழக்கு விசாரணைக்கு வரும்போது தடையாணை விலக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.*_

✍  *18.06.2017 இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசின் பதில்மனு ஏற்று உயர்நீதிமன்ற கிளை கீழ்கண்ட உத்தரவினை பிறப்பித்துள்ளார்.*

1. மதுரை மாவட்டம் திருபரங்குன்றம் ஒன்றியம் தவிர மற்ற இடங்களில் கலந்தாய்வுக்கு நடைபெற தடையில்லை.

2. திருப்பரங்குன்ற ஆசிரியர் தொடத்துள்ள இந்த வழக்கு தனிவழக்காக தொடர்ந்து நடக்கும்.

3. பட்டதாரி ஆசிரியர்களுக்கான  பணி நிலை பற்றி தொடக்க கல்வித்துறையின் பணிவிதிகளில்  திருத்தத்தினை செய்ய அரசுக்கு உத்தரவு..

*தொடக்க கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி, பாதுகாப்பில் என்றென்றும் முனைந்து செயல்படும் இயக்கம் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு.*

தொடர் முயற்சி செய்த மாநில தலைவர் திரு. ஆனந்தகணேஷ்.
மாநில பொதுச்செயலாளர்
முனைவர். பேட்ரிக் ரெய்மாண்ட்.
மாநில பொருளாளர்.
திரு.செல்லையா

அனைவருக்கும்


பாராட்டுக்கள்.

FLASH NEWS:தொடக்கக் கல்வி துறை நடுநிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்வுக்கு வழங்கப்பட்டிருந்த தடையை நீங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

தொடக்கக் கல்வி துறையின் சார்பில் நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க கோரிய வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் தடையை நீக்கியது.

அனைத்து சங்கங்களும் தடையை நீக்கக்கோரி வைத்த கோரிக்கையினை

தொடக்கக் கல்வி துறையின் சார்ப்பில்
தடையை நீக்கக்கோரி வழக்கு போடப்பட்டிருந்தது. இன்று மதியம் இவ்வழக்கு மதுரை உயர்நீதி மன்ற கிளையில் எடுத்துக்கொள்ளப்பட்டு

தடையை விலக்கியது.

பணிநிரவல் ஆசிரியர்களின் விவரம் மற்றும் காலிப்பணியிடங்களின் விவரம் கீழ்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு

பணிநிரவல் ஆசிரியர்களின் விவரம் மற்றும்  காலிப்பணியிடங்களின்
விவரங்களை http://www.deetn.com என்ற  இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது

TET - சிறுபான்மை பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் இல்லை - பள்ளிக்கல்வித்துறை | RTI

TET - அனைத்துவகை பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு கட்டாயம் - NCTED | RTI

அனைவருக்கும் கட்டாயக் கல்வி சட்டம் - 25% இட ஒதுக்கீட்டில் சேர்க்க 26.05.2017 கால அவகாசம் நீட்டிப்பு.

மாணவர்கள் குறைந்தாலும் பள்ளிக்கு 3 ஆண்டு 'கிரேஸ்'

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3
ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் வருகை, ஆங்கிலவழிக் கல்வி மோகம் போன்ற காரணங்களால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது.
ஐந்து ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. 2016 ஆக., 1 கணக்கெடுப்பின் படி பல ஆயிரம் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்களே உள்ளன. அரசுக்கு அவற்றை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூடிய பள்ளியை மீண்டும் திறப்பது கஷ்டம். இதனால் அப்பள்ளி மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் மாணவர்களை இடமாற்றினாலும் பள்ளியை மூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பள்ளிகளில் கிராம முக்கியஸ்தர்கள் மூலம் அதிக மாணவர்களை சேர்க்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பே இல்லாத பள்ளிகள் மட்டும் மூடப்படும் என, தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் ஆசிரியர்களுக்கு அழைப்பு - ஆசிரியர் அதிருப்தி

தொடக்க கல்வி மாணவருக்கான நோட்டு, புத்தகம் பெற அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர் சாக்கு பைகளுடன் 'நோடல்'
அலுவலகம் வரவேண்டும்,' என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தாண்டு முதல் இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்குவதில் ஆசிரியர்களை அலைக்கழிக்காமல் நேரடியாக பள்ளிகளுக்கே வழங்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதன்படி தற்போது சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் கல்வித்துறை சார்பில் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. மதுரையில் 15 ஒன்றியங்களுக்கு உட்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோட்டுக்களும் வந்து இறங்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை வைக்க போதிய இடவசதி இல்லாததால் பல உதவி பெறும் பள்ளிகளில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.

தற்போது 'நோடல்' மையங்களில் இருந்து சம்பந்தப்பட்ட உதவி தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவர்கள் கையிலும் புத்தகம், நோட்டு இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், 'புத்தகங்கள் எடுத்து செல்ல தலைமையாசிரியர்கள் சம்பந்தப்பட்ட ஏ.இ.ஓ., அலுவலக 'நோடல்' மையங்களுக்கு மறக்காமல் சாக்கு பைகளுடன் வர வேண்டும்,' என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தொடக்க கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவட்டத்தில் 15 ஏ.இ.ஓ., அலுவலகங்களுக்கும் தனித்தனியே 'நோடல்' மையங்கள் உள்ளன. ஏ.இ.ஓ.,க்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு புத்தகம், நோட்டுக்கள் இங்கு தான் உள்ளன. ஓரிரு நாங்களில் இவை பள்ளிகளுக்கே கொண்டு செல்லப்படும். ஒரு பள்ளிக்கு எத்தனை நோட்டு, புத்தகம் தேவை குறித்து அலுவலகம் வந்து தலைமையாசிரியர் தெரிவிக்க வேண்டும். அவர்கள் வரும்போது சாக்கு பைகளுடன் வந்து தேவையான புத்தகம், நோட்டுக்களை பெற்று பள்ளி முகவரியை எழுதி வைத்தால் அந்தந்த பள்ளிகளுக்கே கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்படும், என்றார்.

ஆசிரியர் அதிருப்தி
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: புத்தகம், நோட்டுக்களை சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களே ஆட்டோ அல்லது வேன் மூலம் பள்ளிகளுக்கு எடுத்து சென்றனர். ஆனால் இந்தாண்டு முதல் கல்வி அலுவலர்கள் பள்ளிகளுக்கு புத்தகம், நோட்டுக்களை கொண்டு செல்ல ஏற்பாடு செய்கின்றனர்.


ஆனால் உதவிபெறும் பள்ளிகளில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் சிலர் 'ஆப் தி ரெக்கார்டு' என கூறி ஆசிரியர்களையே புத்தகம், நோட்டுக்களை எடுத்து செல்ல வற்புறுத்துகின்றனர் அல்லது அதற்காகும் செலவை பள்ளி நிர்வாகங்கள் தலையில் கட்ட பேசி வருகின்றனர். எனவே இப்பணிகளை கலெக்டர் வீரராகவராவ் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்," என்றனர்.