யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/1/16

பள்ளி கழிப்பறை பராமரிப்பு மகளிர் குழுக்களிடம் ஒப்படைப்பு: இம்மாதத்திற்குள் பணியாளர்களை நியமிக்க முடிவு

அரசு பள்ளிகளின் கழிப்பறைகளை துப்புரவு செய்து பராமரிக்கும் பொறுப்பை, ஊரக வளர்ச்சி துறை நிர்வாகம், மகளிர் குழுக்களிடம் ஒப்படைத்து உள்ளது. இந்த மாதம் இறுதிக்குள், புதிய துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 1,068 தொடக்கப் பள்ளிகள்; 302 நடுநிலைப் பள்ளிகள், 162 உயர்நிலைப் பள்ளிகள்; 146 மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம், 1,678 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளின் வளாகங்களை,திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உள்ள துாய்மைக் காவலர்கள் துப்புரவு செய்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில், கழிப்பறைகளை துப்புரவு செய்யும் பணியாளர்களை அரசு நியமிக்கவில்லை. ஒரு சில, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், கழிப்பறைகளை துப்புரவு செய்யும் பணியாளர்கள் பணியிடங்கள், காலியாக உள்ளன என, கல்வி துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இதையடுத்து, ஊரகப் பகுதியில் இயங்கும் அரசு பள்ளிகளில், கழிப்பறைகளை துப்புரவு செய்யும் பணியாளர்களை, மகளிர் குழுக்கள் மூலம் நியமிக்க, மாவட்ட நிர்வாகம்,ஊரக வளர்ச்சி துறைக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.அதன்படி, ஊரக வளர்ச்சி துறை நிர்வாகம், கிராம வறுமை ஒழிப்பு சங்க நிர்வாகிகளான மகளிர் குழுக்களிடம், பள்ளி கழிப்பறைகளை பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்து உள்ளது.

வழிகாட்டி நெறிமுறை:

ஏற்கனவே துப்புரவு பணியாளர்கள் இருப்பினும், புதிய ஆட்களை கல்வி குழுவினர் நியமிக்க வேண்டும் பள்ளியின் கிராமக் கல்விக் குழு கணக்கில், வட்டார வளர்ச்சி அலுவலரால் ஊதியப் பணம் விடுவிக்கப்படும்பள்ளி தலைமை ஆசிரியரால், சம்பந்தப்பட்ட மகளிர் குழுக்களுக்கு ஊதியம் விடுவிக்கப்படும்முதற்கட்டமாக, ஒன்றிய பொது நிதியில், மூன்று மாதத்திற்கு உரிய ஊதியத்தை கல்வி குழு வங்கி கணக்கில் இருப்பு வைக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு மகளிர் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.இந்த மாத இறுதிக்குள், அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறைகளை துப்புரவு செய்யும் பணியாளர்களை நியமித்து, சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.அவர்களுக்கு மாத ஊதியத்துடன் கழிப்பறைகளை சுத்தம் செய்ய தேவைப்படும் பொருட்களை கொள்முதல் செய்ய தேவைப்படும் பணமும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு தக்க பணியாளர்களின் ஊதியம், துப்புரவுக்குத் தேவைப்படும் பொருட்கள் கொள்முதல் செய்ய வழங்கப்படும் தொகையும் மாறுபடும்.இவ்வாறு அவர் கூறினார். 

13/1/16

B.Ed., 2 ஆண்டு பயிற்சி :பணி புரியும் பள்ளியில் விடுப்பு ஏதும் எடுக்காமல் பயிற்சி எடுக்கலாம்.



3 ஆயிரம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நிம்மதி: தினமலர் செய்தி எதிரொலி

தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு பணி மூப்பு பட்டியல் தயாரிக்க, 'தினமலர் ' செய்தி எதிரொலியாக கல்வித்துறை சார்பில், நேற்று திருத்தப்பட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் 3 பட்டதாரி ஆயிரம் ஆசிரியர்களை பட்டியலில் சேர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மாநில அளவில் 1.1.2016 அடிப்படையில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வுக்கான பணி மூப்பு பட்டியல் தயாரிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் கண்ணப்பன் சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டார். இதில், 2002--2003 கல்வியாண்டில் நேரடி நியமனம் பெற்று 2002 ஜூலையில் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மூன்றாயிரம் பேரை பட்டியலில் சேர்க்க எவ்வித அறிவிப்பும் இல்லை.இதனால் பட்டியல் தயாரிப்பில் குழப்பம் ஏற்பட்டது.'தினமலர் ' செய்திஇதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, பணிமூப்பு பட்டியல் தயாரிக்க திருத்தப்பட்ட உத்தரவை அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் நேற்று கல்வித்துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.அந்த உத்தரவில் '31.12.2002 வரை (2002 ஜூலை உட்பட) நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், இடை நிலையில் இருந்து பட்டதாரியாக பதவி உயர்வு பெற்றவர்கள், பிற துறை மற்றும் தொடக்க கல்வியில் இருந்து பள்ளிக்கல்விக்கு மாற்றமானவர் களையும் பட்டியலில் சேர்க்க வேண்டும். முந்தைய உத்தரவில் 2000--2001 என குறிப்பிட்டதை 2001--2002 என திருத்தம் செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் நிம்மதிதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன், பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் திவ்யநாதன், துணைத் தலைவர் முகிலன் ஆகியோர் கூறுகையில், 'கல்வி இயக்குனர் கண்ணப்பன்மேற்கொண்ட இந்நடவடிக்கையால் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். சங்கங்கள் சார்பில் நன்றியை தெரிவிக்கிறோம்,' என்றனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்லை

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படாது என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது.அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் படி இந்த உயர்வு அளிக்கப்படுகிறது. 

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு முறையே ஜனவரி மற்றும் ஜூலை 1 தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 119 சதவீதமாக உள்ளது.இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7 வது சம்பள கமிஷன் அறிக்கை மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட 5மாநில தேர்தலுக்கு பின்னரே இந்த சம்பள உயர்வு அமல்படுத்தப்படும் என தெரிகிறது.7வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி 125 சதவீத அகவிலைப்படி உயர்வு அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

பணவீக்கம் அதிகமாக இருப்பதால் ஜனவரி மாதத்தில் கணக்கிடப்படும் நுகர்வோர் விலைக்குறியீடும் அதிகமாக இருக்கும். இதன்காரணமாக ஜனவரியில் கொடுக்க வேண்டிய அகவிலைப்படியும் 6 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும். இதனால் ஒட்டு மொத்த அகவிலைப்படி 125 சதவீதத்தை தாண்டிவிடும் அபாயம் உள்ளது.இது 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு முரணாக இருக்கும் என்பதால் ஜனவரி அகவிலைப்படி உயர்வை தள்ளிப்போட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் அரசிடம் அனுமதி பெற்று உயர்கல்வி பெற வேண்டும்!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள்,துறை அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்ற பின் உயர்கல்வி பயில வேண்டும். இதற்காக அரசு ஊக்க ஊதிய உயர்வை வழங்கி வருகிறது.அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில்பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிச் செயலர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம்முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும் என, அரசு தற்போது அறிவித்துள்ளது.


இதனால் பள்ளிச் செயலர்களிடம் மட்டுமே அனுமதி பெற்று உயர்கல்வி படித்தவர்கள்கவலையில் உள்ளனர்.முறையாக கல்வித்துறையினரிடம் அனுமதி பெற்ற ஆசிரியர்களுக்கு அடிப்படைஊதியத்துடன் 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.தற்போது பள்ளி செயலர்களிடம் மட்டுமே முன் அனுமதி பெற்று உயர்க்கல்வி முடித்தபட்டதாரி ஆசிரியர்கள் 5 ஆயிரம் பேர் உயர்கல்விக்கான ஊக்க ஊதியமின்றி தவித்து வருகின்றனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர்.

மாநில தலைவர் இளங்கோ, திண்டுக்கல் மாவட்ட தலைவர் கிருஷ்ணதாஸ், செயலாளர் சந்திரசேகரன் கூறியதாவது:அரசு பள்ளிகளில் ஒரு கல்வி தகுதிக்கு 6 சதவீத ஊக்க ஊதியம், இரண்டு கல்வி தகுதிக்கு (முதுநிலைபடிப்பு) 12 சதவீத ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது.பள்ளிச் செயலரிடம் மட்டுமே அனுமதி பெற்று உயர்கல்வி படித்தவர்கள் மட்டுமே தமிழகத்தில் 5 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கள் உயர்கல்விக்கான ஊக்க ஊதியமின்றி தவித்து வருகின்றனர். அதனால் பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு கோரிக்கை அனுப்பி உள்ளோம், என்றனர்.

போகிப் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை ...

போகிப் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாமக்கல் மாவட்ட பொருளாளர் டி.ராமராஜ் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: நாமக்கல் மாவட்டத்தில் 812 தொடக்கப் பள்ளிகள், 209 நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,021 பள்ளிகள் உள்ளன. இதில் 1,05,705 மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். 


இந் நிலையில் தமிழர்களின் வாழ்வினை உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஓர் உன்னத பண்டிகையான பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி துவங்குகிறது. அப்பண்டிகை நாளின் முதல் நாளான ஜனவரி 14ஆம் தேதி போகிப் பண்டிகை. அன்றைய தினம் தமிழர்கள் அனைவரும் தங்களது வீடுகளைச் சுத்தம் செய்து, வண்ணம் தீட்டி, காப்பு கட்டி, பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற பழமொழிக்கு ஏற்ப, போகிப் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவர். மேலும், பெற்றேர்கள் தங்கள் குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து மகிழ்வர். பெரும்பாலான ஆசிரியர்கள், நகர்ப்புறங்களில் இருந்து, தங்கள் சொந்த கிராமத்துக்கு சென்று பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவர்.

விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவியரும் சொந்த ஊருக்கு சென்று தங்கள் பெற்றேர் மற்றும் சகோதர, சகோதரிகள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்வர்.
இந் நிலையில், ஜனவரி 15ஆம் தேதி தைப்பொங்கல், 16 ஆம் தேதி மாட்டுப்பொங்கல் இந்த இரண்டு நாட்களும் தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. ஆனால், ஜனவரி 14ஆம் தேதி போகிப்பண்டிகை அன்று அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும் வேலைநாளாக செயல்பட வேண்டும் என தொடக்கக் கல்வித்துறை சார்பில் வழங்கியுள்ள நாட்காட்டியில் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் பல ஆசிரியர்கள் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்தவர்கள். பொங்கல் பண்டிகை கொண்டாடும் பொருட்டு அவரவர் மாவட்டங்களுக்கு செல்லும் பொழுது விடுமுறை இல்லாததால், பல்வேறு சிரமத்திற்கு உள்ளாவார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களில் படிக்கும் பல மாணவ, மாணவியர் வெளி மாவட்டங்களில் உள்ள அவரவர் சொந்த ஊருக்கு பண்டிகை நேரத்தில் பயணம் மேற்கொள்வதில் சிரமத்திற்கு உள்ளாக வாய்ப்புள்ளது. மாணவ, மாணவியர் பொங்கல் பண்டிகையினை மனமகிழ்வுடன் சிறப்புடன் கொண்டாடவும், விடுப்புநாள் இல்லாது பேருந்துகளில் செல்வதால் ஏற்படும் சிரமங்களினாலும் அத்தகைய சூழ்நிலையை தவிர்க்க ஜனவரி 14ஆம் தேதி நாமக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து, அதனை ஈடுசெய்யும் வகையில் வேறொரு சனிக்கிழமை பள்ளி வேலைநாளாக அறிவிக்கும் ஆவன செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்கு தடை: மத்திய, மாநில அரசு தரப்பு வாதங்களின் விவரம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து மத்திய அரசின் புதிய அறிவிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது.அப்போது, விலங்குகள் நல வாரியம் சார்பில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து ஏற்கனவே இருக்கும் அறிவிக்கையை மீற முடியாது என்று வழக்குரைஞர் அரிமா சுந்தரம் வாதிட்டார்.
தமிழக அரசு சார்பில், ஜல்லிக்கட்டுக்கான அறிவிக்கையில் காளை வதை பற்றி கவனத்தில்கொள்ப்பட்டுள்ளது என்று தனது தரப்பு வாதத்தை முன்வைத்தது.மத்திய அரசின் வாதத்தில், ஜல்லிக்கட்டுக்கு தேவையெனில் உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளை விதிக்கலாம். ஜல்லிக்கட்டு ஸ்பெயினில் நடைபெறுவது போன்று காளை வதை சண்டையல்ல என்று ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆதரவாக வாதாடியது.
மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர் கொண்ட அமர்வு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

புதிய அரசாணை வருமா??? புது வாழ்வு கிடைக்குமா???? உரிமை முடியாதபள்ளிக்கல்வி அனைவருக்கும் கல்வி இயக்க அரசாணை 177ஆல் 15000க்கும்மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாராம் கேள்விக்குறி???

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களால் ஆணையிடப்பட்டு நூறாண்டுபேசும் ஓராண்டு சாதனைகளில் ஒன்றான 16549 பகுதிநேர ஆசிரியர்களை பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்க அரசாணை 177ன்படி ஆறு முதல் எட்டுவரையிலான வகுப்புகளில் நூறுக்குமேல் மாணவர்கள் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு வாரம் 3 அரைநாட்கள் என்று மாதத்தில் 12 அரைநாட்கள் பணிபுரிய ஓவியம், உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி பாடங்களான கணினி, இசை,தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் பாடங்களை நடத்திட2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.5000 தொகுப்பூதியத்தில் நியமித்தது.

தொடர் கோரிக்கைகளை தொடர்ந்து ஊதியம் மற்றும் பணி நிமித்தம் சார்பாக அவ்வப்போது அறிவுரைகளை, செயல்முறை ஆணைகளை வழங்கியும் மேலும் புதிய அரசாணை186 மூலம் தொகுப்பூதியமும் ரூ.2000 உயர்த்தப்பட்டு ஏப்ரல் 2014 முதல்ரூ.7000ஆக வழங்கப்படுகிறது. அரசாணைப்படி ஒரு ஆசிரியர் ஒன்றிற்கு மேற்பட்டபள்ளிகளில் பணியாற்றும் வாய்ப்பு, மாதத்தின் முதல் தேதியில் ECS முறையில்ஊதியம் போன்றவைகளையே இதுவரை கேட்டும் தீர்வு கிடைக்காததால் – அரசின்திட்டத்தின் அடிப்படையிலான வேலையில் தொடரும் எங்களின்வாழ்வாதாராம்-எதிர்காலம் எல்லாமே அரசின் கைகளிலே!!!!!. எங்களின்எதிர்காலம் அரசு புதிய அரசாணை வெளியிட்டால் மட்டுமே சிறக்கும்!!!!!

15000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின்தொடர் கோரிக்கைகள்
1) நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் 15000க்கும் மேற்பட்டபகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும்.
2) பணியில் இருக்கும்போது மரணமடைந்த பகுதிநேர ஆசிரியர்களின்குடும்பங்களை அரசு தத்து எடுக்க வேண்டும்.
3) பணிநிரவலில் இப்போதும் 100க்கும் குறைவாக மாணவர்கள் உள்ளபள்ளிகளுக்கும் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பணிநிரவலால்தொலைதூரம் சென்று பணி செய்பவர்களுக்கு அருகிலுள்ள பள்ளிகளில் வாய்ப்புகள் வழங்க வேண்டும்.வேலை வாய்ப்பு திண்டாத்தில் நாடு தத்தளிப்பதால் கிடைத்த வேலையை உறுதிசெய்து கொள்ள மன்றாடும் எங்களுக்கு ஆதரவாக அனைத்துக்கட்சிகளும், அனைத்துநாளேடுகளும், அனைத்து ஆசிரியர் கூட்டமைப்புகளும், அனைத்து கல்விஇணையதளங்களும் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களிடம் வேண்டுகோள்வைக்கவும் வேண்டுகிறேன்.

அனைவருக்காகவும்
கடலூர் செந்தில் (எ)சி.செந்தில்குமார்,
(9487257203),
கலியமலை ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளி,
கடலூர் மாவட்டம்.

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா: அரசு நிதி ஒதுக்கீடு

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளி மேலாண்மைக் குழு, கிராமக் கல்விக் குழுவினரின் பங்களிப்பை ஊக்குவிக்கவும், மாணவ, மாணவியரின் தனித் திறமையை வெளிக்கொண்டு வரவும், பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாக ஆண்டு விழா நடத்தப்படாத நிலையில், கடந்த ஆண்டு அனைத்து அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த அரசு உத்தரவிட்டது. இதற்காக, அந்தந்தப் பள்ளிகளுக்கு நிதி வழங்கப்பட்டது. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்படுவதில்லை.ஆனால், சில தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைந்த அளவே இருந்ததால் அங்கு ஆண்டு விழா நடத்தப்படவில்லை.எனவே, நிகழாண்டு தொடக்கப் பள்ளிகளில் 100 மாணவர்களும், நடுநிலைப் பள்ளிகளில் 150 மாணவர்களுக்கும் அதிகமாக படிக்கும் பள்ளிகளில் மட்டும் ஆண்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் 150 பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்காக, தொடக்கப் பள்ளிகளுக்கு தலா ரூ.5,000-மும், நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.6,000-மும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளதால், பிப்ரவரி மாதத்துக்குள் ஆண்டு விழாக்களை நடத்தி முடிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

11/1/16

ஆசிரியர்களின் தொடர் போராட்டம் ஏன்? ஜாக்டோ சார்பில் பிப். 14-இல் கருத்தாய்வு

ஆசிரியர்களின் தொடர் போராட்டம் ஏன்? என்பதை தெளிவுபடுத்தும் வகையில் சென்னையில் பிப்ரவரி 14-இல் கருத்தாய்வு மாநாடு நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜாக்டோ) ஒருங்கிணைப்பாளர் பி.கே. இளமாறன் தெரிவித்தார்.
 சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குழுவின் ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்குப் பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

 மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
 இதன் தொடர்ச்சியாக பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு டிசம்பர் 4-இல் நடைபெறவிருந்த முற்றுகைப் போராட்டமானது வெள்ளப் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால், ஆசிரியர் போராட்டம் ஏன்? என்பதை விளக்கும் வகையில் சென்னையில் பிப்ரவரி 14-இல் கருத்தாய்வு மாநாடு நடத்தப்படும். அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து மாநாட்டுக்கு அழைப்பு விடுப்போம். தேர்தல் அறிக்கையில் கோரிக்கைகளை இடம்பெறச் செய்வோம் என்றார்.

12,000 ஆசிரியர் சான்று சரிபார்ப்பு: சேலம் சி.இ.ஓ., ஞானகவுரி தகவல்.

சேலம் மாவட்டத்தில், 12,000 ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழக அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களில்,
போலிச் சான்றிதழ் கொடுத்து பலரும் சேர்ந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளி, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறியதாவது

: மாவட்டத்தில் உள்ள, 21 ஒன்றியங்களில் குழுக்கள் அமைத்து, 12 ஆயிரம் ஆசிரியர்களின், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள், மூன்று நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, விடுமுறை எடுத்துள்ள ஆசிரியர்கள், சான்றுகள் சமர்ப்பிக்காதவர்களிடம், அதற்குரிய காரணம் குறித்து, போலீசார் விசாரணை நடத்துகின்றனர். விசாரணை குழு குறைகள் கண்டறிந்தால், மேல் அதிகாரிக்கு பரிந்துரை செய்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

CPS :சர்வதேச ஓய்வூதிய சந்தையில் இந்தியா

"என்சிசி-யில் இணைத்துக் கொள்ள 7,859 கல்வி நிறுவனங்கள் காத்திருப்பு'

தேசிய மாணவர் படையில் (என்சிசி) தங்கள் மாணவர்களை இணைத்துக் கொள்ள 7,859 கல்வி நிறுவனங்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளன.
 இதுகுறித்து என்சிசி இயக்கத்தின் தலைமை இயக்குநர் அனிருத்தா சக்ரவர்த்தி தெரிவித்ததாவது: 
என்சிசி அமைப்பை அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விரிவுபடுத்த 5 கட்டங்களாக திட்டங்கள் வகுத்திருந்தோம். 

 ஒவ்வோர் ஆண்டும் 40,000 மாணவர்களை எங்கள் அமைப்பில் இணைத்துக் கொண்டு வருகிறோம்.
 என்சிசியில் தற்போது 13 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் உள்ளனர். மேலும் கடலோர மற்றும் எல்லைப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் மாணவர்களையும் இணைக்க முயற்சி எடுத்து வருகிறோம்.
 அதன்படி, 5 கட்ட மாணவர் சேர்ப்பின் முடிவில், அதாவது எதிர்வரும் 2018-ஆம் ஆண்டில், என்சிசி-யின் பலம் 15 லட்சமாக அதிகரிக்கும். அந்தந்தப் பள்ளி, கல்லூரி வளாகங்களில் என்சிசி அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்து 7,859 கல்வி நிறுவனங்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளன. என்சிசியில் 28 சதவீதமாக உள்ள மாணவிகளின் எண்ணிக்கையை 33 சதவீதமாக அதிகரிக்கவும் திட்டம் உள்ளது.
 குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள என்சிசி முகாமில் பங்கேற்க நாடு முழுவதும் 2,069 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதை குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி கடந்த 6-ஆம் தேதி தொடங்கிவைத்தார்.
 நற்பண்புகள், ஒழுக்கம், தலைமைப் பண்பு, தோழமைப் பண்பு, மதச்சார்பற்ற தன்மை, மனப்பான்மை, தன்னலம் இல்லா சேவைகள், சாகச உணர்வு ஆகியவற்றை மாணவர்களிடையே வளர்க்க வேண்டும் என்பதே என்சிசியின் நோக்கமாகும் என்றார் அனிருத்தா சக்ரவர்த்தி.

சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு சென்னையில் தொடங்கியது. இந்த பயிற்சி வருகிற 13ம் தேதி வரை நடக்கிறது தமிழக தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதற்காக தமிழகத்தில் பல்வேறு அளவில் உள்ள 15 அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி டிசம்பர் 8ம் தேதி முதல் டிசம்பர் 14ம் ேததி வரை நடந்தது. இந்த பயிற்சி முடித்த மாநில அளவிலான பயிற்றுனர்கள், மாவட்ட அளவில் உள்ள பயிற்றுனர்களுக்கு கடந்த 21, 22ம் தேதிகளில் பயிற்சி அளித்தனர். அடுத்தக் கட்டமாக 16 கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு சென்னை, மதுரை, சேலம், திருச்சியில் மாவட்ட அளவிலான பயிற்றுநர்களுக்கு கடந்த 28ம் தேதி முதல் ஜனவரி 8ம் தேதி வரை பயிற்சி அளித்தனர். 

இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை நிறுவனத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நேற்று நடந்தது. இதில் மாநில அளவிலான பயிற்றுனர்கள், மாவட்ட அளவிலான பயிற்றுநர்கள், சட்டப்பேரவை அளவிலான பயிற்றுநர்கள் கலந்து கொண்டு தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர். முதல் கட்ட பயிற்சியில் 94 அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வருகிற 13ம் தேதி வரை நடைபெறுகிறது. 2வது கட்டமாக வருகிற 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில், 49 தேர்தல் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

1,330 அடி நீள திருக்குறள் பதாகை வெளியீடு திருவள்ளுவர் தினத்தையொட்டி, 1,330 அடி நீளம் கொண்ட திருக்குறள் பதாகை வெளியிடப்பட்டது.

சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலை முன் இதற்கான நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

திருவள்ளூர் தமிழ் ஆன்றோர் அவையும், தமிழர் பண்பாட்டு நடுவமும் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, ராஜ்குமார் பழனிச்சாமி தலைமை வகித்தார்.
4 அடி அகலமும், இரண்டரை அடி நீளமும் கொண்ட பெரிய புத்தகப் பதிப்பை தமிழர் ஆன்றோர் பேரவையைச் சேர்ந்த வெற்றியரசன் பாலாஜி பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, கடற்கரைச் சாலையில் 1,330 அடி நீளம் கொண்ட பதாகை வெளியிடப்பட்டது. 

அதில், திருவள்ளுவர் பற்றிய குறிப்புகள், 1,330 திருக்குறள்கள், அதற்கான புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. 1 கி.மீ. தூரத்துக்கு இடம் பெற்றிருந்த பதாகையை பலரும் ஆர்வமுடம் பார்வையிட்டனர்.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் மொழி கூறியதாவது:
உலகின் மிகச் சிறந்த மெய்யியல், நீதி சமூகவியல், அரசியல், இல்லறம், வாழ்வியல் நூலான திருக்குறளை சர்வதேச அளவில் அனைவரும் படித்துப் பயனடைய வேண்டும். குறளின் நெறிப்படி அரசுகளும் பின்பற்றி நல்லதோர் உலகத்தை படைக்க உறுதி ஏற்க வேண்டும். திருக்குறளால் தமிழர்கள் பெருமைப்படுவதோடு நில்லாமல், தங்களது சந்ததியினருக்கும் போதிக்க முன்வர வேண்டும். திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க வேண்டும், அனைத்து பள்ளிகளிலும் பயிற்றுவிக்க வேண்டும், திருவள்ளுவருக்கு தமிழில் அஞ்சல் நாணயம் வெளியிட வேண்டும்.
மக்களவை வளாகத்தில் அவரது உருவச் சிலை அமைக்க வேண்டும். தமிழை நாட்டின் ஆட்சிமொழியாக்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி 1,330 அடி பதாகையை வெளியிட்டுள்ளோம்.
கடந்த ஆண்டு 400 அடி நீளமுள்ள திருக்குறளை வெளியிட்டோம் என்றார்.
கின்னஸில் இடம் பெற...!
கின்னஸில் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக 1,330 அடி நீளமுள்ள திருக்குறள் பதாகை வெளியிடப்பட்டது. மேலும் 4 அடி நீளத்திலும், இரண்டரை அடி அகலத்திலும் 142 பக்கம் கொண்ட பெரிய புத்தகப் பதிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் பதாகையும், அதில் இடம் பெற்றுள்ள குறளுக்கான புகைப்படமும் தேர்வு செய்து தயாரிப்பதற்கு 42 நாள்கள் பிடித்துள்ளது. இதை மாநில அளவில் ஒவ்வொரு அரசு பள்ளியிலும் காட்சிக்கு வைக்கப்பட்டு மாணவ, மாணவிகளிடம் குறள் ஆர்வத்தை ஏற்படுத்தவுள்ளதாகவும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்

தமிழகம் முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடக்கம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. தமிழகத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நடக்கும். ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க இருந்தது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரியில் டிசம்பர் மாதம் 1ம் தேதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பள்ளி, வணிக வளாகம், தொழிற்சாலைகள்,
குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் லட்சக் கணக்கானோர் வீடுகளை இழந்து வீதிக்கு  வந்தனர்.

இந்த பெரும் சேதத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்பட பாடப்புத்தகங்களும் சேதமானது. பாதிக்கப்பட்டவர்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டதால் தொடர்ந்து ஒரு மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, டிசம்பர் மாதம் நடக்க இருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரி மாதம் நடக்கும் என்று அரசு அறிவித்தது. இதன்படி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் இன்று தொடங்கி 27ம் தேதி வரை நடக்கிறது. கீழ் வகுப்புகளுக்கான தேர்வுகளும் இத்துடன் நடத்தப்பட உள்ளது

10ம் வகுப்பு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு கற்றல் கையேடு..........


Download Study Materials
10th Standard


12th Standard
Subject
Tamil
Medium
English
Medium
Tamil & English

Mathematics


Physics & Chemistry


Biology


Accountancy & Commerce


Economics


History


Geography



10/1/16

ஜனாதிபதியை விட அதிகம் : மாதம் ரூ. 4 லட்சம் சம்பளம் வாங்கும் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள்

மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவு கழகத்தில், மூட்டை தூக்கும் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருபவர்களில் 370 பேர், மாத சம்பளமாக ரூ.4 லட்சம் பெற்று வருவது குறித்து உச்சநீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

இது குறித்த  பத்திரிகை செய்தி அடிப்படையில், மும்பை உயர் நீதிமன்றத்தின்  நாக்பூர் கிளை, தானாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டு, மத்திய அரசுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதனை  எதிர்த்து, இந்திய உணவுக் கழக தொழிலாளர்கள் சங்கம், உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தது.

அந்த மனு  தலைமை நீதிபதி தாக்கூர், மற்றும் ஏ.கே.சிக்ரி, பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது,  உணவு கழகத்தில், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அளவுக்கு  ஊக்கத்தொகை அளிக்கும் திட்டங்கள் இருப்பதாக உணவு கழகத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால் அந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

முடிவில் நீதிபதிகள்,  '' இந்திய உணவு கழகத்தில் முறைகேடுகள் நடப்பதையே இது காட்டுகிறது . ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளி எப்படி ரூ.4 லட்சம் சம்பாதிக்கிறார்? அவர் தொழிலாளியா அல்லது ஒப்பந்ததாராரா? இந்த நாட்டில் அதிக சம்பளம் பெறுவது குடியரசுத் தலைவர்தான். அவரை விட 370 தொழிலாளர்கள் மாதம் ரூ. 4  லட்சம் சம்பளமாக பெறுகின்றனர். அதனால் ஆண்டுக்கு அரசுக்கு 18000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

இந்த விவகாரத்தில் மிகப் பெரிய தவறு நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு விரைந்து இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும். இது குறித்து 10 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்.  இல்லையென்றால் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான உயர் மட்ட குழு அமைத்து நாங்களே விசாரணை நடத்த வேண்டியது இருக்கும்'' என்று எச்சரித்தனர்.

மத்திய உணவு கழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்,  370  மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் தலா  ரூ. 4 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளனர். மேலும் 400 தொழிலாளர்கள்  ரூ.2 முதல் ரூ 2.5 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளனர்.

பள்ளி மாணவர்கள் ஜங்க் உணவுகளை கொண்டு வருவதை தடுக்க கடும் சோதனை: சிபிஎஸ்இ

பள்ளி மாணவர்கள் ஜங்க் உணவு வகைகளைக் கொண்டு வருவதையும், பள்ளி கேன்டீன் மற்றும் 200 மீட்டர் பரப்பில் ஜங்க் உணவுகள் விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து சிபிஐஎஸ் பள்ளிகளுக்கு நிர்வாகம் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. பள்ளி மாணவர்கள் கொண்டு வரும் உணவு பொருட்களை பரிசோதித்து, அவை உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவுதான் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு சிபிஎஸ்சி நிர்வாகம் கூறியுள்ளது.

அதிக கொழுப்பு, உப்பு, சர்க்கரை போன்றவை அதிகம் இருக்கும் உணவு பொருட்கள் காரணமாக இரண்டாம் நிலை நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் மாணவர்களுக்கு ஏற்படக் காரணமாக இருக்கிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி கேன்டீன்களிலும் ஜங்க் உணவுகள் விற்பதை தடுக்கவும், சுகாதாரமான உணவுகள் விற்பனை செய்வதை உறுதி செய்யவும், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் உட்பட 10 பேர் கொண்ட குழு ஒன்றை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எஸ்சி, எஸ்டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு தொடர்பான தீர்ப்பில் பிழை: ஒப்புக்கொண்டது உச்ச நீதிமன்றம்

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின (எஸ்சி, எஸ்டி) பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களின் பதவி உயர்வு தொடர்பாக ஓராண்டுக்கு முன்னர் அளிக்கப்பட்ட தீர்ப்பில் பிழை உள்ளதை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. "எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்குவதை அரசியல் சாசனம் அனுமதிக்கிறது. ஆனால், இது தொடர்பாக அரசுக்கு நீதிமன்றங்கள் உத்தரவிட முடியாது' என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி அளித்த தீர்ப்பு ஒன்றில் தெரிவித்திருந்தது.

எனினும், இந்தத் தீர்ப்பில் ஒரு பிழை இருப்பதாகவும், அதை சரிசெய்யுமாறும் கோரி சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா உள்பட பல்வேறு வங்கிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ.செலமேஸ்வர் மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். அவர் கூறியதாவது:

வங்கிகளில் குரூப்-ஏ பணியிடங்களில் மாதம் ஒன்றுக்கு ரூ.5,700 வரை ஊதியம் பெறும் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பதவி உயர்விலும் இடஒதுக்கீடு பெற முடியும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் ஒரு பத்தியில் கூறப்பட்டுள்ளது.

எனினும், அதற்கு அடுத்த பத்தியில் அதற்கு முரணான வாசகம் இடம்பெற்றுள்ளது. அதாவது, "குரூப்-ஏ பணியிடங்களில் மாதம் ஒன்றுக்கு ரூ.5,700 வரை ஊதியம் பெறும் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு கிடையாது; சலுகைகள் மட்டுமே உண்டு' என்று கூறப்பட்டுள்ளது. தீர்ப்பைச் செயல்படுத்துவது தொடர்பான உத்தரவைக் கொண்டிருக்க வேண்டிய இந்தப் பத்தியில் இவ்வாறு தவறான வாசகம் உள்ளது. இந்த வாசகத்தை நீக்க நீதிபதிகள் உத்தரவிட வேண்டும் என்று ரோத்தகி வாதிட்டார்.

இந்நிலையில், மறு ஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, அட்டர்னி ஜெனரலின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பில் பிழை இருப்பதை ஒப்புக் கொண்டனர். தீர்ப்பில் பிழையான வாசகம் அடங்கிய சம்பந்தப்பட்ட பத்தியை நீக்குமாறும் உத்தரவிட்டனர். மேலும், இந்தப் பிழை காரணமாக எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டிருந்தால் அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடி நியாயம் பெறலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க கோரிக்கை

மருத்துவர்களைப் போன்று ஆசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் குமரேசன் ஆகியோர் கூட்டாக தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:
சமீப காலமாக ஆசிரியர்கள் சில சமூக விரோதிகளால் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியர்கள் மீது வீண்பழி சுமத்தப்படுவதும், அதனால் ஆசிரியர்கள் தாக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. உண்மையிலேயே தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறோம்.

அதே நேரத்தில் பொய்யான குற்றச்சாட்டால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஒருபக்கம், மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாக மாணவர்களை தயார் படுத்தக் கோரி உயர் அதிகாரிகளின் நெருக்குதல், மறுபக்கம், மாணவர்களின் ஒத்துழைப்பின்மை என கடுமையான மன உளைச்சலுக்கு ஆசிரியர்கள் ஆளாக நேரிடுகிறது. எனவே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கும் மையங்களை பள்ளிகளில் நிறுவ வேண்டும். மாணவர் சிந்தனைகளை தூண்டும் வகையில் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

மேலும் மாணவர்கள் விளையாட்டு மைதானங்களில் செலவிடும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். அச்சமில்லாமலும், மன நிறைவுடனும் பணியாற்ற ஏதுவாக மருத்துவர்களுக்கு உள்ளது போல் பணிப் பாதுகாப்புச் சட்டத்தை ஆசிரியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மேலும் மாணவர்களுக்கு நீதி போதனா வகுப்புகளை கட்டாயமாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

பாடத்திட்டம் திடீர் மாற்றம்: மாணவர்கள் அதிர்ச்சி

உயர் படிப்புக்கான உதவித்தொகை தரும், தேசிய வருவாய் வழி தேர்விற்கு, 15 நாட்களே உள்ள நிலையில், திடீரென பாடத்திட்டம் மாற்றப்பட்டதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்பர்.

வெற்றி பெறும் மாணவர்களுக்கு, ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மாதந்தோறும், 500 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.நடப்பு கல்வியாண்டில் இத்தேர்வு, ஜன., 23ல், தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது; மூன்று லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.தேர்வுக்கு இன்னும், 15 நாட்களே உள்ள நிலையில், அரசு தேர்வுத்துறையின் புதிய அறிவிப்பால் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தேசிய வருவாய் வழி தேர்வுக்கு, எட்டாம் வகுப்பு பாடங்கள் முழுமையும் பாடத்திட்டமாக வைக்கப்பட்டு, அதிலிருந்து தான் வினாக்கள் கேட்கப்படும். இம்முறையும் அதே பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டு, மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
ஆனால், திடீரென தற்போது அரசு தேர்வுத்துறை இயக்குனர் அனுப்பியுள்ள அவசர சுற்றறிக்கையில், 'எட்டாம் வகுப்பில், முதல் இரண்டு பருவ பாடங்களையும், ஏழாம் வகுப்பில் அனைத்து பருவ பாடங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டும். 
இதன் அடிப்படையிலேயே வினாத்தாள் அமையும். இதை, திருத்திய அறிவுரையாக எடுத்துக் கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

தேர்வு துறையின் அறிவிப்பு, வேடிக்கையாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. இரண்டு வாரங்களே மீதமுள்ள நிலையில், திடீரென, 'ஏழாம் வகுப்பின் ஓராண்டு பாடத்தையும் படியுங்கள்' என, மாணவர்களை எப்படி நிர்பந்தப்படுத்த முடியும். இந்த 
அறிவிப்பு, விதிகளை மீறுவதாக உள்ளது.எந்த ஒரு தேர்வுக்கும், விண்ணப்பிக்கும் முன் அறிவிக்கும் அதிகாரப்பூர்வ அறிவிக்கை தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். விண்ணப்பித்த பின் அறிவிக்கையை மாற்ற, சட்டத்தில் இடமில்லை.- ஆசிரியர்கள்

இளம் வயது மாணவர்களுக்கு தண்டனை கொடுப்பது போல், இந்த அறிவிப்பு உள்ளது. ஏற்கனவே, அரையாண்டு தேர்வையும் வைத்துக் கொண்டு, உதவித்தொகைக்கான தேர்வையும் 
அறிவித்ததால், இரண்டு தேர்வுக்கும் தயாராக முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர்.இதில் திடீரென, 'கடந்த ஆண்டு பாடங்களை படியுங்கள்' என்பது என்ன நியாயம்; மாணவர்கள் ஓராண்டில் படிக்க வேண்டியதை இரண்டு வாரங்களில் படிக்க முடியுமா?- பெற்றோர்

தேர்தல் முறைகேட்டை அனுப்ப 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' வசதி

'சட்டசபை தேர்தல் முறைகேடு புகார்களை, படங்களுடன் அனுப்ப, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' வசதி செய்யப்பட்டுஉள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். கண்ணியமான தேர்தலுக்கான அமைப்பின் சார்பில், 'கண்ணியமான தேர்தல்' என்ற தலைப்பில், வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம், துவங்கியது. சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லுாரியின், மனித உரிமைகள் துறையுடன் இணைந்து, இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேவசகாயம் உள்ளிட்டோர் முக்கிய விருந்தினராக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ராஜேஷ் லக்கானி பேசியதாவது: நேர்மையான தேர்தல் நடத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. முறைகேடு புகார்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து புகார் அளிக்கவும், படங்கள் எடுத்து அனுப்பவும், 'பேஸ் புக், வாட்ஸ் ஆப்' வசதி அறிமுகம் செய்யப்படும். மாணவர்கள், என் அலைபேசி எண்ணுக்கே, 'வாட்ஸ் ஆப்'பில் புகார்அனுப்பலாம். ஆனால், தவறான தகவல் தர வேண்டாம்.

தேர்தல் நாளில் வீட்டிலிருந்து, 'டிவி' பார்த்து கொண்டிருக்காமல், முதலில் ஓட்டை பதிவு செய்யுங்கள். மாணவியர், இளைஞர்கள் அனைவரும், தேர்தல் துறையின் துாதராக, தலைமை தேர்தல் அதிகாரியாக நினைத்து, நேர்மையான தேர்தல், ஓட்டு போடுவதன் அவசியத்தை, குடும்பத்தில், அக்கம் பக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

'ஊழல் கரங்களுக்கு ஓட்டு வேண்டாம்':

நிகழ்ச்சியில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பேசியதாவது:நான், 2011 தேர்தலில் மதுரை கலெக்டராக இருந்த போது, 'பணநாயகம்வீழ்த்தப்பட வேண்டும்' என, தேர்தல் அதிகாரிகள் கூறினர். அதை மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு செய்து, பகலில் வாக்காளர்களுக்கு போதனையும், இரவில் வாகன சோதனையும் மேற்கொண்டோம். நேர்மையான தேர்தலை நடத்தினோம்.அதேபோல், இந்த தேர்தலும் கண்ணியமாக நடக்கும் என நம்புகிறேன். ஊழல் கரங்களுக்கு ஓட்டு போட வேண்டாம்.நீங்கள் பொறுப்பாக ஓட்டு போட்டால் நாட்டில் புரட்சி நடக்கும். பணத்தை வாங்கி ஓட்டு போடாதீர்கள்.மாணவர்கள் மூலம், பொறுப்புள்ள சமூகத்தை உருவாக்கலாம். நீங்கள் நேர்மையாக இருக்க, உங்கள் குடும்பம் நேர்மையாக இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். உங்கள் கண்ணியமான ஓட்டின் மூலம், வேலையில்லா திண்டாட்டம் ஒழியும்; 

விவசாயி தற்கொலை செய்ய மாட்டார்கள்; மன்னர்களை மண்டியிட வைக்கும் ஜனநாயக கடமை உங்களிடம் உள்ளது. நீங்கள் இந்த தேசத்தை நேசிப்பதை உறுதிப்படுத்த, ஊழலற்றவர்களுக்கு ஓட்டு போடுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

10ம் வகுப்பு செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு

அரசு தேர்வுத்துறை, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வை அறிவித்துஉள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பு வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டது. ஏற்கனவே, மழை, வெள்ளத்தால் தள்ளி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு, ஜன., 11ல் துவங்கும் நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பு வராமல் மாணவர்கள் தவித்தனர்.
செய்முறை தேர்வு தேதி தெரிந்தால் தான், 'ரிவிஷன்' தேர்வுகளை திட்டமிட முடியும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது.இந்நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பை, அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. அதில், 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு, ஜன., 22 முதல் பிப்., 3க்குள் நடத்தி முடித்து, மதிப்பெண் பட்டியல் அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையுள்ள அரசு பள்ளிகளில், ஜன., 11 முதல், 27க்குள், இரண்டாம் பருவ தேர்வை நடத்தி முடிக்க, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தேர்தல் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாம்: சென்னையில் நாளை துவக்கம்

சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு, பயிற்சி அளிக்க உள்ள பயிற்சியாளர்களுக்கான முகாம், சென்னையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு, நடைபெற உள்ளது.தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. எனவே, தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, மாவட்டத்திற்கு ஆறு பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களுக்கு கடந்த மாதத்தில் இருந்து, பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.டிச., 30 மற்றும் 31ம் தேதி, தேர்தல் பொறுப்பு அலுவலர்களுக்கு சேலத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று சென்னையில், ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த, செய்தி மக்கள் தொடர்பு 
அலுவலர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது.தேர்தலின்போது, சமூக வலைதளங்களில், ஓட்டுப்போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரசாரம் செய்வது, மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ள இவர்களுக்கு, தேர்தல் கமிஷன் அதிகாரிகள், நேரடியாக நடத்தும் பயிற்சி வகுப்பு சென்னை மற்றும் பவானிசாகரில், இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.
சென்னையில், நாளை முதல், 13ம் தேதி வரை, பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில், 21 மாவட்டங்களில் இருந்து, மாவட்டத்திற்கு, ஆறு 
பயிற்சியாளர்கள் வீதம் கலந்து கொள்ள உள்ளனர்.பவானிசாகரில், 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை, பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில், 11 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

அரசு கல்லூரி போராசிரியர் மீது தாக்குதல் TNPTF கண்டனம்.

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் தலைவர் திரு.பி.சிவராமன் அவர்கள் மீது சிலர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் மோசஸ், மாநிலப் பொதுச் செயலாளர் பாலச்சந்தர், மாநிலப் பொருளாளர் ஜீவானந்தம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த சில காலங்களாகவே ஆசிரியர் சமுதாயம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வருகிறது. வகுப்பறைக்குள்ளே ஆசிரியர்கள் கொலை செய்யபடுவதிலிருந்து பல்வேறு தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். கல்வி வணிக பொருளாக்கப்பட்டு கல்வியின் மகத்துவத்தை சின்னபின்னமாக்கிய  அரசுகளே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இலாப வேட்கை கொண்ட கார்ப்பரேட்டுகள் கல்வி நிறுவனங்களை தங்களின் மூலதனம் பெருகுவதை இலக்காக கொண்டதன் விளைவு, இந்த நாட்டின் எதிர்காலமாக திகழ வேண்டிய மாணவர் சமுதாயம் மாயை உலகின் பின்னால் சென்று சீரழிந்து வருகிறார்கள். இதன் காரணமாக ஆசிரியர் சமுதாயம் பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. 

இதன் ஒரு பகுதியாக திருவாரூரில் பேராசியர் சிவராமன் கல்லூரி வளாகத்திற்கு வெளியில் சில சமூக விரோதிகளால் கண் மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் மீது நடந்த கொலைவெறி தாக்குதலை தமிழ்நாடு காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்ட ரீதியான தண்டனை பெற்றுத் தர வேண்டுமென எங்கள் அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் ஆசிரியர் சமுதாயம் அச்ச உணர்வின்றி பாதுகாப்பாக பணியாற்ற உரிய சட்ட பாதுகாப்பினை வழங்க வேண்டுமென தமிழக அரசை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

16549 பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் உதவிட புதிய அரசாணை வெளியிட கோரி தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு

துணைவேந்தர் தேர்வு குழு அமைப்பு

சென்னை பல்கலைக் கழக துணைவேந்தரை தேர்வு செய்ய, மூன்று பேர் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில், ஓய்வுபெற்ற ஊழல் ஒழிப்பு மற்றும் வளர்ச்சி கமிஷனர் வேத நாராயணன், எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழக, அறிவியல் மற்றும் மனித நேய துறை இயக்குனர் பாலசுப்ரமணியன், சென்னை பல்கலைக் கழக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் சுரேந்திர பிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழு, துணைவேந்தர் பதவிக்கு தகுதியான, மூன்று பேரை தேர்வு செய்து, அவர்கள் குறித்த விபரங்களை, கவர்னருக்கு பரிந்துரை செய்யும்; அதில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.

ஆசிரியர் கல்வி; டிப்ளமோ தேர்வு முடிவு வெளியீடு

ஆசிரியர் கல்வி டிப்ளமோ மாணவ, மாணவியருக்கான தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. தமிழகத்தில், 400க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சிப்பள்ளிகள் உள்ளன. இதில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு, இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்டு, டிப்ளமோ வழங்கப்படுகிறது. இதில், தேர்ச்சி பெறுபவர்கள், அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிய வாய்ப்புள்ளது. இதில், 2015-16 கல்வியாண்டுக்கான தேர்வு, கடந்த மே மாதத்தில் நடந்தது. இதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது. 

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் விஜயகுமார் கூறியதாவது: ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படித்து தேர்வெழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு நாளை (இன்று) வெளியிடப்படுகிறது. இவற்றை அந்தந்த பயிற்சி பள்ளிகளில் சென்று தெரிந்து கொள்ளலாம். பிரைவேட் மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அகஇ - இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடத்திலும், ஆசிரியர்களிடத்திலும் மற்றும் பொது மக்களிடத்திலும் மற்றும் தனி திறன்களை மேம்படுத்தவும் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட முறையே 100, 150க்கு அதிகமாக உள்ள மாணவர்கள் எண்ணிக்கை தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.5000/-ம், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.6000/-ம் ஒதுக்கீடு செய்து இயக்குனர் உத்தரவு






8/1/16

மத்திய அரசு முடிவு: ஜூன் மாதத்துக்கு பின்னர் 7வது ஊதியக்குழு சம்பளம்

வரும் ஜூன் மாதத்துக்கு பின்னர்தான் 7வது ஊதிய குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைக்கப்படும். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இறுதிக்காலத்தில் 7வது ஊதியக்குழு கமிஷன் அமைக்கப்பட்டது. இந்தக் குழு பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி தனது அறிக்கையை கடந்த டிசம்பரில் அரசிடம் தாக்கல் செய்தது. இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 14 சதவீத சம்பள உயர்வு கிடைக்கும் என கூறப்பட்டது. 


இந்த சம்பள உயர்வு ஜனவரி 2016 முதல் அமல்படுத்தப்படும். தாமதமாக அமல்படுத்தப்பட்டால் அதிக நிலுவை தொகை ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இது மத்திய அரசுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும். இதனால் வெகுவிரைவில் 7வது ஊதியக் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஊதியக் கமிஷன் பரிந்துரை குறித்த தனது ஒப்புதலை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பிப்ரவரி மாதம்தான் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு இடையே, தமிழகம், புதுவை, கேரளா உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடுவில் வருகிறது. இந்த காரணங்களால் ஜூனுக்கு முன்னதாக 7வது ஊதியக் கமிஷன் பரிந்துரைப்படி புதிய சம்பளம் கிடைக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

திறனற்றவர்கள்’ என்று யாருமில்லை!

நாம் யாருமே திறமை குறைந்தவர்கள் இல்லை. ஒவ்வொருவரிடத்திலும் திறமை உள்ளது. அத்திறமை முழுமையாக வெளிப்படுத்துவதில் தான் வேறுபாடு உள்ளது. ஆகவே, ‘திறமையை முழுமையாக வெளிப்படுத்துபவர்கள்’, ‘முழுமையாக வெளிப்படுத்தாதவர்கள்’ என்று தான் பிரித்துக்கூற வேண்டுமே தவிர, ‘திறன் உள்ளவர்கள்’, ‘திறனற்றவர்கள்’ என்றல்ல!


நமது முழு திறமையையும் வெளிப்படுத்தும் பட்சத்தில் மட்டுமே, வெற்றியாளராக பரிணமிக்க முடியும்! வெளிப்படுத்துவதில் தான் சாதனையும் அடங்கி உள்ளது!

சாதனையாளர்களின் வாழ்க்கையை உற்று கவனியுங்கள். அனைவரும் தனது திறமையை முழுமையாக பயன்படுத்தியவர்கள். எந்த ஒரு செயலையும் பாதியில் அப்படியே விட்டுவிட்டு கடந்து வந்தவர்கள் அல்ல. நாதஸ்வர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை தனது முதுமையிலும் தினமும் நாதஸ்வரம் பயிற்சி எடுத்து கொண்டவர்.

அதுகுறித்து அவரிடம் கேட்ட போது, “ஒருநாள் பயிற்சி செய்யாமல் கச்சேரிக்கு போனால் வாசிக்கும் சிறுசிறு குறைகள் கூட தனக்கே தெரியும்.  இருநாட்கள் பயிற்சி எடுக்காமல் போனால் என்னை போன்ற வித்துவான்களுக்கு குறைகள் தெரியும். மூன்று நாட்களுக்கு பயிற்சி எடுக்காமல் போனால் விஷயம் தெரிந்த ரசிகர்களுக்கு குறை தானாக தெரிந்துவிடும். எனவே, தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்”, என்றார்.

மாநிலத்தின் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களிடம் கேட்டுபாருங்கள், அவர்கள் தினமும் படிப்பதுடன் , தொடர்ந்து வினாவுக்கான விடையை எழுதிப்பார்த்ததாக கூறுவார்கள். தொடர்ந்து பல தேர்வுகளை எழுதி பிழை திருத்திப்பார்த்தே அனைத்து பாடங்களிலும் 100 சதவீதம் பெற்றோம் என்பார்கள்.  மருத்துவராக வேண்டும், ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும், ஐ.ஐ.டி.,யில் சேர வேண்டும் என நினைக்கும் மாணவர்கள் படித்தால் மட்டும் போதாது; தினமும் படிக்க வேண்டும்; தினமும் எழுதிபார்க்க வேண்டும்!

ஒட்ட பந்தயத்தில் முதலாவதாக வர வேண்டுமென்று நினைப்பவன் நன்றாக ஓடினால் பயனில்லை. முழு திறமையும் வெளிப்படுத்தி ஓடினால் மட்டுமே வெற்றி கோட்டையை முதலில் தொட முடியும். ‘நன்றாக ஒடுவேன், நான் கிட்டதட்ட ஜெயித்து விடுவேன்’ என்ற நினைப்புடன் ஒடினால், எப்போதும் போல் தான் ஓட முடியும், அது வெற்றியை பெற்று தந்துவிடாது.

நம் மனது எதை முடிவெடுக்கின்றதோ அதுவே நமக்கு கிடைக்கும். நாம் வைத்திருக்கும் பாத்திரத்தின் அளவு மட்டுமே மழை நீரை சேகரிக்க முடியும். மனதை முழு ஈடுப்பாட்டுடன் இணைத்து முழுதிறனும் வெளிப்படும்படி செயல்படுங்கள்... வெற்றியாளராக உருவாகுங்கள். முழுதிறனுடன் ஈடுபடுதல் என்பது நம்மை வெற்றியாளராக மட்டும் அல்ல; விரைவில் சாதனையாளராகவும் மாற்றிவிடும்!

-க.சரவணன், மதுரை.

ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க உத்தரவு!

போலிச்சான்றிதழ் விவகாரத்தால், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், தங்கள் சான்றிதழ்களை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவற்றை சரிபார்க்க, தலைமை ஆசிரியர்கள் மற்றும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு ஆசிரியர் பணியிடங்களில், போலிச்சான்றிதழ் கொடுத்து பலரும் சேர்ந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து, தர்மபுரி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், போலிச்சான்றிதழ் தயாரித்து கொடுத்த கிருஷ்ணகிரியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை கைது செய்தனர். இவரிடம் பலரும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து போலிச்சான்றிதழ் பெற்று, பணியில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உதவிபெறும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் சான்றிதழ்களையும் சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கென ஒன்றியம் வாரியாக சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரிஜினல் சான்றிதழ்களை சமர்பித்து, சரிபார்த்த பின், நகல் சான்றுகளை சுய சான்றொப்பம் இட்டு ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூன்று நாளில் இப்பணியை முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதில் சான்றிதழ்களை ஒப்படைக்காத ஆசிரியர்களின் பட்டியலையும் தயாரித்து, அதன் உண்மை தன்மை குறித்த நிலவரத்தையும், அதற்கான அறிக்கையையும் ஒரு வார காலத்துக்குள் சமர்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வுத்தரவுகளை, சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி பிறப்பித்துள்ளார்.

10ம் வகுப்பு தேர்வுக்கட்டணம் ஜன., 20க்குள் செலுத்த உத்தரவு

பத்தாம் வகுப்பு தேர்வுக்கட்டணத்தை மாணவர்களிடம் இருந்து, ஜன., 20ம் தேதிக்குள் வசூலித்து செலுத்த வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் மாதத்தில் தொடங்குகிறது. இதற்கான மாணவர் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டது. இவர்களுக்கு தேர்வுக்கட்டணமாக, 115 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் படிப்பவர்கள், பிறமொழி எடுத்து படிப்பவர்களில், எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., ஆகியோருக்கும், பிற்படுத்தப்பட்டோரில் ஆண்டு வருமானம், 2 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்களுக்கும் தேர்வுக்கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மற்ற மாணவர்களிடமிருந்து தேர்வுக்கட்டணத்தை, ஜன., 20ம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. ஜன., 21ம் தேதிக்குள், கட்டண விலக்கு பெற்ற மாணவர்களின் பட்டியல், கட்டணம் செலுத்திய மாணவர்களின் பட்டியல் உள்ளிட்ட விபரங்களை கல்வித்துறை அலுவலகத்தில் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை பணி நியமனத்திற்கு தடை!

அண்ணா பல்கலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தலாம். பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது, என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மண்டல அண்ணா பல்கலை விரிவுரையாளர் பிரபாகர் தாக்கல் செய்த மனு:அண்ணா பல்கலையின் 13 உறுப்புக் கல்லுாரிகள், 3 மண்டல கல்லுாரிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்ப, பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டார். இதில் இனசுழற்சி முறை சரியாக பின்பற்றப்படவில்லை. இட ஒதுக்கீடு முறையில் உள்ள வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. எங்களைப் போல் பணியில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். பதிவாளர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, பிரபாகர் மனு செய்திருந்தார்.


திருநெல்வேலி மண்டல அண்ணா பல்கலை உதவிப் பேராசிரியர் ராஜ்குமார், அண்ணா பல்கலை பதிவாளர் 102 பேராசிரியர், 178 இணை பேராசிரியர் பணியிடங்களை விதிகளுக்குப் புறம்பாக, நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டார். அதை ரத்து செய்து 75 சதவீதம் பதவி உயர்வு, 25 சதவீதம் நேரடியாக நியமிக்க உத்தரவிட வேண்டும், என மனு செய்திருந்தார்.

நீதிபதி டி.ஹரிபரந்தாமன், நேர்காணல் நடத்தலாம். ஆனால், பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது. பின்னடைவு பணியிடங்கள் எவ்வளவு என்பதை ஜன.,18 ல் பல்கலை தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும், என்றார். உயர்கல்வித்துறை செயலர், பல்கலை பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மனுதாரர் வழக்கறிஞர்கள் லஜபதிராய், அருள்வடிவேல், பல்கலை வழக்கறிஞர் ராஜராஜன் ஆஜராயினர்.

சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தீவிரம் 100க்கும் மேற்பட்ட போலி ஆசிரியர்கள் ஓட்டம்

தமிழகத்தில் பல மாவட்டங்களில் போலி சான்றிதழ்களை கொடுத்து அரசு பள்ளிகளில் பலர் ஆசிரியர் பணியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. கடந்த 1991க்கு பின்னர் பணியில் சேர்ந்த பலரது சான்றிதழ்களை சரிவர ஆய்வு செய்யாததே இதற்கு காரணம். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், வேலூர் மாவட்டங்களில் மேலும் பல போலி ஆசிரியர்கள் இருப்பது தெரியவந்தது.


கடந்த 4ம் தேதி இந்த 5 மாவட்டங்களில் 40 ஆசிரியர்கள் திடீரென விடுப்பு எடுத்தனர். நேற்று முன் தினமும் 100க்கும் மேற்பட்டோர் பல இடங்களில் பணிக்கு வரவில்லை. இந்த விவகாரம் கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகியுள்ளனர். பலர் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டு சட்டரீதியாக தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், கடந்த 15-20 ஆண்டுகளில் பணிக்கு சேர்ந்த ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவர் தவிர, போச்சம்பள்ளி அருள்சுந்தரம் என்பவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை  இருந்து வரும் தகவல் அடிப்படையில் போலி ஆசிரியர்களை பிடிக்க கூடுதல் தனிப்படைகள் அமைக்கவும் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுவது குறித்தும் போலீசார் ஆலோசிக்கின்றனர்.

வேலை வழங்கக்கோரி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஊர்வலம். 

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வழங்கக்கோரி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து லஸ் கார்டன் வரை ஊர்வலமாக சென்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். 

ஊர்வலத்தின் போது, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு வேலை கொடுங் கள், எதிர்கால பயம் எங்களை வாட்டி வதைக்கிறது என்ற கோஷங்களை எழுப்பினர். மேலும், தகுதித்தேர்வில் ஒவ்வொருவரும் எடுத்த மதிப்பெண்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலத்தில் பங்கு பெற்றனர். இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் மு.ஜெயகவிதா பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2013-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை கிடைக்காமல் போய்விட்டது. கடந்த 2 வருடங்களாக தவித்து வரும் எங்களுக்கு வேலை வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைத்தால் இது கண்டிப்பாக நடக்கும். அவரை சந்திக்க எங்களுக்கு ஒரு நிமிடம் வாய்ப்பு தர வேண்டும். எங்கள் பயம் கலந்த வாழ்வை மீட்டெடுக்க, எங்களுக்கு நம்பிக்கையும், எங்கள் தலைமுறை சிறக்க நியாயமும் வழங்க வேண்டும்.

டி.ஆர்.பி.,அறிவிப்பு-ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்களை, பிப்., 5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்

வெள்ளத்தில் சேதமான சான்றிதழ்களுக்கு பதில், புதிய ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்களை, பிப்., 5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி., அறிவித்துஉள்ளது.வெள்ளம் பாதித்த பகுதிகளில், மாற்று சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்களை இழந்தோருக்கு டி.ஆர்.பி., புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, வெள்ளத்தில் சான்றிதழ் இழந்தோர், டி.ஆர்.பி.,யின், http:/trb.tn.nic.in/ இணையதளத்தில், பிப்.,5ம் தேதி வரை, சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் பயிற்சிகளால், ஆசிரியர்கள் தவிப்பு!

தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வும், 11ம் தேதி துவங்குகிறது.இதனால், மழை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையால், கிடப்புக்குப் போன பாடங்களை விரைந்து முடிக்க, ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். 

அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, ஆசிரியர்களுக்கான பாடம் எடுக்கும் பயிற்சியை, ஆர்.எம்.எஸ்.ஏ., என்ற, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதாவது, 10ம் வகுப்பு பாடம் எடுக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கு, நேற்று முதல், 9ம் தேதி வரை, மூன்று நாட்கள், மாவட்ட ரீதியாக சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த மூன்று நாட்களும், பள்ளி வேலை நாட்கள் என்பதால், ஆசிரியர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்

சத்துணவு ஊழியர் போராட்ட அறிவிப்பு 11 பேரின் ஊதிய உயர்வு நிறுத்தம் ரத்து

சத்துணவு ஊழியர்களின் தொடர் போராட்ட அறிவிப்பால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 பேரின் ஊதிய உயர்வு நிறுத்தத்தை நிர்வாகம் ரத்து செய்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 மாதங்களில் 23 சத்துணவு ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அதன்பின் சிலரது 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து செய்யப்பட்டு இடமாறுதல் செய்யப்பட்டனர். சிலருக்கு ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டது. இதை கண்டித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்ட ஊழியர்கள் டிச., 14 ல் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

பின் நிர்வாகிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில், சத்துணவு ஊழியர்கள் மீதான நடவடிக்கை டிச., 28 க்குள் ரத்து செய்யப்படும் என, மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தது. காலக்கெடு முடிந்தும் நடவடிக்கை இல்லை. ஜன., 8 ல் திருப்பூரில் நடக்கும் மாநில மாநாட்டிற்குள் நடவடிக்கை இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குவது நிறுத்தப்படும் என, சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்தது.

இதையடுத்து முதற்கட்டமாக 11 பேரின் ஊதிய உயர்வு நிறுத்தத்தை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்தது.சத்துணவு ஊழியர் சங்க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் ஏ.முருகேசன் கூறியதாவது: ஊதிய உயர்வு நிறுத்தம் ரத்து செய்ததை வரவேற்கிறோம். ஜன., 8 க்குள் 4 பேரின் 'சஸ்பெண்ட்' உத்தரவும், 17 பேரின் இடமாறுதலும் ரத்து செய்யப்படும் என, நிர்வாகம் உறுதியளித்துள்ளது. நிறைவேற்றாவிட்டால் அறிவித்தப்படி போராட்டம் நடத்தப்படும், என்றார்.

11 ஆயிரம் அரசு ஊழியர்கள் 'ஸ்டிரைக்!'

கோரிக்கைகளை வலியுறுத்தி, 11 ஆயிரம் வருவாய் துறை அலுவலர்கள், நேற்று, ஒரு நாள், ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், வருவாய்த்துறை பணிகள் பாதிக்கப்பட்டன; மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.தமிழக அரசின் வருவாய்த்துறை அலுவலர்கள், நான்கு ஆண்டுகளாக, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, பல கட்ட போராட்டங்களை நடத்தினர். அரசுடன் பலமுறை பேச்சு நடத்தியும், ஏற்கப்பட்ட கோரிக்கைகள் செயல்பாட்டிற்கு வரவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த வருவாய்த்துறை அலுவலர்கள், நேற்று ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தை நடத்தினர்.

'தமிழகம் முழுவதும், 13 ஆயிரம் பேர் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் பங்கேற்பர்' என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களின் வெள்ள நிவாரண பணிகள் காரணமாக, வருவாய் ஊழியர்கள் பணிகளில் ஈடுபட்டனர்.பிற மாவட்டங்களில், வருவாய்த்துறை பணிகள் முடங்கின. கலெக்டர், தாசில்தார் அலுவலகங்களுக்கு வந்த மக்கள், ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கோரிக்கைகள்
* காலியாக உள்ள, 7,000 பணி இடங்களை நிரப்ப வேண்டும்
* தாசில்தார்களுக்கு ஏற்கனவே வழங்கபட்ட தனி ஊதியமான, 1,000 ரூபாயை மீண்டும் வழங்க வேண்டும்
* தாசில்தார் அலுவலகங்களில், இரவு நேர காவலரை நியமிக்க வேண்டும்
* அலுவலக உதவியாளர், 'ரிக்கார்டு' கிளார்க்குகளுக்கு, 400 ரூபாய் தர ஊதியம் வேண்டும்
* தேர்தல் பிரிவு தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
போராட்ட பாதிப்புகள்
* வாக்காளர் பட்டியல் மறு ஆய்வுப்பணி முடக்கம்
* தேர்தல் தொடர்பாக பொறுப்பு அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் ரத்து
* பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை வழங்கும் பணி முடக்கம்
* சான்றிதழ்கள் வழங்கும் பணி முடக்கம்
* இ - சேவை மையங்களில் பணிகள் பாதிப்பு.

ஜிலேபி, சிப்ஸ்' சாப்பிட மாணவர்களுக்கு தடை!: பாயசம், அல்வாவுக்கு அனுமதி

பள்ளி கேன்டீன்களில், 'ஜிலேபி, சிப்ஸ்' போன்ற உணவு பண்டங்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது; பாயசம், அல்வாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மத்திய மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகம் சார்பில், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகளில், கேன்டீன் உணவுப் பொருட்கள் மற்றும் மாணவர் உடல்நலன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பள்ளி கேன்டீன்களில், மாணவர் உடல்நலனுக்கு தீங்கான உணவுப் பொருட்கள் விற்கப்படுவதும், வீடுகளிலும் அதே போன்ற பொருட்களை, பெற்றோர் வாங்கித் தருவதும் ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் பள்ளிகளுக்கும், பெற்றோருக்கும், உணவுப் பொருள் குறித்த பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதன் விவரம்:

தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள்சிப்ஸ், உருளை கிழங்கு சிப்ஸ் போன்ற வறுத்த தின்பண்டங்கள், ரசகுல்லா, பேடா, குலாப் ஜாமூன், கலாகந்த், நுாடுல்ஸ், பிட்சா, பர்கர், டிக்கா அனைத்து வகை சூயிங்கம் மற்றும் 'கேன்டீஸ்' எனப்படும் இனிப்பு மிட்டாய்கள்.

சர்க்கரை, 30 சதவீதத்துக்கு மேல் சேர்க்கப்படும் ஜிலேபி, பூந்தி, இமார்தி, சாக்லேட் மற்றும் கருப்பு சாக்லேட், 'பேக்' செய்யப்பட்ட அனைத்து வகை மிட்டாய், குளிர்பானங்கள், கேக், பிஸ்கட், பன், பதப்படுத்திய ஜாம் மற்றும் ஜெல்லி வகைகளை பயன்படுத்தக் கூடாது.

பரிந்துரைக்கப்பட்டவை: காய்கறி சேர்த்த கோதுமை பரோட்டா, ரொட்டி, அரிசி சாதம், புலாவ், பருப்பு வகை, கோதுமை அல்வா, கறுப்பு பட்டாணி கடலை, கோதுமை உப்புமா, காய்கறி வகை கிச்சடி, பருப்பு சாதம், சாம்பார், இட்லி, வடை, கீர், பிர்னி, பாயசம் மற்றும் பால் வகை பானங்கள், காய்கறி உப்புமா, காய்கறி, 'சாண்ட்விச்' புளி சாதம் மற்றும் கூட்டு வகைகள்.

பக்கோடா, சமோசா, வடை போன்ற சத்தான வகையில் சுத்தமாக தயாரித்து, வாரம், ஒருநாள் மட்டும் பள்ளி கேன்டீனில் வழங்கலாம். மீன், கொழுப்பு குறைந்த இறைச்சி, முட்டை, தானிய உணவு வகைகள்; மேலும் சுத்தமான பழ ரசம் மாணவர்களுக்கு தரலாம். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

எப்படி தயாரிக்க வேண்டும்: மாணவர்களுக்கான உணவை, கொழுப்பற்ற சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெயில், அவ்வப்போது மாற்றி மாற்றி சமைக்க வேண்டும். ஒரே எண்ணெயில் சமைக்கக் கூடாது. நெய் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்வது மாணவர் உடல்நலனுக்கு நல்லது.

உடற்பயிற்சி அவசியம்:மாணவர்களை, முடிந்தவரை அவ்வப்போது நடக்க வைக்க வேண்டும். நீச்சல், கால்பந்து போன்ற விளையாட்டு, உடற்பயிற்சி, யோகா பயிற்சிகளில் ஈடுபட உற்சாகப்படுத்த வேண்டும். மாணவர்கள் சைக்கிள் ஓட்டவும், பள்ளிக்கு சைக்கிளில் வருவதற்கான பயிற்சி தரலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

வேலூரில் கணினி ஆசிரியர்கள் ஆர்பாட்டம்

10.1.2016 காலை 10.06 மணிக்கு, கலெக்டர் அலுவலகம் முன்பு.
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி  ஆர்ப்பாட்டம்

*தமிழக அரசு பள்ளிகளில், கணினி அறிவியல் பாடத்தை, 1ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கட்டாய பாடமாக கொண்டு வரவேண்டும்.

* சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடத்தை, நடப்பு கல்வி ஆண்டில் நடைமுறை படுத்த வேண்டும்.

* பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்பன உட்பட கோரிக்கைள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது..

 ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிள்
உறுப்பினர்கள் அனைவரும் வாரீர்....

 ஆசிரியர் சங்கங்கள் ,ஆசிரியர்கள் பொது மக்கள்,நண்பர்கள் அனைவரும் ஆதரவு தாரீர்...

CELL:
9500921987.

9585740001

மாநில துணை ஒருகிணைப்பாளர்
9940924923

நாடு முழுவதும் ஒரே விதமான பாட திட்டம்?

நாடு முழுவதும், ஆறு முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு, பள்ளிகளில் ஒரே விதமான பாடத்திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஏற்றத் தாழ்வுகள்: சுப்ரீம் கோர்ட்டில், வழக்கறிஞர் அஸ்வின் உபாத்யாயா என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனு விவரம்: நம் நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள, பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், பலவேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. குழந்தைகளின், சமூக,பொருளாதார நிலைக்கு ஏற்ப கல்வியும் மாறுபடுகிறது.
நாடு முழுவதும் ஒரே விதமான பாட திட்டம்? நம் நாட்டை, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக நாடு என கூறுவதற்கு, இப்போதுள்ள பள்ளி கல்வி பாட திட்ட முறை நிச்சயம் உதவாது.சமூகம், பொருளாதாரம், மதம், கலாசாரம் என, எந்தவகையிலும், குழந்தைகளிடம் வேறுபாடு இருக்கக் கூடாது என,அரசியல் சட்டத்தின், 21வது பிரிவில் கூறப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் கல்வி உரிமை சட்டமானது, குழந்தைகளுக்குஇலவசமாக கல்வி வழங்க வேண்டும் என்பதை மட்டுமின்றி, ஆறுமுதல், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, நாடு முழுவதும், ஒரேமாதிரியான பாட திட்டத்துடன் கூடிய கல்வியை வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. சமூக, பொருளாதார பாகுபாடு நீங்க வேண்டும் என்றால், ஒரேவிதமான பாடத் திட்டம் உடைய கல்வியை, நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். பின்லாந்து, டென்மார்க், நியூசிலாந்து, நார்வே, கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகளில், ஒரே மாதிரியான கல்வி முறை தான் அமலில் உள்ளது. உத்தரவிட வேண்டும்: அதுபோல, நம்நாட்டிலும், பள்ளிகளில் ஒரே மாதிரியானபாடத்திட்டத்தை அமல்படுத்தும்படி, மத்திய,மாநில அரசுகளுக்குஉத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.குளிர்கால விடுமுறை முடிந்து, சுப்ரீம் கோர்ட் மீண்டும் இந்தவாரத்தில் செயல்படத் துவங்கும். அப்போது, இந்த மனுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.